எனது மனைவி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள் -சௌமியன்

அன்பு உள்ளம் உடைய அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம் .எனது மனைவி தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் பிரச்சனை அனைத்தும் நிவர்த்தி ஆகி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள்.எங்களின் நிறைய doubts களை இங்கு தோழிகள் ஆகிய உங்களிடம் கே ட்டு அறிந்து கொண்டோம்.மற்றும் நிறைய தோழிகள் எங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னார்கள் .உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் இந்த சமயத்தில் எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் .தாய்மை பேறு பற்றி மருத்துவர் போல சொல்லும் தோழிகள் உள்ள இந்த தளத்தில் நானும் உறுப்பினர் என்று சொல்வதில் உள்ளம் மகிழ்கிறேன். எங்களுக்கு நல்ல படியாக பாப்பா பிறக்க தங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வதங்களையும் வேண்டி நன்றியுடன் விடை பெறுவது உங்கள் சௌமியன்

//சரியான நேரத்திற்கு சாப்பிட சொல்லுங்கள், இரும்பு சத்து மற்றும் சத்தான உணவுகளை தாங்க. சில விஷியங்கள் அவங்க சொல்லியும், சிலதை அவங்க சொல்லாமலும் புரிந்து சந்தோசமான மனநிலையோட வைத்து கொள்ளுங்கள்.அதுவே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முதல் படி.
சில மாதங்களுக்கு ட்ராவல் அதிகமாக பண்ண வேண்டாம், உடலுக்கு சூடு தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது....//

எப்படி.. இப்படி எல்லாம்!!!!!!!!!

BTW, சௌம்யன் சார், மீண்டும் ஒருமுறை அறுசுவை வாயிலாக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்ணா வாழ்த்துக்கள். அத்துடன் ஆரோக்கியமாக பாப்பாவைப் பெற்றெடுக்க பிரார்த்திக்கிறேன்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

Congratulation to you and mrs.sowmiyan. Mrs sowmiyan take care for your health.god is great. with regards.g.gomathi.

சகோதரர் செளமியன்,உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

செளமியன் அண்ணா, நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க... உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா...அழகான,ஆரோக்கியமான,அறிவான குழந்தை பிறக்க இறைவனை வேண்டுகிறேன்....

சௌமியன்,
உங்களுக்கும்,உங்க மனைவிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.நல்ல படியாக குழந்தையை பெற்று எடுக்க என்னுடைய பிரார்த்தனைகள்.

உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா...அழகான,ஆரோக்கியமான,அறிவான குழந்தை பிறக்க இறைவனை வேண்டுகிறேன்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

சௌமியன், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அழகான,ஆரோக்கியமான குழந்தையை நல்லபடியாக பெற்று எடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

சந்தோஷமான செய்தி! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

சௌமியன் சார் வாழ்த்துகள். திருமதியிடமும் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். அழகான் அறிவான பாப்பா பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்