பீரியட்ஸ் சந்தேகம்

எனக்கு 16.01.2011 குழந்தை பிறந்தது அதற்க்கு பிறகு மே 16 பீரியட்ஸ் வந்தது அதற்க்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வந்தது எப்போதும் போல் இல்லை மிகவும் கொஞ்சமாக அதன் பிறகு இன்று வரை வரவில்லை பயத்தில் ஹோம் ப்ரக்னன்ஸி டெஸ்ட் வாங்கி செக் செய்தேன் நெகடிவ் இருந்தாலும் பயமாக உள்ளது நான் கர்ப்பமாக இருக்கிரேனோ என்று அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா?பிரசவத்திற்க்குப் பின் எவ்வளவு நாட்களுக்குப் பிறகு பீரியட்ஸ் வரும்?உதவுங்கள்

யாராவது வந்து பதில் சொல்லுங்கப்பா ஒரே இதே யோசினயாவே இருக்கு ஏதாவது பிழையா கேட்டுட்டேனோ

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

பயம் வேண்டாம்... டெஸ்ட் பண்ணிட்டீங்க, நெகடிவ்ன்னு வந்தாச்சு... இன்னும் பயமா இருந்தா ஹாஸ்பிடல்ல குடுத்து டெஸ்ட் பண்ணிக்கங்க. நிறைய பேருக்கு 1 வருடம், 1.5 வருடம் ஆகும் வர. ஒரு சிலருக்கு குழந்தை பிறந்த பின் 3வது மாதம் அல்ல்து அதன் பின் ஒரு முறை வரும், அதன் பின் சில மாதங்களுக்கு இருக்காது. தாய் பால் கொடுப்பவர்களுக்கு இது போல் நடக்கும். கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா இப்பதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்