"தமிழ் திரைப்படங்கள் ஒரு புதிய அலசல் - நமது 7ஆம் அறிவால்"

தோழிகளே,

நமது சினிமா உலகம் நம் வாழ்வில் பொழுதுபோக்கு என்றுகூறி முக்கால் பங்கு இடத்தை பிடித்துக்கொண்டது.... இசை,டான்ஸ்,கிராஃபிக்ஸ்,எடிட்டிங்,நடிப்பு,கதையமைப்பு இப்படி பல பிரிவுகளில் நம்மையும் வளரும் இளைய சமூகத்தை வெறும் காட்சியமைப்புகளும் மட்டுமே கட்டிப்போட்டு உள்ளன.

பழகிப்போன நாமும்,பாதிக்கப்படும் இளைய சமூகமும் நமது திரைப்படங்களால் நல்முறையில் தாக்கப்படுகின்றனவா? இல்லை தாக்குதல்கள் வாழ்வை கபலீகரணம் செய்கின்றனவா?
இப்படி இருக்கும் சினிமா போதுமா? அல்லது எப்படி வளர்ந்தால் நன்றாக இருக்கும்? உங்களின் கற்பனைகளும் ,ஆதங்கங்களும்,மாற்ற வேண்டியவைகளும்,எதை இழக்கிறோம் என்பதையும் தெரிவிக்கும் இடமாக இது இருக்குமென நினைக்கிறேன்......

வாருங்கள் நமக்குள் விவாதிப்போம்,தெளிவடைவோம், தெளிவாக்குவோம்......

தோழிகளே,
முதலில் நான் எடுத்துக் கொள்ளும் படம், வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "7ஆம் அறிவு", படம் இன்னும் வெளிவரவில்லை என்றாலும்கூட அதன்கதை நம்மை கர்வப்படுத்துகிறது.ஆம் தோழிகளே, சென்ற தீபாவளிக்கு வெளியான "எந்திரன்" எப்படி நமது சினிமாவை கிராஃபிக்ஸ் மூலம் ஒருபடி மேல் கொண்டு சென்றதோ.......இந்த தீபாவளியின் 7ஆம் அறிவு இன்னும் பல படிகள் மேலே கொண்டு செல்லும்........
தோழிகளே உங்களின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்,.......

நலமா உங்களோட இந்த இழை கண்டிப்பா எல்லோருக்கும் அவங்களோட கருத்தை கூற விரும்பும் படி இருக்கும்.

இப்போ இருக்க சினிமா உலகம் தான் இப்போ எல்லோருக்குமே உலகம் ஆயிடுச்சு முக்கால்வாசி இதை பார்த்து கெட்டு போறவங்களும் இருக்காங்க திருந்துனவங்களும் இருக்காங்க நல்ல விசயங்கள மட்டும் எடுதுகிட்டவங்களும் இருக்காங்க

இப்போ எல்லாமே வெளிப்படையா எடுக்க ஆரம்பிச்சுடாங்க முதள்ளலாம் நாம அப்படி ஒரு காட்சி வந்தா சேனல் மாத்திடுவோம் இப்போலாம் சகஜ மாயிடுசுல

இப்போதுள்ள வளர்சிய நாம பார்த்துட்டு தான் இருக்கோம் ஹாலிவுட் லெவல் கு போய்கிட் இருக்கோம்னே சொல்லலாம் எதுக்குமே முடிவுன்றது கிடையாது வளர்ச்சி தான் உண்டு அதனால இப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது கண்டிப்பா வளர்ந்து முடிவில்லாம போய்டே தான் இருக்கும்

7அம் அறிவும் அப்படி தான் இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு

ந சொல்லனுன்னு தோணுனத சொல்லிட்டேன் அக்கா தப்புன்னா மன்னிக்கவும் இது என்னுடைய கருத்து
by Elaya.G

பாடல்கள் ரீபிடாக உள்ளது .... டாக்ஸி டாக்ஸி ..... 7m அறிவு படத்தில் மியூசிக் எல்லாமே காபி அடிக்க பட்டவை .

மேலும் சில பதிவுகள்