சாதாரண சளி காய்ச்சல்,,..... வேப்ப எண்ணைய்

வேப்ப எண்ணைய்
சாதாரண சளி காய்ச்சல் கணை இது மூன்றுக்கும் கை கண்ட மருந்து வேப்ப என்ணைய்தான்
வேப்ப எண்ணையுடன் ஒன்ரிரண்டு வெள்ளைபூண்டும் சிரிது மிளகும் தட்டிப்போட்டு லேசாக சுட வைத்து வயிற்றைத்தவிர உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை தடவி விடவும்
காச்சல் அரை மணி நேரத்தில் மாறிவிடும் சளி மலத்துடன் வெளியேரும் எண்ணைய்தேய்த்தவுடன் சிரிது நேரத்தில் நன்கு வேர்க்கும் பிறகு காச்சல் விடும் மூன்று நாள் வரை தடவலாம் காலை மாலை தேய்க்கவும் சாதாரண சளீகாய்ச்சல் சரியாகிவிடும்
நாங்கள் டாக்டரிடம் போனதில்லை அத்ற்கும் பிறகு காய்ச்சல் இருந்தால் அது மற்றகாரணத்தினால் ஏற்பட்டிருக்கும் டாக்டரிடம் காட்டலாம்
சாதாரண சளீகாய்ச்சலுக்கு வேப்ப எண்ணையே போதுமானது சளியும் மோஷன் போகும் போது சளி வெளியேறிவிடும் பயமே இல்லை
வெளியேதான் தடவப்போறோம் உள்ளுக்கு கொடுக்கலை அதனால் பயம் வேண்டாம்
உடம்புக்கும் உறுதி கணை இழுப்பு வீசிங்குக்கு நல்ல மருத்துவம் அந்தகாலத்தின் பாட்டி வைத்தியம் இன்றும் கிராமத்தில் கடை பிடிக்கும் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக தடவலாம்
என்ன நாற்றத்தைச்சகிச்சுக்கனும் செலவில்லாத சைட் எபெக்ட் இல்லாத கை வைத்தியம் நோயும் தீரும்

ஆஹா இது நல்லாயிருக்கே ராபியா!;) எப்பவுமே உள்ளுக்கு கொடுக்கிற கைவைத்தியம் மகனுக்கு காட்டறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஓடியே போயிடுவான்...கடைசில சிரப்தான் கொடுப்பேன்..இப்பகூட அவனுக்கு சளிபிடிச்சுதான் இருக்கு..கிளைமேட் மாறதுனால, இன்னிக்கே நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாக்கறேன். வீட்டில வேப்பெண்ணையும் இருக்கு. எப்படியோ கசக்கிற வேப்பெண்ணை எங்களுக்கு இனிப்பாயிடுச்சு;-)

Don't Worry Be Happy.

பசரியாக்கா இது ரெம்ப உபயோகமான தகவலா இருக்கு
வேப்ப எண்னை குளுர்ச்சி இல்லையா
நானும் செய்து பாக்கனும் என் மகனுக்கு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வேப்ப எண்ணை சளி க்கு கணைக்கு காச்சலுக்கு தடவுனவுடன் உடம்பு சூடா இருக்கும் அந்த சூடு நோய் எதிர்ப்புசக்திக்கு காரணமான வெள்ளை அணுக்கள் இயற்கையாக உற்பத்தி செய்ய ஏதுவாகும் உடன் வேர்க்கும் காச்சலும் மாறும் சளியும் மாறும்
எங்கள் வீடுகளில் சளி காய்ச்சல் மட்டுமல்ல கை கால் வலிக்கு கூட தடவு வாங்க
ஜெயலஷ்மிவேப்ப எண்ணை தடவுனீங்களா மாற்றம் தெரிஞ்சுதா

ரொம்ப நல்ல தகவல்.... பாட்டி வைத்தியம் பலருக்கு இந்த காலத்தில்
தெரிவதில்லை.... வைத்தியத்தை விளக்கமாக சொல்லி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....

ரொம்ப நல்ல குறிப்பு, ஆனால் உச்சந்தலையில் தடவிட்டு அப்படியே விடலாமா? காய்ச்சல் போது தலைக்கும் குளிக்கக் கூடாது இல்லை, மேலும் ஏன் வயிற்றில் தடவக்கூடாது?

நலமா ?

எனக்கு வீசிங் இருக்குபா. அதனால என் பாப்பக்கும் (1 1/2 வயது) இருக்கு. அவ கஷ்டபடுறத பாக்குறதே கொடுமை எனக்கு. ரொம்ப நல்ல குறிப்பு தந்து இருக்கீங்க. ரொம்ப நன்றி பா.

சளிக்கு மட்டும் கூட இது மாதிரி பண்ணலாமா ? அல்லது சளி, காய்ச்சல், வீசிங் எல்லாம் இருந்தாதான் இது தரணுமா ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

இந்த எண்ணைக்கு பெயர் கணை எண்ணெய்ன்னு சொல்வாங்க. எவ்வளவு காய்ச்சல் அதிகமா இருந்தாலும் இந்த எண்ணெய் குறைக்கும். வேம்பு, துளசி, ஆடாதொடை இலை இது மூன்றையும் தண்ணீர் உற்றி காய்ச்சி, பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை அல்லது மாதத்தில் ஒரு தடவை கொடுத்து வந்தாலும் சளி தொல்லை இருக்காது.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

மேலும் சில பதிவுகள்