எனது மனைவி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள் -சௌமியன்

அன்பு உள்ளம் உடைய அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம் .எனது மனைவி தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் பிரச்சனை அனைத்தும் நிவர்த்தி ஆகி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள்.எங்களின் நிறைய doubts களை இங்கு தோழிகள் ஆகிய உங்களிடம் கே ட்டு அறிந்து கொண்டோம்.மற்றும் நிறைய தோழிகள் எங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னார்கள் .உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் இந்த சமயத்தில் எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் .தாய்மை பேறு பற்றி மருத்துவர் போல சொல்லும் தோழிகள் உள்ள இந்த தளத்தில் நானும் உறுப்பினர் என்று சொல்வதில் உள்ளம் மகிழ்கிறேன். எங்களுக்கு நல்ல படியாக பாப்பா பிறக்க தங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வதங்களையும் வேண்டி நன்றியுடன் விடை பெறுவது உங்கள் சௌமியன்

சௌமியன் சார் வாழ்த்துகள். திருமதியிடமும் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். அழகான் அறிவான பாப்பா பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

செளமியன் மற்றும் திருமதி செளமியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுக்கு அன்பான,அழகான,அறிவான ஆரோக்கியமான குட்டி பாப்பா பிறக்க இறைவனை வேணடுகிறேன்.

ஹாய் செளமியன் அண்ணா... எப்படி இருக்கீங்க? அண்ணி நல்லாருக்காங்களா? நான் நம்ம அறுசுவைக்கு வந்து ரொம்ப நாளாச்சு இன்னிக்கு சும்மா ஒரு டைம் பாத்துட்டு போலாம்னு வந்தேன் உங்க பதிவை பாத்தன்ன ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதான் சின்னதா ஒரு ரிப்ளை. அண்ணியை பத்திரமா பாத்துக்கங்க. அப்பப்ப அவங்க ஹெல்த் பத்தி எங்களுக்கு அப்டேட் பன்னிட்டேருங்கண்ணா......

நல்ல படியா உங்களுக்கு குட்டிப்பாப்பா பிறக்க எங்க வேண்டுதல்கள் என்னைக்கும் உண்டு......

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சகோதரர் செளமியன் மற்றும் அவரது மனைவிக்கும் எங்களுடைய குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.நல்ல ஆரோக்கியமான, அறிவான,அழகான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சந்தோஷமான செய்தி சொல்லிருக்கீங்க :-) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்பசந்தோஷம் சௌமியன் உங்கள் மனைவியை அன்போடும் அக்கரையோடும் கவனித்துக்கொள்ளுங்கள் மற்றும் நார்மல் டெலிவரியாக ஆரோக்கியத்துடன் அழகான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மிகவும் மகிழ்ச்சியான விஷயத்தோடு வந்திருக்கீங்க சகோதரர் சௌமியன் அவர்களே...இந்த நற்செய்தியை படித்ததுமே மனதிற்க்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது.
இறைவன் நம்பிக்கையாளரை நிச்சயம் கைவிடுவதில்லை என்பது உங்கள் விஷயத்தில் உறுதியாகிவிட்டது. தங்களுக்கும்,தங்கள் மனைவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ....
உங்கள் மனைவியின் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லுங்கள்.
தாயும்,சேயும் நல்ல ஆரோக்யத்தோடு இருக்க இறைவனை பிரார்த்திப்போம்...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சௌமியன் அண்ணா ரொம்ப சந்தோஷம்... நல்ல சேதி சொல்லிருக்கீங்க... காத்திருந்து கிடைக்கறதோட சந்தோஷம் ரொம்ப பெரிசு... வாழ்த்துக்கள் அண்ணா...

வித்யா பிரவீன்குமார்... :)

மிக மிக சந்தோசமான விஷயம் இதற்கு ஈடு வேறு எதுவும் இல்லை ...உங்களிருவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!
கடவுள் என்றென்றும் துணையிருப்பார்.

Don't Worry Be Happy.

ரொம்ப சந்தோஷமா இருக்கு செளமியன் அண்ணா குட்டி நல்ல படியா பிறக்க கடவுள்ட ப்ரேயர் பண்ணிக்குறேன்... :)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்