ரெக்கார்ட் தட்டுகள்

தேதி: October 19, 2011

5
Average: 5 (5 votes)

 

பாவனைக்குதவாத ரெக்கார்டுகள்
பாத்திரங்கள் (சொல்லப்பட்டுள்ள வடிவங்களில்)
க்ளவ்
பேக்கிங் ட்ரே
அலுமினியம் ஃபாயில்
எலெக்ட்ரிக் அவன்

 

அவனை 275°F (135°C) அளவுக்கு ப்ரீஹீட் செய்யவும். ரெக்கார்டை விட ஒரு அங்குலம் சுற்றளவு அதிகமான, அடி தட்டையான பெரிய பாத்திரம் ஒன்றைக் கவிழ்த்துக் கொள்ளவும். ரெக்கார்டை அதன் மேல் வைத்து அவன் நடுத்தட்டில் வைக்கவும்.
எட்டு ஒன்பது நிமிடங்களில், பாத்திரத்தின் வெளியே நீண்டிருக்கும் ரெக்கார்ட்டின் பகுதி இளகி வளைய ஆரம்பிக்கும்.
க்ளவ் அணிந்துகொண்டு பாத்திரத்தை கவனமாக மேசைக்கு மாற்றவும். மேலே உள்ளங்கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு வேகமாக விரல்களால் நெளிவுகளைச் சரிசெய்துவிடவும்.
எவ்வளவு இளகி இருந்தாலும் அவனிலிருந்து வெளியே எடுத்த சில விநாடிகளுள் ரெக்கார்ட் இறுகி விடும்; அதனால் வேகமாக வேலையை முடித்து விட வேண்டும். (தேவையானால் மீண்டும் அவனில் வைத்து எடுத்து சரிசெய்யலாம். ஆனால் முதல் முறையில் செய்து முடித்துவிட்டால் சீரான அமைப்புக் கிடைக்கும்.) தட்டையான இந்தத் தட்டு பழத்தட்டாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமாக இருக்கும்.
உயரமான செராமிக் அல்லது கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்து வைத்து அதன் மேல் ரெக்கார்ட்டை வைத்துச் சூடாக்கினால் இளகும் போது நெளிவுகள் இப்படி நீளமாக அமையும். (குறிப்பு: அவன் கம்பி ராக்கில் டம்ளரை நேரடியாக வைத்தால் சரிந்து விடும். ஒரு ட்ரேயின் மேல் வைத்து, வைக்கவும்.) எட்டு நிமிடம் கழித்து வெளியே எடுத்து விரைவாக அமைப்பை சீர்செய்து விடவும்.
நெளிவுகளின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
மூன்று பிரிவுகளோடு டிவி ரிமோர்ட் கன்ட்ரோலர்களை வைத்துக் கொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ளது இந்த ட்ரே.
பூந்தொட்டிக்கான சதுரத் தட்டினைத் தயாரிக்க, பேக்கிங் ட்ரேயின் மேல் ஃபாயில் பேப்பர் விரித்து, அதன் மேல் ரெக்கார்டை வைக்கவும். ப்ரீஹீட் செய்த அவனில் ட்ரேயை வைத்து இளகவிடவும். தட்டையாக வைக்கப் படுவதால் ரெக்கார்ட் இளக ஆரம்பிப்பது கண்ணுக்குத் தெரியாது.
அடிப்புறம் தட்டையான வெற்றுச் சதுரத் தொட்டியொன்றை மேசையில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். தொட்டியைத் தலைகீழாக வைக்கவும். சுமார் ஒன்பது நிமிடங்கள் கழித்து ரெக்கார்ட்டை வெளியே எடுத்து பூந்தொட்டியின் மேல் போடவும். நான்கு பக்கங்களையும் தொட்டியோடு சேர்த்து ஒரு முறை அழுத்திவிட்டு மூலைகளைச் சேர்த்துப் பிடித்து அழுத்தவும். அழுத்திப் பிடித்தபடியே ஆறவிடவேண்டும்.
தட்டு பார்க்க இப்படி இருக்கும். தட்டையான ப்ளாஸ்டிக் துண்டு ஒன்றை சூப்பர் க்ளூ கொண்டு துளையில் ஒட்டிக் காயவிட்டால் தொட்டிநீர் வெளியே வடியாமல் பிடித்துக் கொள்ளும்.
சதுரத் தட்டிற்கு ஆயத்தம் செய்தது போல் இன்னொரு ரெக்கார்டை இளக்கிக் கொள்ளவும். அதனை சற்றுக் குழிவான (மடிப்புகளில்லாத) ப்ளேட்டில் போட்டு நெளிவுகளை சீர்செய்தால் இது போன்ற அழகான தட்டு கிடைக்கும். நடுவில் ஒருமுறை சுற்றிவர வட்டமாக அழுத்தி விடவும்.
இந்த தட்டுகளில் சாக்லெட்ஸ் போட்டு வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு .ரெக்கார்டைவைத்து இப்படி எல்லாம் பண்ண முடியுமான்னு ஆச்சரியமா இருக்கு இம்மா அக்கா. உங்ககிட்ட இன்னும் கத்துக்க நெறையா இருக்குன்னு நெனைக்குறேன் கதுக்குடுதுடே இருங்க வாழ்த்துக்கள் by Elaya.G

ஒவ்வொன்னும் அழகு!!! பார்த்துட்டே இருக்கலாம் உங்க கைவேலைகளை... கலக்கிட்டீங்க இமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

amazing art congratulation i learn more about u

covert all, lose all

balasri

சூ...ப்பர் இமா...கைவினை ஐடியாவில் உங்களை யாரும் வெல்ல முடியாது..என் கைவினை அரைகுறையில் இருக்கு.காரணம் உங்களுக்கு தெரியும்.சீக்கிரம் செய்துட்டு வர்றேன்.நல்லா இருக்கு இமா..குறிப்பா அந்த ரிமோட் வைக்கும் ஸ்டாண்ட்.

radharani

வீட்ல நிறைய தட்டுக்கள் இருக்கு போல :-)

எல்லாமே அழகு அழகு

கிடைத்தால் செய்கிறேன் இமா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி இளையா, வனி, பாலஸ்ரீ, ராதாராணி & ஆமி.

//வீட்ல நிறைய தட்டுக்கள் இருக்கு போல :-)// ;) ம்.. இருந்துது ஆமி. கூடவே டிஸ்கார்ட் பண்ணின 'அவன்' + ஸ்கூல் விடுமுறையும் சேர்ந்துது, செய்தேன்.

‍- இமா க்றிஸ்

எல்லாமே ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க....வாழ்த்துக்கள் இமா...

ம் உங்களுக்கு நிகர்
நீங்களே தான் ..

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

அழகோ அழகு கொள்ளை அழகு ஒவ்வொரு தட்டும் தனிதனியா ஜொலிக்கிறது அருமையான விளக்கமும் செய்முறையும் கூட

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அழகான படைப்பு அழகான கற்ப்பனைதிறன் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்......

பாராட்டியே தீர வேண்டும் அவ்வளவு அருமை....

தோழமையுடன்
எப்.நிஹாஸா

இமா, அழகோ அழகு. எங்க வீட்டு அவன் சொன்ன பேச்சுக் கேட்காது. ரிஸ்க் எடுக்க நான் ரெடியில்லை.
வாணி

வழக்கம்போல கலக்கிடீங்க ஆன்டி..வாழ்த்துக்கள்.

Kalai

இமா,
உங்க ரெக்கார்ட் தட்டுகள், ஒவ்வொன்றும், ஒன்றோடு ஒன்று போட்டியிடுகிறது -‍அழகில்! :) எப்போதும்போல, வெகு அருமையா செய்திருக்கிங்க! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

இமா,
அழகழகான ஐடியாக்களை கொண்டு ரெக்கார்டு தட்டுகளை அழகழகான பொருட்களா மாற்றிட்டீங்க.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.பாராட்டுக்கள்.

வெகு அருமையா செய்திருக்கிங்க! வாழ்த்துக்கள்!!

ஹாய் இமா மேடம் எப்படி இருக்கீங்க..?
என்னமா யோசிக்கிறீங்க...?
ரொம்ப அழகான வடிவங்களில் உபயோகமாக செய்து காட்டியிருக்கீங்க.
பார்ப்பதற்க்கு அழகாக இருப்பதோடு வியப்பாகவும் இருந்தது.
செய்து பார்ப்பதற்க்கு ரிக்கார்ட் தட்டுதான் இல்ல.
தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சூப்பர் ..அசத்திட்டீங்க :-) , இதுமாதிரி உங்க கலெக்‌ஷன் நிறைய வீட்டில இருக்கும் போல தெரியுது .

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

awesome craft work...

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

பாராட்டிய சுமதி சந்திரன், சிவா, ரேணுகா, ஃபாத்திமா, நிஹாஸா, வானதி, கலா, சுஸ்ரீ, ஹர்ஷா, கவிஷினி, அப்சரா, ஜெய்லானி, மலர் அனைவருக்கும் என் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்