தாழி ஆணம் பொடிக்குழம்பு

தாழி ஆணம் பொடிக்குழம்பு இது மண்பானையில் வைப்பதால் இது தாழி ஆணம்னு சொல்வாங்க இதுகல்யாணத்துக்கே மண்பானையில்தான் வைப்பாங்க எத்தனை தேவையோ அத்தனை பானை வைப்பாங்க ஒரு பானைக்கு 10 கிலோ கறி மட்டுமே அளவு இது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செய்வார்கள் நான் செய்முறை வீட்டளவிற்கு தருகிறேன் பிடித்தவர்கள் செய்து பாருங்கள் தேவையான பொருட்கள்
கறி 1/2 கிலொ
மல்லி 100 கிராம்
அரிசி 25 கிராம்
மிளகு 1ஸ்பூன்
பூண்டு 100கிராம்
சின்ன வெங்காயம் 25 எண்ணிக்கை
மிளகாய்தூ1ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
நெய் ,நல்ல எண்ணைய் 50 மிலிகிராம்
வெந்தயம் 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன்
1/2கிலொ கறிக்கு
100 மல்லி வாசம் வர நன்கு வறுக்கனும் வறுத்து ஆரவைக்கவும்
மிளகு 1 ஸ்பூன் சட சடவென பொரியும் வரை நன்கு வறுக்கவும்
புழுங்கல் அரிசி25 கிராம் நன்கு பொரிய வறுக்கவும்
மிளகும் அரிசியும் ஒன்றாக மிக்சியில் மிகவும் நைஸாக பொடிக்கவும்
அதேபோல் வறுத்த மல்லியையும் மிகவும் நைசாக பொடிக்கவும்

அடுப்பில் வெறும் குக்கரிலோ பாத்திரத்திலோ வெந்தயம் 1 ஸ்பூன் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும் கருகிவிடாமல்
பிறகு அதில் நெய் 1 ச்ஸ்பூனும் நல்ல எண்ணைய் 3அல்லது 4 ஸ்பூன் கொஞ்சம் அதிகமாகவே ஊத்தலாம்
எண்ணைகாயவும் சீரகம் சிரிய வெங்காயம் 25 நறுக்கி போட்டு வ்தக்கவும் அதனுடன் கறியும் சேர்த்து மூடிவைத்து வதக்கவும்
பாதிவதங்கும் போது மஞ்சள்தூள் தேவையான உப்பு சேர்த்து அதன் தண்ணீர் வற்றியவுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
வெந்தவுடன் மிளகாய்தூள் அரிசி மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்
குழம்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
தேவையானால் உருளைகிழங்கு சேர்கலாம்
பிறகு மல்லி பொடியுடன் வெள்ளைபூண்டை வைத்து ஒன்ர்றிரன்டாக தட்டிவைத்துக்கொண்டு குழம்பின்மேலாக தூவி கிண்டிவிட்டு மூடி ஒருசில நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்

நீங்களும் குறிப்பு கொடுங்களேன் கூட்டாஞ்சோறில் இணைந்து..இந்த த்ரெட் சில நாட்கள் தான் பிறகு மறைந்து விடும்..சிறப்பு உணவு என்பதால் கண்டிப்பா குறிப்பா கொடுங்க பின்னாளில் உபயோகமா இருக்கும்

என்னக்கா சமையல்லாம் கலை கட்டுது நல்லா வித்தியாசமா இருக்கே நான் இப்படி கேள்வி பட்டதுகூட இல்லை
ஆணா...............தளிகா சொல்றது போல் இந்த பதிவு காணாமல் போய்டும் கூட்டாஞ்சோரில் இனையிங்கக்கா வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

chickenல் செய்யலமா?

இந்த ரெசிபி தாழிச்சா என்ற பெயரில் என்று இப்பகுதியில் rained surround அழைக்கப்படுகிறது

மேலும் சில பதிவுகள்