ear wax removal

குழந்தைகளுக்கு காதில் வேக்ஸ் சேர்ந்தால் அதை எடுப்பார்களே அது வலிக்குமா?ஈ என் டி யிடம் தான் போவேன் வலிக்குமா இல்ல கொஞ்சம் அசவுகரியம் மட்டும் தானா?என் அறிவில் முன்பு காதில் சுடுநீர் விட்டு கழுவி வலி உயிர் போகுமென்றெல்லாம் பேய் கதை காட்டியிருக்கிறார்கள்..இப்ப அப்படியில்லை என்று நினைக்கிறேன்..உங்கள் குழந்தைக்கு இப்படி வேக்ஸ் ரிமூவல் செய்டிருந்தால் அனுபவத்தை சொல்லவும் ப்லீஸ்

தளிகா,

எனக்கு சிறு வயதில் இந்த அனுபவம்(கள்) இருக்கு..
நானும் முதன் முதலில் எடுக்க சென்ற போது equipment பார்த்தே பயந்து வெளியே ஓடி வந்துவிட்டேன்.
அப்புறம் டாக்டர் எக்ஸ்ப்ளைன் பண்ணாங்க.

முதலில் earwax என்றால் cerumen என்று சொல்வாங்க..இயல்பாகவே நம் காதுகளில் சுரக்கும்,கிருமி தாக்காமல் இருக்க இது சுரக்கிறது.சில பேருக்கு ஈர தன்மையா இருக்கும்,சில பேருக்கு அப்படியே காய்ந்து இருக்கும்.இப்படி காய்ந்து இருந்தால் தான் கொஞ்சம் கவனமா ட்ரீட் செய்யணும்.

எடுத்தவுடன் எடுத்து விட மாட்டாங்க.முதலில் காதின் தன்மை,செருமன் அளவு பார்த்து softener drops தந்தாங்க.நல்ல lubricate ஆனதும் மூன்று நாள் கழித்து ஹாட் வாட்டர் syringe ட்ரீட்மென்ட் தான் தந்தாங்க.
மைல்ட் ஹாட் வாட்டர் தான் போடுவாங்க.அதனால் பயப்பட வேண்டாம்.
வலிக்கவே வலிக்காது.அப்படியே வலித்தால் உள்ளே கட்டி அல்லது infection இருக்கும்.

இது என் தம்பிக்கு ஏற்பட்டு இருக்கு.
முதலில் earwax க்கு தான் போனோம்.அப்புறம் அவருக்கு வலி இருந்தது அப்புறம் டெஸ்ட் செய்கையில் சிறு கட்டி இருந்தது.அப்புறம் மருந்து,ட்ரீட்மென்ட் எடுத்தும் சரியாகிடுச்சு.

சில பேர் wax hook கொண்டும் பண்ணுவாங்க..ஆனால் அது கொஞ்சம் வலிக்கும்னு நினைக்கிறேன்.

ட்ரீட்மென்ட் முடிந்ததும் chewing gum சாப்பிட சொன்னாங்க.அதுவே வலிக்கும்,எங்கேயாச்சும் ஒட்டி இருந்த துணுக்கும் வந்துவிடும் டெக்னிக்.எல்லாமே வெளியே வந்து கிளியராக இருக்கணும் இது தான் அவசியமாக நோட்டீஸ் பண்ணனும்.

என்றும் அன்புடன்,
கவிதா

என் குழந்தைகளுக்கு இது வரையில் எடுத்தது இல்லை. ஆனால் எனக்கு எடுத்த அனுபவம் இருக்கு. சிறுவயதில் ஒரு முறை....அப்போ நான் எதுக்கு தான் அப்படி அழுதேன் என்று நினைவே இல்லை. இருந்தாலும் இப்போ நினைத்து பார்த்தால் சிரிப்பாக தான் வருது. வலி ஒன்றும் அப்படி பெரியதாய் இருந்ததை நினைவே இல்லை.

எப்பொழுதுமே நாமாக வீட்டில் குச்சி விடுவது, ஹேர்பின் விடுவது எல்லாமே ஆபத்து தான். மருத்துவர்கள் பட்ஸ் போடுவதற்கு சில நேரங்களில் ஒத்துக் கொள்ளவதில்லை. ஏனென்றால் நான் காதுகளில் ஏற்ப்படும் வாக்ஸ் தானாகவே வெளியேறும். அப்படி வெளியேறும் போது தான் நமக்கு வெளியில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது நாம் அதை எடுத்து விடுகிறோம் பேர்வழி என்று பட்ஸ் போட்டு மேலும் உள்ளே தள்ளி விடுகிறோம். நாம் சவைத்து சாப்பிடும் போது அதுவாகவே தன்னாலே வெளியே வரும். கூடியமானவரை குளித்தபிறகு பட்ஸ்gkgஇங்கு வந்த பின்னர் நான் வீட்டிலே எடுப்பதற்கென்று ஒரு கிட் வாங்கி வந்தேன். ரொம்பவே ஈசியாக இருந்தது. காது வலி கடுமையாக இருந்த பொது தான் உபயோகித்தேன். குழந்தைகளுக்கேன்றால் நாம் ஒன்றுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே வந்து விடும். இல்லையென்றால் மருத்துவர்கள் இலகுவாக எடுத்து விடுவார்கள். ஒரு முறை என் குழந்தைகளுக்கு இயர் இன்பெக்ஷன் இருந்த போது காதை செக் பண்ணி படுக்க வைத்து இருந்த கொஞ்சம் வாக்சை அழகாக குறிப்பாக வலிக்காமல் எடுத்து விட்டார்கள். படுக்க வைத்தவுடன் குழந்தைகள் தான் என்னமோ ஏதோ என்று பயப்படுவார்கள். மற்ற படி ஒன்றும் பயப்பட தேவையில்லை.

ஆங்கிலத்தில் தலைப்பிருந்ததால் நான் கூட யாரோ தான் என்று திறந்து கூட பார்க்கவில்லை. என் மேலேயும் நம்பிக்கை வைத்து கூப்பிட்டதற்கு மிக்க நன்றி. (எதாவது உபயோகப்ப்படும்படியாக சொன்னேனா? இல்லையென்றால் அப்படியே டீல்ல விட்டுடுங்க ;))

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காதில் உள்ள கசடு தானாகவே வெளியேறும் தன்மையில்தான் இறைவன் படைத்திருக்கிறான்குளிக்கும் போது ஈரம் பட்டு பட்டு கசிந்து வெளியேறிவிடும் வேண்டுமானால் ஒரு நைசான துணியால் வெளியே கசிந்துள்ளதை விரலால்துடைத்து விடலாம் அதல்லாமல் பட்ஸ் வைத்து எடுத்தீர்களானால் நாளடைவில் பட்ஸினால் உள் ஈரம் உரிஞ்சப்பட்டு காய்ந்து உருண்டையாக அழுக்கு உள்ளுக்குள்ளேயே சேர்ந்து விடும் வெளியே வராது அப்புரம் டாக்டரிடம்தான் போய் எடுக்கனும் பட்ஸ் வைத்து வருஷத்திர்கொரொமுறை இருமுறை எடுக்கலாம் மற்றபடி வாரத்திர்கொருமுறை இருமுறை குளித்தவுடன் வெளியே துணியினால் துடைத்தாலே போதுமானது

ஹாய் கவிதா.ரொம்ப விளக்கமா சொல்லிட்டீங்க இப்ப கொஞ்சம் சமாதானமா இருக்கு.வலிக்குமா வலிக்காதாம்னு காரணத்தோட விளக்கிட்டீங்க இது எனக்கு புது தகவல் நானும் வலிக்கும் என்றே நினைத்திருந்தேன்.இப்ப தெளிவா இருக்கேன் கவிதா

என் மகளுக்கு தான் இது...அவளுக்கு எதுவானாலும் சரி முன்னயே விளக்கி விடனும் பொய் சொன்னேன்னா கண்டிப்பா ஒத்துழைக்க மாட்டா..வலிக்கும்னா வலிக்கும் இல்லன்னா இல்லைன்னு முன்னயே சொல்லி கூட்டிட்டு போனேன்னா எனக்காக பேசாம இருந்துக்குவா வலிக்காதுன்னு போயிட்டு வலிச்சுதுன்னா போச்சு கலவரம் தான்.
எனக்கு தெரிந்து அவ காதை நானா இதுவரை க்லீன் பண்ணினதே இல்லை..குளித்ததும் காது வெளியில் டிஷ்யூவால் துடைப்பதோடு சரி.போன தடவையே டாக்டர் சொன்னார் வேக்ஸ் நிறைய இருக்கு என்று நான் தான் இயற்கையாக வருமொன்றை எடுப்பதேன்னு இருந்துட்டேன்...நானும் சமாதானப்படுத்தி கூட்டிப் போய் எடுத்துடலாம்னு இருக்கேன்.
நானும் தமிழ்ல தலைப்பை யோசிச்சேன் சொதப்பிடுமோ ஏன் பலபேர் சாபத்தை வாங்குவேன்னு இங்லீஷில் போட்டுட்டேன்;-)

பசரியா ஆண்ட்டி

என் மகளுக்கு போனமுறை அதை நீக்க சொன்னாங்க நானும் கேக்கலை..இப்போ இருமலோ இருமல் காதில் வேக்ஸ் படிந்தால் இருமல் வருமாம்.மட்டுமல்ல காது கேட்பதிலும் குறைபாடு இருக்குமாம்..உனக்கு சரியா காது கேக்குதான்னு கேட்டேன் என்னகு பயமுறுத்துற மாதிரியே "இல்லை கேட்கிறதில்லை"ன்னு சொல்லிட்டா..ஆனால் சாக்கலேட் நு தூக்கத்துல கிசுகிசுத்தா கூட நல்லாவே கேக்குறது சந்தோஷம் தான்..
எப்படியும் ஈ என் டி யிடம் போய் எடுத்துடனும்னு இருக்கேன்.குழந்தைங்க பொதுவா இம்மாதிரி விஷயங்களுக்கு பயப்படுவாங்க அதான் தெளிவாகிடலாம்னு பதிவு

இதை மருத்துவரிடம் போய் ஒரு முறை எடுப்பது நல்லது தான். எனக்கு இது போல் ஆனது இல்லை... ஆனால் என் தங்கைக்கு ஆனது உண்டு. காதில் வெளியே வரை அடைத்து இருப்பது பொல் தெரியவே அழைத்து போனாங்க. 10வது படிக்கும் போது எடுத்தோம்... வலி ஏதும் இல்லை என்றே சொன்னால். எடுத்ததும் சும்மா கூப்பிட்டா கூட “ஏன் கத்தறீங்க??”னு காதை மூடிக்குவா... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா உங்களுக்கு பேஸ் புக்கில் லிங்க் அனுப்பி இருக்கேன் 3 லிங்க் காது பிறச்சனைக்காக உள்ள லிங்க் பயன் படுமா பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்