வேர்கடலை சுண்டல்

தேதி: November 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

1. பச்சை வேர்கடலை - 200 கிராம்
2. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
3. தனியா - 1 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 2 - 3
5. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
6. உப்பு
7. பெருங்காயம்
8. எண்ணெய் - 3 தேக்கரண்டி
9. கடுகு - தாளிக்க
10. கறிவேப்பிலை


 

வேர்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
தனியா, கடலை பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல் அனைத்தையும் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
இதில் வேக வைத்த கடலை சேர்த்து, பொடியையும் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும். சுவையான வேர்கடலை சுண்டல் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வாழ்த்துகள் எனக்கு பிடிச்ச குறிப்பாவே தர்றீங்க பா ஈஸியா செய்யலாம் மழைல சாப்பிட நல்லா இருக்கும்ல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மழை நேரம்னு தானே நமக்கு இது போல் குறிப்பெல்லாம் நினைவுக்கே வருது... இரண்டு நாள் முன்னாடி பச்சை கடலை கிடைச்சுது... வாங்கி வந்தேன்... உடனே செய்ய தோனிடுச்சு. படம் எடுக்க முடியல, அதான் குறிப்பை மட்டும் போட்டேன். அவசியம் செய்து பாருங்க... முடிஞ்சா இன்னும் இரண்டு நாட்களில் நான் படத்தோடு தரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா