குங்குமம் செய்வது எப்படி?

தேதி: October 25, 2011

5
Average: 4.2 (20 votes)

 

குண்டு மஞ்சள் - 100 கிராம்
வெண்காரம் - 10 கிராம்
படிகாரம் - 10 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரை மூடி

 

குங்குமம் செய்வதற்கு மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முகச்சவரம், வாசலில் திருஷ்டிக்கு இந்த படிகாரத்தை பயன்படுத்துவார்கள். வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது.
வெண்காரம், படிகாரம் உடைத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இரண்டையும் தனித்தனியாக போட்டு பொடி செய்யவும்.
நன்கு பொடி செய்ததும் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைக்கும்போது அதன் நிறம் பழுப்புநிறமாகி கொஞ்சம் ஈரப்பசையுடன் இருக்கும்.
மஞ்சளை சிறு சிறு துண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு முழு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெண்காரம், படிகாரத்தை தயாராக எடுத்து வைக்கவும்.
எலுமிச்சைப்பழ சாறுடன் பொடித்து வைத்துள்ள வெண்காரம், படிகாரத்தை கலந்து வைக்கவும்.
இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து ஒரு ப்ளாஸ்டிக் பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக் தட்டில் வைத்து பரப்பி உலர விடவும்.
நன்கு உலர்ந்தப்பிறகு செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். அதில் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து லேசாக பிசறி விடவும்.
அப்போதுதான் நல்ல டார்க் மெரூன் நிறத்தில் குங்குமம் கிடைக்கும்.
மஞ்சளின் வாசனையுடன் ஒரிஜினல் குங்குமம் ரெடி. சில இடங்களில் குங்குமம் மல்லிகை, தாழம்பூ மணத்துடன் இருக்கும். இந்த குங்குமத்துடன் மல்லிகை, தாழம்பூ எசன்ஸ்களை இரண்டு, மூன்று துளி விட்டு கலந்து விடவும். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதால் உடலில் உஷ்ணநிலையை சரிசமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சான்ஸ் இல்ல, எவளோ அழகா ஈஸி ஹா பண்ணி காட்டி இருக்கீங்க. முதல் முறையா இப்ப தான் குங்குமம் செய்முறை பாக்கறேன். மிக்க நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நாங்க கொஞ்சம் வித்யாசமா செய்வோம். ஆனா இந்த முறை சுலபமா இருக்கு

KEEP SMILING ALWAYS :-)

ஆகா... இப்படிலாம் கூட நாமே வீட்டில் செய்யலாமா!!! எனக்கு புது தகவல்... ரொம்ப அருமை.. வெளியே கெமிக்கல் கலந்த மாதிரி வெச்சா கலர் பிடிக்கும், புன்னாகும்... இனி வீட்டில் நாமே நல்லா செய்துக்கலாம். அழகான ரொம்ப உபயோகமான குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சுலபமா செய்து காட்டியுள்ளீர்கள். இதே போல் சுடிதார் தைக்கும் முறையும் யாராவது கற்றுக் கொடுத்தால் மகவும் நன்றாக இருக்கும்.

shagila

nalla vilakam!!!

very useful item....... Thanks for that........

சூப்பர் ஈஸியா சொல்லியிருக்கீங்க கண்டிப்பா செஞ்சி பாக்கறேன் எல்லாருக்கும் உதவுற குறிப்பு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

super idea pa

குங்குமம் வீட்டிலேயே செய்ய முடியும் என்பது புதிய தகவல்.பயனுள்ள குறிப்பு.நானும் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்..

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

very nice pa...nan kandippa seithu parthuttu solren...

migavum payanullathaga irunthathu.

it's very super

god is love

Neenga Etho puthu vithama seiveengannu sonningallya atha engalukkum sonninganna nalla irukku....mudinthal...neramirunthal....

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா

நிறம் - நன்றாக வந்திருக்கிறது. குறிப்பைக் கொடுத்த டீம் மெம்பருக்கு நன்றி.
என்னை வளர்த்த பெத்தா குட்டிக் குட்டிச் சீசாக்களில் பல வர்ணங்களிலும் குங்குமம் வைத்திருப்பார். யாருக்காவது தயாரிப்பு முறை தெரிந்தால் சொல்லுங்களேன். இப்போதே... நன்றி. :-)

‍- இமா க்றிஸ்