தேதி: October 8, 2011
பெல்ட்(Felt) துணி - விரும்பிய நிறங்கள் (2) மற்றும் பச்சை
ப்ரோச் பின்
கத்தரிக்கோல்
பட்டன்கள்
தையல் ஊசி
நூல்
க்ளூ Gun / சுப்பர் க்ளூ
பெல்ட் ப்ரோச் செய்ய மேற்கூறிய பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

இரு நிற பெல்ட் துணிகளில் நீளமான இரண்டு துண்டுகள் வெட்டவும். ஒன்று மற்றவற்றைவிட சிறிது அகலமாக இருக்க வேண்டும் (உதாரணம்: 1" அன்ட் 1.5" அகல துண்டுகள்)

வெட்டிய துண்டுகள் இரண்டிலும் படத்தில் காட்டியவாறு 5 இதழ்கள் வெட்டவும். இதற்கு துண்டுகளை ஐந்தாக மடித்து வைத்து வெட்டலாம் அல்லது பென்சிலால் வரைந்துவிட்டு வெட்டலாம். இதழ்கள் பிரிய கூடாது. கீழே 1/4" அளவு துண்டு விட்டு இதழ்களை வெட்டவும்.

பின்னர் ஊசியில் நூலை கோர்த்து கொண்டு படத்தில் காட்டியவாறு விளிம்பில் சின்ன நூலோடி தையல் போடவும்.

அதன் ஒரு முனையில் உள்ள நூலைப் பிடித்து இழுத்து சுருக்கி இறுக்கமாக கட்டவும். இவ்வாறு இரண்டு பெல்டிலும் செய்யவும். பூ போல வரும்.

பெரிய பூவின் மேல் சிறிய பூவை வைத்து ஒட்டவும்.

பின்னர் நடுவில் பட்டன் வைத்து ஒட்டவும்.

பூவின் பின்புறம் சிறிய வட்ட வடிவ பச்சை நிற பெல்ட் துணியை வைத்து ஒட்டவும்.

இதன் மேல் ப்ரோச் பின்னை வைத்து ஒட்டவும்.

இதழ்களை கூராகவோ அல்லது வளைத்தோ வெட்டியும் செய்யலாம். இதழ்களின் எண்ணிக்கையையும் விருப்பத்திற்கேற்றவாறு அதிகரிக்கலாம்.

இலகுவாக செய்யக் கூடிய பெல்ட் ப்ரோச் தயார். இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் டீ-ஷர்ட், ப்ளவுஸ்களில் அலங்காரமாக குற்றி விடலாம். விரும்பினால் இதனை சிறிய அளவில் செய்து பச்சை பெல்டில் இலைகள் வெட்டியும் பின்புறமாக ஒட்டி விடலாம்.

Comments
அழகான உபயோகமான கைவினை .....
அழகான உபயோகமான கைவினை ..... வாழ்த்துக்கள் ..
நர்மதா
எளிமையான அழகான கைவினை குறிப்பு வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
நர்மதா
ரொம்ப அழகா சிம்பிளா இருக்கு நர்மதா. நிச்சயம் பெல்ட் துணி வாங்கிட்டு முயற்சித்து பார்க்கனும்.
ஃபெல்ட் பூ ப்ரோச்
க்ரேட் நர்மதா. திரும்ப முழுமூச்சா இறங்கியாச்சு போல. இப்பிடியே தொடருங்கோ. வாழ்த்துக்கள். ;)
அன்புடன்
- இமா க்றிஸ்
நர்மதா
ரொம்ப அழகா இருக்கு நர்மதா! :)
வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
பெல்ட் பூ
பெல்ட் பூ செய்து பார்த்தேன். அழகாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!
இதுவும் கடந்து போகும்.
super
super
நன்ராகவும் மிக எளிமையாவும் இருக்கு...
நன்ராகவும் மிக எளிமையாவும் இருக்கு ...
ஆனால் ஒரு சின்ன சந்தெகம்... இந்த பெல்ட் துனி தமிழ்நாடுல எங்க கெடைக்கும்??? glue gun also???
Pls do inform me if you knew about it coz i have searched in many places for this cloth & glue...
nice
Amazing.....
"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
அன்புடன்,
மலர்.
Felt & Glue Gun
அன்பின் அறுசுவை டீம் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மிகவும் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.
தமயந்தி கார்திக்: எனக்கு தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை. அனேகமாக கிராப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கலாம். அல்லது பல்பொருள் அங்காடிகளில் கிராப்ட் பொருட்கள் இருக்குமிடத்தில் இருக்கும். or school supplies வாங்குமிடத்தில் கூட பெல்ட் கிடைக்கலாம்.க்ளூ கன்னிற்கு பதில் சுப்பர் க்ளூ அல்லது UHU பாவிக்கலாம்.
அன்புடன்,
-நர்மதா :)