எனது மனைவி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள் -சௌமியன்

அன்பு உள்ளம் உடைய அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம் .எனது மனைவி தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் பிரச்சனை அனைத்தும் நிவர்த்தி ஆகி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள்.எங்களின் நிறைய doubts களை இங்கு தோழிகள் ஆகிய உங்களிடம் கே ட்டு அறிந்து கொண்டோம்.மற்றும் நிறைய தோழிகள் எங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னார்கள் .உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் இந்த சமயத்தில் எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் .தாய்மை பேறு பற்றி மருத்துவர் போல சொல்லும் தோழிகள் உள்ள இந்த தளத்தில் நானும் உறுப்பினர் என்று சொல்வதில் உள்ளம் மகிழ்கிறேன். எங்களுக்கு நல்ல படியாக பாப்பா பிறக்க தங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வதங்களையும் வேண்டி நன்றியுடன் விடை பெறுவது உங்கள் சௌமியன்

ரொம்ப சந்தோஷம் நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க அண்ணாக்கும் அண்ணிக்கும் என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு ராணிநிக்சன்

அன்புள்ளம் உடைய தோழிகள் அனைவர்க்கும் எனது வணக்கம்.அலுவலகத்தில் இணைய பயன்பாட்டு தடை உள்ளதால் உடன் பதில் தர முடிய வில்லை .எனக்கு ,எனது மனைவிக்கு ,எங்களுக்கு வரபோகும் பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் பாப்பா நல்லா பிறக்க சொன்ன தோழிகள் ரேவதி ,சுகந்தி ,வனிதா ,இம்மா ,ரேனுதேவா ,ரம்யாகார்த்திக் ,யாழிநிமுகில் ,நாகராணி, வினோஜா,ilaya ராஜிசெந்தில்,சுசரி ,மஞ்சுளா அரசு ,லதாவினி ,ஸ்வரன ,மீனாள் கிருஷ்ணன் ,புவனா ,அப்சரா,பாபு சார்,பூங்காற்று ,கோமதி ,கல்பனா சரவணன் ,சுமதி சந்திரன் ,ஹர்ஷா சுந்தரி அர்ஜுன்,ராணி ஜெசி ,வித்யா ,ஜெயலக்ஷிமி அனைவர்க்கும் எனது மற்றும் எனது மனைவி இன் நன்றிகள் மனம் நிறைந்து பதிவு செய்கிறோம் .சௌமியன் .

ஹாய் செளமியன் அண்ணா,
நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.....அண்னிக்கும் உங்களுக்கும் வரவிருக்கும் குட்டி மருமகப்பிள்லைக்கும் எனது வாழ்த்துக்கள்.....குட்டி வந்தப்பிறம் இப்பட்யே புது இழையில் சொல்லாமல் பெரிய ட்ரீட் கொடுக்கனும் சரியா....:))இப்ப எப்படி இருக்காங்க அண்னி?வாமிட் இருக்கா?நல்லா பசிக்குதா?இது எத்தனை மாதம்?நல்லா சாப்பிட சொல்லுங்க...கால்சியம்-எலும்பிர்கும்,அயர்ந்ரத்தம் இன்னும்பலவற்றிற்கும்,புட்ரதம் - குழந்தையின் எடைகூட்டவும் உதவும்.முடிந்தவரி இவற்றை உணவுகள்மூலம் எடுத்துக்க சொல்லுங்க.......நல்லா ரெஸ்ட் எடுத்து குழந்தையின் அசைவுகள்,நெளிவுகள் கவனிங்க,அந்த உணர்வு நல்லா இருக்கும்.......நீங்களும் தினமும் குட்டிகிட்ட பேசுங்க(இப்பவேதாம்ப்பா) அப்பதா அப்பாவும் குழந்தைக்கு பழக்கமாகும்......சரியா........:))

வாவ்.. ரொம்ப சந்தோசமான செய்தி சொல்லி இருக்கீங்க.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இவருக்கும்.. :)

மனதிற்க்கு மகிழ்வான செய்தி வாழ்த்துக்கள்... இன்றுதான் அறுசுவைக்கு வர முடிந்தது... மன்னிக்கவும். ஜாக்கிரதையாய் பார்த்துக்கோங்க...

அன்புடன்
THAVAM

செளமியன் அண்னா மிகவும் சந்தோஷம் வாழ்துக்கள் அண்னிக்கு என் வாழ்துக்களும் சொல்லவும் கவனமாக பார்த்துகவும் அண்னிக்கு இருந்த பிரச்சனை போல் தான் இப்போ எனக்கும் இருக்கு இறைவனை நம்பி தான் இருகோம் எங்களுகாக பிராத்தனை செய்யவும் நான் உங்கள் பதிவினை இப்போ தான் பார்தேன் தவறாக நினைக்க வேன்டாம்

மேலும் சில பதிவுகள்