குட்டீஸ் மினி பட்டு வேஷ்டி பத்தி சொல்லி உதவி செய்ங்க ப்ளீஸ்....

ஹாய் தோழிகளே....
நலமா...எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க ப்ளீஸ்...நான் ஈரோடுல இருக்கேன்.... எனக்கு இரண்டு வயசுல ஒரு குட்டி வாலு இருக்கான்... இந்த பெரிய மனுஷனுக்கு என்னோட அண்ணா கல்யாணத்துக்கு பட்டு வேஷ்டி ஜிப்பா போட்டு பாக்கணும் போல ஆசை.. ஆனா அது போல ரெடிமேடா கிடைக்குமா..இது போல யாரவது போட்டு பாத்து இருக்கீங்களா....அது பசங்க ஓடும் போது தடுக்குமா..ப்ளீஸ் இத
பத்தி யாரவது சொல்லுங்களேன்...

என் மகனின் முதல் பிறந்த நாளுக்கு அதை தான் எடுத்தோம். ரொம்ப கியூட்டா இருக்கும். நல்லி, ஸ்டைல் ஒன், போதீஸ் என பெரியகடைகள் எல்லாத்துலையும் கிடைக்கும். தடுக்கலாம் செய்யாது... பயப்படாம வாங்குங்க. உங்களுக்கு பிடிச்ச ரேஞ்ஜில் கிடைக்கும்... சாதா கட்டான் குர்தா, ப்ளெயின் பட்டு குர்தா, த்ரெட் ஒர்க் உள்ள பட்டு குர்தா, ஹெவி பீட் ஒர்க் உள்ள பட்டு குர்தா.... இத்தனை வகை உண்டு. பெரியவங்க மாதிரி இதுகளுக்கும் அதுக்கு ஒரு துப்பட்டா வேற வருது... நடுக்கும் வயதில் போட்டா நச்சுன்னு இருக்கும். போட்டு அழகு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்க்ஸ் வனிக்கா...
உங்க கிட்ட இருந்து பதில் வரும்னு கண்டிப்பா எதிர்பார்த்தேன்..ஈரோடுல இது போல பட்டுல கிடைக்குதா??எங்கனு சொல்ல முடியுமா..ஏன்னா இப்போ சென்னை அல்லது கோயம்புத்தூர் போக முடியாது ..
அதனால தான்...

SaranyaBoopathi

சரன்யா பட்டு வேஷ்டி,
நீங்க ஈரோட்டில் சென்னை சில்க்ஸ்,பரணி பட்டு ஷோரூம்,மலர்ல போய் கேளுங்க கண்டிப்பா கிடைக்கும்........

ரேணு சொன்னதை ட்ரை பண்ணுங்க... எனக்கு ஈரோட்டில் என்ன கடை இருக்குன்னு கூட தெரியாது... நான் என்ன சொல்றது ;) இருந்தாலும் என்னையும் மதிச்சு... ;( நீங்க ரொம்ப நல்லவங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்க்ஸ் ரேணு.. கண்டிப்பா போய் பாக்கறேன்... பரணி ல தான் அண்ணிக்கு முகூர்த்த புடவை எடுக்கலாம் நு சொன்னங்க...அப்போ பாக்கறேன்...
வனிக்கா நீங்க ஈரோடுநு நினைச்சுட்டேன்..அதான்

SaranyaBoopathi

மேலும் சில பதிவுகள்