"அறுசுவை செய்திகள்"

"அறுசுவை செய்திகள்"

வணக்கம் தோழிகளே, அறுசுவையின் அன்றாட நடப்புகளை செய்திவடிவில் கொடுக்க ஒரு புதிய முயற்சி.....

"அறுசுவையின் இன்றைய செய்திகள்":
***********************************
வணக்கம் புதுப்பொலிவுடன் நமது அறுசுவை செய்திகள் தோழிகளே உங்களுக்காக.....
வாசிப்பது உங்கள் ரேணுகா ராஜசேகரன்.....:))

தலைப்பு செய்திகள்:
*******************
1.நமது அனைத்து பகுதிகளிலும் தோழிகள் கலக்கல்...

2.அனைவரும் சந்தித்து ரொம்பநாளாகிவிட்டதால் இன்று நலம்விசாரிப்புகள்.....

3.நாளை பட்டி துவக்கம்.....

4.நீண்ட நாட்களாக நமது மண்ணின் தோழரையும்,பொய்ப்புலவரையும் அவையில் காணவில்லை....:((

5.அவை கலகலக்க மூத்த தோழிகளை அழைக்கிறோம்........:))

விரிவான செய்திகள்:
*******************

1. நம் தளத்தில் சமையல்,கைவினை,விவாதங்கள்,அரட்டை,பூவேலை,வீடு அலங்கரிப்பு இப்படி இன்னும் பலபல பகுதிகளில் நம் தோழிகள் புகுந்து கலக்கிட்டு இருக்காங்க....இதனால் நமது பாபு அண்ணாவிற்கு வேலைபளு அதிகமாகிவிட்டது....

2. நம் தோழிகள் அனைவரும் சந்தித்து ரொம்பநாள் ஆகிவிட்டதால் இன்று மதியம் 2மணிக்கு மேல் புதிய,பழைய தோழிகள் அனைவரும் தளத்திற்கு வந்து நலம்விசாரித்து மகிழ்வார்கள் என உள்துறை அமைச்சர் ரம்யா கார்த்திக் தெரிவித்துள்ளார்....

3. நாளை பட்டி துவக்கம்....நடுவரை தீர்மானிக்க பட்டி பொறுப்பாளர் வனி அவர்கள் இன்று நாமினி நடுவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.......

4. நமது மண்ணின் தோழர் தவமணி அவர்களையும், பொய்ப்புலவர் ஷேக் அவர்களையும் நீண்டநட்களாக அவையில் காணவில்லை.இன்று அவை கூடியதும் வருவார்களென நம்பிக்கை வட்டாரம் தெரிவித்துள்ளது.......

5. இன்றைய அவை கலகலப்பாக செல்ல மூத்த தோழிகள் கோழீஸ் கல்பனா,ஜெயா,ஜெமாமி,வனி,ரம்ஸ்,சுகி,பவி,இன்னும் பல தோழிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது அவைத் தலைமை. அழைப்பை ஏற்று அவைக்கு வருவார்கள் என நம்புகிறோம்.........

இத்துடன் காலைச்செய்திகள் நிறைவுறுகின்றன.......மீண்டும் செய்திகள் அவையின் நடவடிக்கைகளைப் பொருத்துஅமையும்.......

தொடர்ர்ந்து செய்திகளைக்காண "அறுசுவை செய்திகள்" இழையைப்பாருங்கள்.......

மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வணக்கம்கூறி விடைபெறுவது உங்கள் ரேணுகா..........

வன்மையாக எதிர்க்கிறேன்...என்னை பொய் புலவனென்று சொல்ல எப்படி மனசு வந்தது?யாரங்கே?யாராடா அங்கே!
இதை எதிர்த்து அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் பிய்யட்டும்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வந்துட்டேங்க... நலமா?? நாங்க நலம். பட்டி நடுவர்... ஜெயலக்‌ஷ்மி தான் முடிவு பண்ணனும்... ஷேக் உங்களை வர சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டார்... இனி ஜெயலக்‌ஷ்மி தான் வர முடியுமான்னு சொல்லனும். :) தெரிஞ்சுட்டா முடிவு சொல்லிடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனி மேம் நீங்களே உங்க கையால என்னை எழுதலாமா?நான் அப்படி பட்ட பையனா?எஸ்கேப்பும் ஆகல..கிஸ்கேப்பும் ஆகல..நான் காற்று மாதுரி இங்கேதான் இருக்கேன்...ஆர்வத்தின் வரிசைப்படி ஜயலக்ஷ்மி மேம் டர்ன் இது..அன்ட் எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு..சொ அவங்கதான் நீங்க சொன்ன மாதுரி முடிவு செய்து ஓடோடி வரவெண்டும்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக்,வனி,ஜெயா

அப்பாடா காணாமல் போன ஷேக் வந்துட்டாருப்பா.......வந்துட்டாருப்பா........
என்ன இன்னைக்கு ஸ்பெஷல்? டிபன் ஆச்சா? மதியம் என்ன?

வனி வந்துட்டீங்களா? என்னப்பா எல்லாரும் ஓடி ஒளிஞ்சுக்கறீங்க? இன்னைக்கு அங்க என்ன ஸ்பெஷல்?

ஜெயா....ஆ......ஆ........எங்க இருக்கீங்க.......க.......? வந்து உங்கள் நிலையென்னன்னு சொல்லுங்க.........:))

நம்ப முடிய வில்லை ............(2)

இன்னிக்கு ஞாயிறுதானா ம்ஹூம் நம்ப முடிய வில்லை.....

தார தப்பட்டையோட படு பயங்கரமா இருக்கே..;)

ரேணு..................ஊஊஊஊஊஊஊ நான் வந்துட்டேன்....இப்போ நான் இங்கதான் இருக்கேன்...............;)

பட்டி இழையிலேயும் பதில் சொல்லிட்டேன் இங்கேயும் சொல்லிடறேன் நாளை நானே பட்டிக்கு நடுவரா வரேன்..நீங்க எல்லாரும் இருக்கும்போது என்ன பயம் அதான் வந்துட்டேன்....எல்லாரும் கலக்கிடுவீங்கள்ல..;-)

Don't Worry Be Happy.

கண்டிப்பா கலக்கிடுவோம் ஜெயா,
சீக்கிரம் தலைப்பை தேர்வு செய்யுங்க, ஞாயிறுதான் ஆனால் இவர்களை வெளியவர வைக்க நான் பட்ட பாடிருக்கே......ஐய்யய்யைய்யோ.................திரும்ப ஓடிட்டாங்கப்பா.....

ஜெய்... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... :) பட்டி பட்டைய கிளப்பும்... கவலையை விடுங்க, இதே தைரியத்தோட வாங்க. தலைப்போடு இன்று மாலை துவங்கினாலும் சரி, நாளை காலை துவங்கினாலும் சரி... எதிர் பார்த்து காத்திருக்கேன்.

ரேணு... எங்களை வர வைக்க கஷ்டமெல்லாம் வேண்டாம், ஏன்னா நான் இங்கயே தானே இருக்கேன். அடிக்கடி கடமை அழைக்கும்... போய் பிள்ளைகளை கவனித்துவிட்டு திரும்ப வந்துவிடுவேன். :)

ஷேக்... மிக்க நன்றி. அப்படின்னா அடுத்த பட்டி நடுவர் சீனியாரிட்டி, நாமினேஷன்படி நீங்க தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை காணவில்லையென்று அழைத்த தங்கைக்கு நன்றிகள்...
நான் எப்பொழுதும் உங்களுடந்தான் இருக்கிறேன்...
கவலை வேண்டாம். அறுசுவை செய்திகள் நல்லபடி நடக்கட்டும்.

அன்புடன்
THAVAM

அறுசுவையில் இன்றைய செய்திகள்:
**********************************
செய்திகள் வாசிப்பது உங்கள் ரேணுகா........

தலைப்பு செய்திகள்:
******************
1.ஆரம்பம்,ஆரம்பம்.....இனிதே பட்டி ஆரம்பம்.....

2.அழைப்பை ஏற்று மண்ணின் தோழரும்,பொய்ப்புலவரும் அவைக்கு வருகை.

3.புதுத் தோழிகளின் சந்தேகத்திற்கு பதில் தேவை.....

4.தோழிகளின் சந்தேகத்தை அதற்க்கான இழைகளிலேயே கேட்களாம்......

5.உள்துறை அமைச்சர் ரம்யா வராததால் காபி,டீ கடைகள் அடைப்பு.

விரிவான செய்திகள்:
*******************
1.நாமினிகள் கலந்தாலோசிப்பில் ஜெயா நடுவராக பட்டி இனிதே
ஆரம்பமானது....வாதங்கள் சரவெடியாகவும்,சாட்டைப்பொறியாகவும் வருமென நம்புகிறோம்......

2.எனதழைப்பை ஏற்றூ அவையைக்கு வருகை புரிந்த தவமணி,ஷேக் அண்ணாவுக்கு நன்றிகள் பல....அடிக்கடி வாருங்கள்.....

3.புதுத்தோழிகள் நிறைய சந்தேகங்களை கேட்டுள்ளார்கள்.அவர்களுக்கு தெரிந்தவர்கள் பதில் கொடுங்கள் தோழிகளே....

4.தோழிகள் தங்களின் கேள்விகளை அதற்கான இழைகளில் கேட்டாலே கண்டிப்பாக பதில் கிடைக்கும். சில பதில்களுக்காக புது இழை ஆரம்பித்தால் அது நம் குடும்பத்தில் செலவை அதிகரிக்கும்(பாபு அண்ணாவிற்கு,ஒவ்வொரு பக்கத்திற்கும் பணம் கட்டனுமாம்ப்பா)

5.உள்துறை அமைச்சர் ரம்யா வந்து திறந்து வைக்க நமது காபி மற்றும் டீகடைகள் இன்றுவரை திறவாமல் காத்திருக்கின்றன.........

இத்துடன் காலைச்செய்திகள் நிறைவடைகின்றன......மீண்டும் செய்திகள் தளத்தின் நடவடிக்கையைப்பொருத்தே அமையும்........உடனுக்குடன் செய்திகளைக்காண"அறுசுவை செய்திகள்" இழையைப்பாருங்கள்.........

உங்களிடமிருந்து வணக்கம்கூறி விடைபெறுவது உங்கள் ரேணுகா........வணக்கம்.......

மேலும் சில பதிவுகள்