பனீர் ப்ரெட் கட்லட்ஸ்

தேதி: October 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (12 votes)

 

பனீர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - அரைப் பாகம்
ப்ரெட் துண்டுகள் - 2
வெங்காயம் - அரைப் பாகம்
கொத்தமல்லி இலை
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரவை - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு


 

பனீரை ரவை கலந்து 5 நிமிடம் நன்றாக பிசையவும். உருளையை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்.
ப்ரெட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிட்டு நீரில் நனைத்து எடுத்து பிழிந்து பனீருடன் சேர்க்கவும்.
இத்துடன் மசித்த உருளை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, தூள் வகை எல்லாம் ஒன்றாக கலந்து பிசையவும்.
உருட்டும் பதத்தில் பிசைந்து உருண்டைகளாக ஆக்கி விரும்பிய வடிவில் தட்டவும்.
தோசை கல்லில் எண்ணெய் விட்டு தட்டிய கட்லட்டுகளை போட்டு இரண்டு பக்கமும் சிவக்க திருப்பி போட்டு எடுக்கவும்.
விரும்பிய வடிவில் செய்யலாம். உருண்டைகளாக பிடித்து மைதா மாவில் டிப் செய்து எடுத்து எண்ணெயில் டீப் ஃப்ரை செய்யலாம். விரும்பினால் பிசையும்போது சிறிது டொமேட்டோ கெட்சப் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு!

Eat healthy

சூப்பர் குறிப்பு.... இன்னைக்கு மாலை செய்து பார்க்கிறேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

பனீர் கட்லெட் நல்ல கலரா சூப்பரா இருக்கு. கடைசிப்படத்த பார்க்கும்போது எடுத்து சாப்பிடனும் போல இருக்கு. வாழ்த்துக்கள்.

சுவையான குறிப்பு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

supero superb pa. good tips

வனிதாக்கா சூப்பர் ஸ்நாக் :-)

KEEP SMILING ALWAYS :-)

அருமையான ஸ்நேக்ஸ் தந்து இருக்கீங்க, சீக்கரம் பண்ணிடறேன். பனீர் வாசம் வருமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நாவுல நீர் ஊருதே....

கட்டாயம் செஞ்சு பார்க்கனும் வனிதா...

என்றும்
தோழமையுடன்
எப்.நிஹாஸா....

சூப்பர் ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாக்கறேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பனீர் ப்ரெட் கட்லெட் சூப்பரா இருக்கு வனி! வாழ்த்துக்கள்!
இதோட‌ சேர்த்து இன்னும் சில‌ ப‌னீர் ரெஸிப்பிஸ் ட்ரை ப‌ண்ணி பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் இருக்கு! (ம்ம்... அடுத்த‌முறையாவ‌து, இந்தியன் ஸ்டோர்ஸ் போகும்போது, ஞாப‌க‌மா ப‌னீர் வாங்கி வ‌ர‌னும்! வர வர மறதி ஜாஸ்தியாகிடுச்சு! ;))

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) இத்தனை வேகமா??? எதிர்பார்க்கல ;)

ரசியா... முதல் பின்னூட்டம்... மிக்க நன்றி.

ராணி... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

வினோ... ப்ளேட்டோட அனுப்பிடுறேன் :) உங்களுக்கு இல்லாததா?? மிக்க நன்றி.

இளையா... ரொம்ப நன்றி :)

வர்தினி... மிக்க நன்றி. உஙக் பெயர் ரொம்ப அழகு :) பிடிச்சிருக்கு.

நாகா... ரொம்ப நன்றி... ட்ரை பண்ணி பாருங்க :)

சுகி... பனீர் வாசம் வந்தா எனக்கே பிடிக்காது... அதனால் கவலை இல்லாம செய்து பாருங்க :) மிக்க நன்றி.

நிஹாஸா... (இப்போ தெரிஞ்சுக்கிட்டேன் உச்சரிக்க :)) ரொம்ப நன்றி. கட்டாயம் செய்துட்டு இங்கையும் சொல்லனும்.

ரேணுகா தேவா... செய்து பார்த்து மறக்காம பிடிச்சுதான்னும் சொல்லுங்க. மிக்க நன்றி :)

சுஸ்ரீ... மறக்காம பனீர் வாங்கி செய்துட்டு சொல்லுங்க. என்னை நினைவு வைங்க, பனீர் மறக்காது ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Your Presentation in all ur receipies are so good........ this paneer katlet is also so nice.............

மிக்க நன்றி பிரியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

akka nan ippathan senji sapittu vandu okkaran super sorry tmil type panna mudila

வனிதா,
பனீர் ரெசிப்பியா கொடுத்து ஆசை காட்டுறீங்க.இங்கு எனக்கு பனீர் கிடைக்க மாட்டேங்குது.கட்லட் பார்க்கவே அழகா இருக்கு.ப்ரசன்டேஷனே சாப்பிட தூண்டுது.கலக்கல் குறிப்பு.வாழ்த்துக்கள்.

hi vanitha madam
i hope u only did bomay halwa too.can u ready my question of halwa recipe in that page & answer me.waiting for ur message
thanks
abinays

வனி சூப்பர் ஸ்நாக்ஸ் விருப்பபட்டியில் சேர்த்துட்டேன் முடியும் பொழுது செய்துட்டு சொல்கிறேன்

வனி ரொம்பவே அருமை....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் வனி பனீர் கட்லெட் சூப்பர்பா.நான் பனீர் வீட்டில் செய்தால் துண்டுகளாக வராது.இனி மேல் கவலை இல்லாம பனீர் கட்லெட் செய்திடவேண்டியது தான்.வாழ்த்துக்கள்பா.

நீங்களாதான் இருப்பீங்கன்னு நெனச்சேன்

நெனச்ச படியே நீங்களே தான்

நல்ல குறிப்பு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா!பனீர் கிடைக்கலன்னு கவலைப்படாதீங்க,வீட்டிலேயே செய்யலாம்,1 லிட்டர் பாலை கொதிக்க விடுங்க,அதில் கொஞ்சம் எலுமிச்சைசாறும் வினிகரும் கலந்து ஊற்றுங்க,இப்போ பால் திரிந்துவிடும்,இதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டிவிட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்துவிட்டு அப்படியே அதை கட்டி தொங்கவிடுங்க,சிறிது நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் எல்லாம் வடிந்து இருக்கும்,இப்போ கைய்யால் அதை சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்தால் பனீர் சாஃப்டா இருக்கும்,இப்போ இந்த பனீரை நீங்க எதற்கு வேனும்னாலும் யூஸ் பன்னலாம்.

Eat healthy

எங்க வீட்ல ஃபிர்ட்ஜ் இல்ல பனீர் நைட் வாங்கி வச்சு பனீர் கட்லெட் அடுத்த நாள் மாலைல பண்ணலாமா இல்ல பனீர் கெட்டு போய்டுமா... ரொம்ப ஆசையா இருக்குங்க உங்க குறிப்பு பண்ணனும்னு
நன்றி rasia_nisrina நான் இப்ப தான் நீங்க சொன்னத பார்க்குறேன். அரை லிட்டர் பால்ல இருந்து எடுத்தா எவ்வளோ பனீர் கிடைக்கும்...? அப்புறம் என்ன வீட்லயே செஞ்சுட்றேன். ஞாயிறுக்கிழமை செஞ்சு பார்த்துட்டு திங்கள் கிழமை கண்டிப்பா எப்டி வந்ததுன்னு சொல்றேன் வனி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

குட்டிரேயம்மா... மிக்க நன்றி. அதுக்குள்ள செய்து சாப்பிட்டு வந்து ஜெட் ஸ்பீட்ல பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க.. மகிழ்ச்சியா இருக்கு. :)

ஹர்ஷா... பனீர் வீட்டிலேயே செய்துட வேண்டியது தானே... அங்க பால் கிடைக்கும் தானே??? சில நேரம் அட்டை பெட்டியில் வரும் பால் பனீர்க்கு நல்லா இருக்காதுன்னு சொல்வாங்க.. உங்களூக்கு எப்படி??

http://www.arusuvai.com/tamil/node/20198

நம்ம லாவண்யா கூறிப்பு. முதல் 4 ஸ்டெப்ல பனீர் செய்முறை இருக்கு பாருங்க. ட்ரை பண்ணுங்க :) மிக்க நன்றி.

அபினயா... மிக்க நன்றி. உங்க பதிவை பார்த்து பதிலும் சொன்னேன், நீங்க பார்த்தீங்களா??

பாத்திமா... மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க :)

சுவர்ணா... மிக்க நன்றி.

சுந்தரி... பனீர் செய்யும் போது அதை துணியில் கட்டி மேலே வெயிட்டா எதாவது வைக்கனும்... அப்பதான் கெட்டியாகி வரும். அதன் பின் துண்டுகளாக நறுக்கினா விட்டு போகாம இருக்கும். இனி துண்டுகளாக்க இதை ட்ரை பண்ணுங்க. அவசியம் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்க. மிக்க நன்றி.

ஆமினா... ரொம்ப நாளா காணோம்... அடிக்கடி காணாமல் போய் வரீங்க... மிக்க நன்றி, ட்ரை பண்ணி பாருங்க.

ரசியா... எனக்காக ஹர்ஷாக்கு பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி :)

மீனு... பனீர் வாங்கி வெளியே வைத்தால் கெட்டு போகும்... எனக்கு அதிஅ ஃப்ரிட்ஜ் இல்லாமல் பாதுக்காக்க தெரியாது. நீங்க வீட்டிலேயே ட்ரை பண்ணி பாருங்க,அது தான் வேணும்ன்றப்போ உடனே செய்துக்க முடியும் :) மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க எப்படி வந்ததுன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா