Hollowen fancy dress competition

ஹாய் தோழிகளே ,என் பொண்ணுக்கு அடுத்த வாரம்(சன்டே) ஹாலோவீன் (Hollowen) Fancy dress competition வருது.ஏதாவது ஐடியா குடுங்களேன்.எனக்கு ஐடியாவே இல்லைங்க.தினமும் என்னிடம் வந்து கேட்கிறாள்.என்ன பன்ன வென்றே தெரியலிங்க.ஒரே டென்சன்.எனக்கு ஏதாவது ஐடியா குடுங்களேன்.please.Googleலிலும் தேடிபாத்துட்டேன்.ஒரு வாரம் தான் இருக்கு.இப்போ உங்களிடம் கேட்கிறேன்.தயவு செய்துசிக்கிரமா ஏதாவது சொல்லி தாங்களேன் please.
என்றும் அன்புடன்
மனோரஞிதா.

ஹாலோவீனுக்கு பொதுவாக ட்ராகுலா, விச், மேஜிஷியன் இப்படியான காஸ்டுயூம் தான் சூஸ் பண்ணுவார்கள். போ பீப், பிரின்சஸ், நைட் (Knight), பட்டாம்பூச்சி, சீட்டா (cheetah), சிங்கம், புலி, முயல் குட்டி (bunny), நாய் குட்டி (puppy), யாராவது தலைவர்கள், உலக அழகிகள், லேடி பக் (Lady bug) மாதிரியாகவும் போடலாம். இன்னமும் தெரிந்தால் வருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பெண் குழந்தைகளுக்கு மினி(mini mouse),டோரா(Dora),ஏஞ்சல்(little angel),பேட் கேர்ள்(Bat Girl),பம்பிள் பீ(Bumble Bee),ஜெசி(Jessie in Toy Story),சூப்பர் கேர்ள்,சின்ட்ரெல்லா,டின்கர் பெல்(Tinker Bell), இப்படியெல்லாம் ட்ரெஸ் பண்ணலாம்.

இந்த ட்ரெஸ்கள் டிஸ்னி ஸ்டோர்களில் கிடைக்கும். நீங்க வசிக்கும் பகுதியில் பார்ட்டி சிட்டி(Party city) இருந்தால் பாருங்க.அங்கும் கிடைக்கும்.ஆன் லைனிலும் ஆர்டர் பண்ணலாம்.

இங்கு டாலர் ஷாப்பிலேயே எல்லாப் பொருட்களும் கிடைக்கிறது. துணி வாங்கித் தைப்பதைவிட மலிவாகவும் இருக்கிறது. அங்கும் இதுபோல் கடை இருக்கும் இல்லையா? பேய்ப் பல்லு, செயற்கை ரத்தம், நகம், துடைப்பம், தொப்பி என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.

இல்லாவிட்டால் பார்ட்டி ஷாப்பில் போய்ப் பாருங்க. மகளையும் கூட்டிப் போய்ப் பாருங்க. அங்கே இருக்கும் பொருட்களைப் பார்க்க தன்னாலேயே ஐடியா வரும்.

‍- இமா க்றிஸ்

லாவண்யா,ஹார்ஷா,இமா உங்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றி.அதிகமான ஐடியாஸ் கொடுத்திருக்கிங்க.ரொம்ப நன்றிங்க.ஆனா இங்க எல்லா குழந்தைகளும் நீங்க சொன்ன மாதிரியான ஆடைகள்(Jessi in toy story,cow girl,priness ....)தானே போட்டு கொண்டு வருவார்கள் .நான் வித்தியாசமாக, கடையில் போய் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யலான்னு யோசிக்கிறேன்.போன வருடம் சன் ப்ளவர் வேடம் போட்டு கொண்டு போனாள்.prize கிடைத்தது.இங்கு கடையில் வாங்குவதைவிட வீட்ட்டில் செய்வதை தான் விரும்டுகிறார்கள்.அதற்காக துணியெடுத்து தைத்து பன்னுவதும் இந்த நாட்டில் முடியாது .ஏதாவது வீட்டில் செய்வது மாதிரி ஐடியாஸ்குடுங்களேன்.வீட்டிலே செய்வது தானே ம்ற்ற குழந்தைகளிடம் இருந்துவித்தியாசமாக காட்ட முடியும்.அது மாதிரி தான் நானும் எதிர் பார்க்கிறேன.please help meeee.
என்றும் அன்புடன்
மனோரஞிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

இமா மேடம் ,நானும் காலையில இருந்து அப்பப்ப வந்து பாத்துட்டே இருந்தேன் யாராவது பதில் போடுவாங்கன்னு.பதிலே இல்லை.இமா மேடம் நீங்களாவாது வந்து பதில் போடுங்க.please please.
என்றும் அன்புடன்
மனோரஞிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

நான் ஒரு ஐடியா சொல்லட்டா...............

ஜாப்பனீஸ் ட்ரஸ்
ஒரு ஃபுல் மேக்சில கலர் கலர் பேப்பர் அல்லது வேஸ்ட் நியூஸ் பேப்பர்ல சின்ன சின்னதா விசிறி செஞ்சு ட்ரஸ் பூரா கீழே இருந்து மேல வரை வரிசையா ஸ்டாபளர் பண்ணிடுங்க. உங்க விருப்பப்படி பிங்க் ஒரு லைன்ல கிரீன் ஒரு லைன்ல அல்லது ஸிக்ஸாக்காவும் வைத்து அதாவது ஒரு பிங்க் ஒரு கிரீன் ஒரு பிங்க் ஒரு கிரீன்னு கீழ் வரிசையும் அதற்கு மேல் வரிசையில் ஒரு கிரீன் ஒரு பிங்க்னு ஆரம்பிச்சு ஃபுல் ட்ரஸ்ஸும் முடிக்கலாம்.

இதுக்கு ஏத்த மாதிரி ஐ மேக்கப் ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்.

ஐடியா சொல்றேங்கற பேர்ல எதாவது சொதப்பியிருந்தா மன்னிச்சிருங்க ப்ளீஸ்;-)

Don't Worry Be Happy.

உங்களுக்காக பதில் கூறிய நாங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்தில இருக்கிறோம் அதுவும் இல்லாமல் உங்களுக்கும் எங்களுக்கும் நேர வித்தியாசமும் கூட இருக்கு. அதனால் தான் நீங்கள் கேட்டவுடன் பதில் கூற முடியவில்லை. அதுவும் இல்லாமல் இந்தியாவில் எல்லாம் இந்த ஹாலோவீன் அவ்வளவு பிரசித்தம் கிடையாது. (சொல்லப் போனால் நான் இந்தியாவில் இருந்தவரையில் இது பற்றி எனக்கு தெரியவே தெரியாது). அயர்லாந்தில் தான் இது மிகவும் பிரசித்தம்.

நீங்கள் வீட்டிலே செய்யலாம் என்று சுலபமாகவும் அழகாகவும் செய்ய கூடியது (என் சிறு மூளைக்கு எட்டியது) பட்டாம்பூச்சி. நீங்கள் குழந்தைக்கு முழுக்கை சட்டை மற்றும் லேக்கிங்க்ஸ் போட்டு விட்டுட்டு கடையில் கிடைக்கும் ஏஞ்சல் விங்க்ஸ் வாங்கி அதில் பட்டாம்பூச்சி இறக்கைகள் மாதிரி பெயிண்ட் செய்து மாட்டி விட்டு அனுப்பலாம். ஸ்ட்ராபெர்ரி மாதிரி டிரஸ் பண்ணி அனுப்ப முடியுமா என்றும் பாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஜெயலெட்சுமி ,நீங்க சொன்ன ஐடியா ரொம்ப நல்லா இருக்கு.அப்படியே இமேஜின் பன்னிபாத்திட்டிருக்கேன்.நீங்க மன்னிப்புன்னு பெரிய பெரிய வார்த்தையை சொன்ரிங்களே.ஐடியா சூப்பர்ங்க.ரொம்ப நன்றிங்க.மனதில் வைத்து கொள்கிறேன்.
மீண்டும் நன்றி ஜெயலெட்சுமி
என்றும் அன்புடன்
மனோரஞிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

லாவண்யா கோவப்பட்டுடிங்களா?சாரிங்க.ஐடியா யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சது தான் மிச்சமா,நீங்க சொன்ன ஐடியாவாஇ நான் ஆல்ரெடி பன்னிட்டேனே போனவருடம் ஹாலோவீனுக்கு பன்னிவிட்டேன்.இன்னும் ஒரு வாரம் டைம் இருக்குல்ல.
அப்புறம் நீங்க இப்பொஅயர்லாண்டிலா இருக்கீங்க?உங்க பெயர் ரொம்பபப அழகு.
என்றும் அன்புடன்
மனோரஞிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மனோரஞ்சிதா,

நீங்களே வீட்டில் செய்யவதென்றால், லாவண்யா சொன்ன மாதிரி பட்டாம்பூச்சி நல்ல ஐடியா! க்யூட்டான காஸ்டியூமாவும் இருக்கும்! :)
அதேப்போல, கூகிளில், 'ஹௌவ் டு மேக் பிக் பேர்ட் (Big bird)' என்று தட்டி முதலில் வரும் லிங்க்கை பாருங்கள். இந்த லிங்க் தந்த ஐடியாவை வைத்துதான், நான் போன வருஷம் என் பையனுக்கு அவன் ஸ்கூல் ட்ராமாவிற்கு ஒரு பறவை காஸ்டியூம் தயார் செய்தேன்.(நான் எல்லாம் ப்ரவுன் ஷேட்டில் வருமாறு செய்தேன்!) ரொம்ப நல்லாவே வந்தது!

அதேப்போல நீங்க நெட்டில் தேடினால், நிறைய நல்ல நல்ல‌ ஐடியாஸ் கிடைக்கும். எனக்கு ஒருமுறை, க்ரேப்ஸ் (bunch of grapes) உடை தயாரிக்கும் முறையை படித்த நியாபகம் இருக்கு! ரொம்ப ஈஸியா, கொஞ்சம் பர்ப்பிள் கலர் பலூன்ஸ், மற்றும் பர்ப்பிள் கலர் டைட்ஸ் & ஸ்வெட் ஷர்ட் வைத்தே நன்கு சொல்லியிருந்தாங்க. இது உங்களுக்கு செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதே சமயம் சின்ன குழந்தைக்கு போட்டா பார்க்க க்யூட்டாவும் இருக்கும்! இதெல்லாம் என்னோட யோசனைகள்தான். நீங்க, கொஞ்சம் கூகுள் பண்ணினிங்கன்னா கட்டாயம் நிறைய கிடைக்கும், கண்டிப்பா எதாச்சும் நல்லா க்ளிக் ஆகும்! :) குட் லக்!

லாவண்யா,
சேம் பின்ச்! எனக்கும் இங்க‌ வந்தபிறகுதான் ஹாலோவீன் பற்றி தெரியும்! :)

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்