பெல்ட் போட்டால் வயிறு குறையுமா?

வணக்கம் தோழிகளே! எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆகிறது, இரண்டுமே சிசேரியன்.நான் வசிப்பது ஜேர்மனியில், இங்கே குழந்தை பிறந்தபின் ஆபரேஷனாக இருந்தால் 3 மாதங்கள் கழித்தும் நார்மல் என்றால் 1மாதத்திற்கு பின்னும் வயிறு உள்ளேபோவதெற்கெனெ சில பயிற்சிகள் சொல்லித்தருவார்கள். இருந்தும் என் வயிறு முழுவதும் குறையவில்லை. நான் பெல்ட் போடலாமா? பெல்ட் போட்டால் வயிறு குறையுமா? ப்ளீஸ் உடனே பதில் தாருங்கள்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயம் சொல்வாங்க..எனக்கு பெல்ட் ஒத்துவந்ததே இல்லை நான் உபயோகித்ததும் இல்லை..இப்பவும் ஒன்னும் லேட்டாகலை இப்பவும் அதே வயிறுக்கான எக்செர்சைஸ் பண்ணுங்க கண்டிப்பா ஒவ்வொரு மாசமும் குறைந்து குறைந்து பழைய மாதிரி ஆகிடலாம்

நான் பெல்ட் யூஸ் பண்ணினேன். ஆனா பெரிய மாற்றம் எதுவும் இல்ல. பெல்ட்லாம் வேண்டாம் ஒழுங்கா பால் குடுத்தா வயிறு சரியாகும்னு சொன்னாங்க. அப்பறம் கூகிள்ல தேடிபார்த்தேன். எல்லாரும் சொல்றமாதிரி பால் குடுத்தா சரியாகும்னு இருந்துது. அதுனால இப்போ பெல்ட் பீரோல தூங்குது.

பெல்ட் கண்டிப்பா வேணும்னா டாக்டர்ட கேட்டு வாங்கிபோட்டுக்கோங்க. நீங்களா வாங்கிகாதீங்க. அது தேவையில்லாத பிரச்சனை.

KEEP SMILING ALWAYS :-)

பெல்ட் வேஸ்ட். அவங்க சொல்லி தந்த பயிற்சியை விடாம செய்யுங்க... கூடவே துணி அலச முடியுமா பாருங்க... துணி குனிஞ்சு நிமுந்து துணி அலசுவது நல்ல எக்ஸர்ஸைஸ்... அனுபவத்தில் சொல்றேன்... வயிறு இருந்த இடம் தெரியாம காணாம போகும். இல்லன்னா அதே போல் எக்ஸர்ஸைஸ் நீங்களே தினமும் 30 முறை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி தோழிகளே, நான் முயற்சி செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்