4 மாத குறை பிரசவ குழந்தைக்கு சளி இருமல்..

5 வருடத்திற்கு பிறகு 8 மாத முடிவிலேயே நீர் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்து பிறந்தவன் என் மகன். 4 மாதம் ஆகிறது. சளி மூக்கில் வந்து அடைத்து கொள்கிறது. தொண்டையிலும் அடைத்து கொள்கிறது. டாக்டரிடம் காட்டி ட்ராப்ஸ் கொடுத்து கொண்டு இருக்கிறேன். மூச்சு திணறுகிறான்.. பால் குடிக்க திணறுகிறான். குடித்தாலும் கக்கி விடுகிறான். மூக்குக்கு ட்ராப்ஸ்ம் போட்டு கொண்டு தான் இருக்கிறேன்.. ஆனாலும் சரி ஆகவில்லை.. ரொம்ப கவலையாக இருக்கிறது.. ப்ளீஸ் தோழிகளே உதவுங்கள். 10 நாட்களாக கவலையால் நொந்து போகிறேன்... சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே..

யாருமே இல்லையா தோழிகளே உதவுங்கள் ப்ளீஸ்

ட்ராப்ஸ் விட்ட பிறகு நாசல் ஆஸ்பிரேடர் கொண்டு சளியை இழுத்து எடுத்து விடுங்க..மடியில்குப்புற படுக்க போட்டு குழந்தையில் முதுகில் கைய்யை குவித்து வைத்து லேசாக தட்டி தட்டி கொடுத்தாலும் சளி இளகி தொண்டையில் வந்து விடும்..

இப்போ நாழு மாத குழந்தக்கு மருந்து என்ன சொல்ரது சொல்லுங்க விடிய காலையில் குழந்தையே மடியில் குப்புர போட்டு உங்க கையே பொத்துன மாதிரி வய்த்து ஒரு 20நிமிடம் முதுகில் தட்டுங்க தினமும் இப்படி செய்ங்க வாயில் சலி வரும் நீங்க பாக்கலாம்
இது என் அனுபவம் என் அக்கா சொன்னது நான் நெட்டில் அலசி பார்த்ததில் எனக்கு கிடைத்தை கீழே குடுத்து இருக்கேன் பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

குழந்தைகளுக்கு சீனி சேர்ப்பதால் அடிக்கடி சளி இருமல் தொந்தரவு ஏற்படும் சீனிக்கு பதில் கற்கண்டை திரித்துவைத்து அதை சேர்த்துக்கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
. வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
. குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
. வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
. கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வேப்ப எண்ணைய்
சாதாரண சளி காய்ச்சல் கணை இது மூன்றுக்கும் கை கண்ட மருந்து வேப்ப என்ணைய் தான்
வேப்ப எண்ணையுடன் ஒன்ரிரண்டு வெள்ளைபூண்டும் சிரிது மிளகும் தட்டிப்போட்டு லேசாக சுட வைத்து வயிற்றைத்தவிர உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை தடவி விடவும்
காச்சல் அரை மணி நேரத்தில் மாறிவிடும் சளி மலத்துடன் வெளியேரும்
எண்ணைய்தேய்த்தவுடன் சிரிது நேரத்தில் நன்கு வேர்க்கும் பிறகு காச்சல் விடும் மூன்று நாள் வரை தடவலாம் காலை மாலை தேய்க்கவும் சாதாரண சளீகாய்ச்சல் சரியாகிவிடும்
நாங்கள் டாக்டரிடம் போனதில்லை அத்ற்கும் பிறகு காய்ச்சல் இருந்தால் அது மற்றகாரணத்தினால் ஏற்பட்டிருக்கும் டாக்டரிடம் காட்டலாம்
சாதாரண சளீகாய்ச்சலுக்கு வேப்ப எண்ணையே போதுமானது சளியும் மோஷன் போகும் போது சளி வெளியேறிவிடும் பயமே இல்லை
வெளியேதான் தடவப்போறோம் உள்ளுக்கு கொடுக்கலை அதனால் பயம் வேண்டாம்
உடம்புக்கும் உறுதி கணை இழுப்பு வீசிங்குக்கு நல்ல மருத்துவம் அந்தகாலத்தின் பாட்டி வைத்தியம் இன்றும் கிராமத்தில் கடை பிடிக்கும் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக தடவலாம்
என்ன நாற்றத்தைச்சகிச்சுக்கனும் செலவில்லாத சைட் எபெக்ட் இல்லாத கை வைத்தியம் நோயும் தீரும்

பதில் அளித்த உள்ளங்களுக்கு நன்றி. ஜுரம் இல்லப்பா. சளி இருமல் தான். வேப்ப எண்ணெய் தடவலாமா? தம்பி குறை பிரசவம் என்பதால் தான் பயமா இருக்கு.

நாசல் ஆஸ்பிரேடர் என்றால் என்னப்பா ? எப்படி பயன்படுத்தனும் அதை?

வேப்ப எண்ணை பிள்ளை வளர்க்கும்னுதான் என் மாமியார் சொல்வாங்க குழந்தை எத்தனை கிலோ மிகவும் ஒல்லியாக பல கீனமாக இருப்பானா வயதிர்கேத்தவளர்ச்சி இருக்கா

http://www.arusuvai.com/tamil/node/1754

இந்த லிங்கில் பிரபாசிவா குழந்தைக்கு கொடுத்துள்ளதையும் ட்ரை பண்ணி பாருங்களேன்

அது மூக்கை க்லீன் பண்ண கிடைக்கும் சிறிய பம்ப்.நாம்ப பேனாவில் இன்க் போட ஃபில்லர் வாங்குவோமே அது போல் மேலே ரப்பரால் ஆன பம்ப் இருக்கும்..உள்ளே சலைன் விட்டு சளி இளகினதும் இதனை கொண்டு உரிஞ்சு எடுத்து விடலாம்..ஏன்னா குழந்தைக்கு மூக்கை சிந்த தெரியாது ஆனால் பார்த்து பொறுமையாக எடுக்க வேண்டும்..எங்கள் ஊரில் சின்ன குழந்தைகளுக்கு லேசாக(வெதுவெதுப்பாக) சூடுபடுத்திய தேங்காய் எண்ணையை ஒவ்வொரு சொட்டு மூக்கில் விடுவோம்..அடுத்த நிமிடமே தும்மி தும்மி சளியெல்லாம் வெளியே வந்துடும்..என் மகனுக்கு அப்படி தான் செய்தேன்.ஆனால் ரொம்ப சூடுபடுத்திடாதீன்க சும்மா லேசா

நல்ல ஐடியா தளிகா தாங்க்ஸ்ப்பா

மேலும் சில பதிவுகள்