hi thavamani sir..

சார் ,,எனக்கு தோட்ட வைக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்து ஒரு ஏக்கம்...
இப்பொது வீட்டுக்கு பின் அரை சிண்டு நிலத்தில் வீட்டுக்கு வேண்டிய செடிகள் வைக்க வேண்டும்...
அனால் மண் சரியில்லை ..உப்பு தண்ணி ...செடி வைப்பது வேஸ்ட் என்று சொல்றாங்க...
என் மகன் விவசாயம் சிய வேண்டும்..
நன் இப்பொது என சிய வேண்டும்....பதில் எதிர் பாத்து கொண்ட்றிகு ரேன்..

விவசாயத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களோட அரை செண்ட் நிலத்தில் மண்ணும் நீரும் சரியில்லை என சொல்லி இருக்கீங்க...
ஏதாவது செடிகள் வைத்து பாருங்க அப்போதானே தெரியும். எப்படி வளர்கிறது என சொல்லுங்கள்.

அன்புடன்
THAVAM

நிதி நீங்க துவங்கின இழையில் சந்தேகம் கேட்பதற்காக மன்னிக்கனும்...

தவமணி... இது தான் முதல் முறை நான் உங்ககிட்ட சந்தேகம் கேட்பது... கொய்யா மரத்துக்கும், மாதுளைக்கும் என்ன உரம் போடலாம்... மண் வளமா இல்லை... நிறைய காய்க்குது, ஆனால் காய் சில பெருசா, சில ரொம்ப சிறுசா இருக்கும்... ஆரமபத்தில் இருக்கும் காய் போல் சற்று நாள் போக போக இருப்பதில்லை. கூடவே ரோஜா செடிகளுக்கு என்ன உரம் வைக்கலாம்னும் சொல்லுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இழைத்தலைப்பு 'ஹாய் தவமணி சார்' ;) என்று இருப்பதால் இங்கு தவமணியிடம் யார் சந்தேகம் கேட்டாலும் தப்பில்லை. இமா பதில் சொல்வதுதான் தப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும்.... ஆர்வக் கோளாறு. ;))

உரம் பற்றி தெரியவில்லை. தவமணி வந்து சொல்லுவாங்க. ஊரில் குப்பை எல்லாம் இருக்கிற பெரிய மரங்களின் அடியில் புதைத்து விடுவேன். அதனால் பெரிதாக உரம் என்று போட்ட அனுபவம் இல்லை.

பொதுவாக எந்தச் செடியானாலும் காய்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அளவு சிறிதாகும். பெரிய தோட்டம் என்று இல்லாமல் வீட்டில் ஒன்றிரண்டு செடிகள் மட்டும் இருக்கும் என்பதால், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் காய் பெரிதாக வரவைக்கலாம். உயரமான மரமாக இருந்தால் இந்த ஐடியா சரிவராது. ;)

சென்ற முறை முடிவில் ஒரு கிளையில் எத்தனை காய்கள் கிடைத்தன? இப்போ அந்த எண்ணிக்கையை விட பிஞ்சுகளின் எண்ணிக்கை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (ஒன்றிரண்டு குறைவாக இருந்தால் கூட நல்லது.) ஆரோக்கியமாகத் தெரியும் பிஞ்சுகளை விட்டுவைத்து, மீதியை சிறிதாக இருக்கும் போதே பத்திரமாக நீக்கிவிடுங்கள். (கத்தரிக்கோல் கொண்டு நறுக்குவது நல்லது; முறுக்கி இழுத்து காயம் வரவைக்க வேண்டாம்.)

காய்கள் உருவான பின்பு உருவாகும் கிளைகளை வளரவிடாமல் நீக்கிவிட வேண்டும்.

நீர்... அளவாக இருக்கட்டும். போதாவிட்டாலும் பிரச்சினை, அதிகமானாலும் பிரச்சினை.

(பூஞ்செடிகளில், இப்படி மொட்டுக்களை நீக்கி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெரிய பூக்களைப் பெறலாம்.)

‍- இமா க்றிஸ்

நீங்க முதன்முதலா சந்தேகம் கேட்டதும், இமா மேடம் வந்து பதில் சொல்லி இருக்காங்க. இழை யார் ஆரம்பித்தாலும் கேள்விகளும் பதில்களும் பயனுள்ளதாக இருந்தால் சரிதான்.
இமாமேடம் சொன்னது போல் செடிகளில் இருந்து கீழே விழும் தழைகள் காய்கறிகளின் மிச்சங்கள் இப்படி மக்கக் கூடியது எதுவாக இருந்தாலுமே மரத்தின் அடியில் போட்டு மண்ணை மூடும் பொழுது அந்த பொருள்களை மக்க வைப்பதற்க்காக மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் இயற்கையாகவே உண்டாகிவிடும். அப்பொழுது உங்களின் மண் வளமானதாக மாறிவிடும்.
மரங்களாகட்டும் செடிகளாகட்டும் அதன் தேவைகளை அதுவே பூர்த்தி செய்து கொண்டு நமக்கும் பலன் அளிக்கூடியவை. மரத்தில் இருந்து விழும் இலைகளே அந்த மரத்துக்கு உணவாகி பலன் தரும்.
நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறையினாலும் காய்கள் சிறிதாக ஆகலாம். ஆகவே இப்பொழுது இருந்து ஆரம்பியுங்கள். இலை தழைகள், சமையலில் காய்கறி வேஸ்ட்கள் இப்படி எல்லாவற்றையும் மரங்களின் அடியில் புதைத்து வாருங்கள் அவை மக்கி உரமாகி நல்ல பலனை தர ஆரம்பிக்கும்.
ரோஜா செடிக்கு மண் புழு உரம் கிடைத்தால் வாங்கிப் போடுங்கள். நல்ல பலன் தரும்.

அன்புடன்
THAVAM

ஒகே சார் ..இந்த சீசன் ல .வரகூடிய சின்ன செடிகள் ..அது விதைய
எப்படி போடணும் ..கொஞ்சம் ஐடியா கொடுங்க coz எனக்கு
இது புதுசு ...நான் ட்ரை பண்றது சுச்செச்ஸ் அகனும் ..

இநத சீசன்ல வரும் செடிகள்னு பார்த்தால் கொத்தமல்லி விதைத்து பாருங்கள். பூச் செடிகள் வைத்து வளர்த்து பாருங்கள். வாழை மரம் கூட வளர்க்கலாம். வாழை எல்லாவகை தண்ணீரிலும் தாக்கு பிடித்து வளரும். சுண்டல் கடலை செடி போடலாம். மழைகாலம் என்பதால் கீரை வகைகள் செழிப்பாக வராது.
கொத்தமல்லி விதையை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். நன்கு மண்ணை கிளறி விட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாக புழுதியாக செய்து கொள்ளுங்கள். பின்பு உடைத்த கொத்தமல்லி விதைகளை நெருக்கமாக இல்லாமல் பரவலாக விதைத்துமேலே லேசாக மண்போட்டு மூட்டம் போடுங்கள். பின்பு தண்ணீர் விடுங்கள். ஒரு வாரத்தில் கொத்தமல்லி தழைத்து வரும். கொத்தமல்லி விதைகளை விதைக்கவென கேட்டு வாங்குங்கள்.

அன்புடன்
THAVAM

இமா... முதல் ஆளாய் ஓடி வந்து பதில் சொல்லி எனக்கு நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க... :) ரொம்ப ரொம்ப நன்றி இமா.

இமா, தவமணி... நான் இதுவரை எவ்வளவு காய்க்குதுன்னு கவனிச்சதில்லை... கொய்யா சீஸனில் தினமும் 3 - 5 காய் கிடைக்கும்... ஆனால் போன முறை சீசன் நடுவிலேயே தினமும் 1, 2 தான் கிடைத்தது. ஏன் குறைந்ததுன்னு தெரியல. ஆனா சுவை அபாரமா இருக்கும் எங்க வீட்டு கொய்யா. மாதுளை ஒரு ரகம்... சீஸன் நடுவில் நல்லா இருக்கும், ஆரம்பத்திலும், கடைசியிலும் பிஞ்சாகவே மரத்திலேயே அழுகி போகும். ;( சப்போட்டா ரொம்ப குட்டி குட்டியா இருக்க ரகம்... நிறைய காய்க்காது, ஆனா காய்க்கும் சிலவும் ரொம்ப சுவையானவை. சீதாபழம் பெரிய மரமா இருக்குறது நிறைய காய்க்கும்... நல்லாவும் இருக்கும். ஆனா சின்ன மரத்தில் பிஞ்சாவே விழுந்து போகும்.

இனி நீங்க இருவரும் சொன்ன மாதிரி கீழே காய்கறி வேஸ்ட் போட்டு வைக்க போறேன்... இப்போவே மரத்தில் இருந்து விழும் இலைகள் அங்கையே தான் மக்கி போகுது, எடுப்பதில்லை. காய்கறி வேஸ்ட் போட்டு வெச்சு அடுத்த சீஸனில் எப்படி காய்ச்சது எல்லா மரமும்னு வந்து சொல்றேன் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள சகோதரற்கு நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன் நான் தொட்டிஇல் ரோஜா செடி வளர்க்கிறேன் அதற்கு என்ன உரம் போடுவது என்று கூறுங்கள் எனது செடியில் வெயில் சரியாக படும் வசதி இல்லை அதில் எதாவுது பிரச்சனை வருமா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சரியான முறையில் நீரும் வெளிச்சமும் சத்துக்களும் கிடைத்தால்தானே செடி நன்கு வளரும்... ரோஜா செடிக்கென தனியாக உரங்கள் ஏதுமில்லை... சமையல் செய்ய பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகளே போதுமானது, நுண்ணூட்ட சத்து டானிக்குகள் வந்துள்ளன அவற்றையும் பயன் படுத்தலாம்.

அன்புடன்
THAVAM

நீங்கள் சொன்னதுபோல் உங்கள் தோட்டத்திற்கு காய்கறி வேஸ்ட், மரத்தில் இருந்து விழும் இலைகள் போட்டீர்களா. உங்களுடைய கொய்யா, மாதுளை, சப்போட்டா இந்த சீசனில் நன்றாக காய்த்ததா. நல்ல முன்னெற்றம் உண்டா. எனக்கு தோட்டம் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்களுக்கு இடம் சிறிதும் இல்லை. ஊரில் அம்மா வீட்டில் நிறைய மரங்கள் இருக்கின்றன (மா, கொய்யா, நெல்லி, முந்திரி, தென்னை, பலா, ரோஜா,சில crotons, பெயர் தெரியா சில பூச்செடிகள்).

நான் நிறைய நாட்களாக அறுசுவைக்கு வருவேன், படிப்பேன், போய் விடுவேன். ஏதேனும் கேட்கவோ, தெரிந்ததை சொல்லவோ தயங்கினேன். இதில் தவறுகள் ஏதெனும் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்