குழந்தைக்கு மலம் போகவில்லை

அறுசுவை உறுப்பினர்களுக்கு என் வணக்கம்,
எனது ஐந்து மாத ஆண் குழந்தை கடந்த மூன்று நாட்களாக சிறிது கூட மலம் கழிக்கவில்லை.

ஆயுத பூஜை அன்று அம்மா வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது பசும்பால் இரண்டு சங்கடை அளவு கொடுத்தோம். அதனால் மலம் போகவில்லையோ என்று ஒரு சந்தேகம்.

இரண்டு நாட்களாக அம்மாவின் ஆலோசனையின் படி புளியின் நாரை விளக்கெண்ணெயில் நனைத்து மலம் போகும் இடத்தில் வைத்தோம். அப்போதும் இதுவரை மலம் போகவில்லை.

மேலும் மனைவியை "நான்கு பூ வாழை பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு மலம் போகும்" என்றார்கள். ஆனாலும் பலன் இல்லை.

நேற்று மதியம் முதல் இரவு பத்து மணி வரை வழக்கத்திற்கு மாறாக அழுததால் மீண்டும் புளியின் நாரை விளக்கெண்ணெயில் நனைத்து மலம் போகும் இடத்தில் வைத்தோம்.அப்போதும் மலம் போகவில்லை.
இப்போது எப்போதும் போல் விளையாடுகின்றான்.

சிறுநீர் நன்றாக போகிறான்.

எப்போதும் போல் தாய்பால் கொடுத்து வருகிறோம். அவனும் நன்றாக குடிக்கின்றான். அதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

இன்று நான்காவது நாள். உடனடி ஆலோசனை தேவை...
with regards
BHARANI

வெண்ணீரில் ஜீனி போட்டு கொடுத்து பாருங்கள் எனிமா குழாய்ன்னு கூகுலில் சர்ச் பண்ணி பாருங்க அது எப்போதும் வீட்டிலிருந்தால் பிரச்சனையே இல்லை அதற்கு சாதாரண தண்ணீரே போதுமானது காதி கிராப்ட் கடைகளில் கிடைக்கும்
எனிமா கேன் 50 ரூபாய்தான்

நன்றி தோழியே...

இந்த தளத்தில் நீங்கள் கொடுத்த ஆலோசனையை பார்த்தேன் சரிதானே?

குழந்தை என்பதால் எனிமா கேனில் 1 சங்கு 2 சங்கு அளவு தண்ணீர் விட்டால் போதும் ஜாக்கிரதை
http://www.arusuvai.com/tamil/node/16669
http://www.arusuvai.com/tamil/node/18302?page=1

மேலும் சில பதிவுகள்