அவசரம் தோழிகளே, தலை வலிக்கு மருந்து சொல்லவும்

வணக்கம் தோழிகளே, என் கணவருக்கு ஒரு வாரமாக தலை வலிக்கின்றது என்று சொல்லுகிறார். வீட்டு வைத்தியம் சொல்லவும்.

ஒரு வாரம் தலைவலின்னா எப்படி டாக்டரை பார்க்காம இருக்கீங்க??? முதல்ல பாருங்க. தலைவலி நாம் நினைப்பது போல் சாதாரண விஷயம் இல்லை. முதல்ல தூக்கம் இல்லையான்னு பாருங்க... அப்படி இருந்தா ஒரு 2 நாள் தொடர்ந்து சரியான நேரத்துக்கு நல்லா 8 மணி நேரம் தூங்க சொல்லுங்க. நீர் நிறைய குடிக்க சொல்லுங்க. நீர் கோர்த்தது போல் இருக்கு வலின்னா ஆவி பிடிக்க சொல்லுங்க. நீர் போனா தலைவலி விட்டுடும். இதுக்குலாம் வலி அடங்கலன்னா டாக்டரை பாருங்க.

நீண்டா நாள் தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம்... கண் பிரெச்சனையாக இருக்கலாம், நரம்பு பிரெச்சனையாக இருக்கலாம், காது பிரெச்சனையா இருக்கலாம், சைனஸாக இருக்கலாம், அதிக ரத்த அழுத்தம், தைராய்டு, அவ்வளவு ஏங்க... சில மோசமான நோய்கள் இன்ஃபெக்‌ஷனால் கூட தலைவலி ஏற்படலாம்... அதனால் உஷாரா டாக்டரை பார்க்கனும். இது எதுவும் பயம்காட்ட இல்லை... நம்மில் பலரும் தலைவலியை பெரிதாக எடுப்பதில்லை... ஆனா சின்ன விஷயம்னாலும் முதல்லயே பார்த்துட்டா நமக்கு கஷ்டம் இருக்காதில்லையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாக்கா எனக்கு தலைக்குக்குளித்தால் இரண்டு நாளில் தலைவலி வந்துடும் .எத்தனையோ டாக்டரிடம் பார்த்தேன் நோ யூஸ்,இத்ற்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கள்.ப்ளீஸ்க்கா

நல்லா முடிய ஈரம் இல்லாமல் உலர்த்தி விடுங்க.

வனக்கம் சீதா தலையில் நீர்கொன்டிருந்தாலும் தலைவலி நிர்காது . மருந்துகடையில் ஆவி பிடிப்பதர்க்கு என்ரு தைலம் விர்கிரது. வாங்கிவந்து தன்னீர் கொதிக்கவைத்து தைலம் சேர்த்து ஆவி பிடிக்க சொல்லுங்கள்

தலைக்கு குளிச்சா தலைவலி என்றால் ஸைனஸ் இருக்கா என்று செக் பண்ணுங்க. குளிச்சதும் சாம்பிரானி போட்டு பாருங்க. சிலருக்கு அந்த வாசமே சளி, தும்மல் கொடுக்கும் (எனக்கு அப்படி தான் ;) ஹிஹிஹீ). ஆவி பிடிங்க, நீர் தலையில் நிக்காமல் பார்த்துக்குங்க. இதுக்கும் அடங்காட்டா டாக்டரை தான் பார்க்கனும் :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வர்த்தினி.வனிதாக்கா ஸைனஸெல்லாம் இல்லை.ஆனால்தலைக்கூத்தினால் தலைவலி வருது.நீங்க சொன்னபடி செய்து பார்க்கிரேன்.நன்றி வனிதாக்கா.

மேலும் சில பதிவுகள்