பா பா ஒயிட் ஷீப்

தேதி: November 5, 2011

4
Average: 4 (7 votes)

 

காட்டன் பஞ்சு (உருண்டை வடிவில் கிடைப்பது) - சிறிது
வர்ண கடதாசிகள் - கறுப்பு, நீலம், பிரவுன், பச்சை, சிவப்பு, மஞ்சள்.
ப்ளாஸ்டிக் கண்கள் - 2 பெரிது, 2 சிறிது
கத்தரிக்கோல்
க்ளூ
பூ வடிவிலான பன்ச் / கட்டர்

 

பா பா ஒயிட் ஷீப் (Baa Baa White Sheep) செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வெள்ளைத் தாளில் மேக வடிவில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிரவுன் நிற தாளில் மரம் மற்றும் கிளைகளையும் பச்சை தாளில் மேக வடிவில் இலைகூட்டத்தையும் வெட்டவும்.
பூ கட்டரால் அல்லது கத்தரிகோலால் பூக்களையும், பச்சை தாளில் புற்களையும் வெட்டவும்.
ஆட்டின் தலைப்பகுதிக்கு வெள்ளைத்தாளில் ஒன்று பெரிதும் ஒன்று சிறிதுமாக 2 ஓவல் வடிவங்களையும், கால் பகுதிக்கு பிரவுன் தாளில் 8 சிறிய நீள துண்டுகளையும் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதன் அடியில் மார்கரால் ஆட்டின் குளம்பு(விரல்) பகுதியில் கலர் பண்ணவும்.
நீல கடதாசியில் 3 அல்லது 4 அங்குல அகலத்தில் வெட்டி கறுப்பு தாளின் மேல் பக்கத்தில் ஒட்டவும் (வானம்).
மேகங்களை வானத்தின் மேல் ஒட்டவும்.
கறுப்புதாளின் ஒரு கரையில் மரத்தை ஒட்டி அதன் மேல் இலை கூட்டங்களையும் பூக்களையும் விரும்பியவாறு ஒட்டவும். பின்னர் கீழே தெரியும் கறுப்பு தாளில் பென்சிலால் ஆட்டினதும் ஆட்டு குட்டியினதும் புற உருவை வரையவும். (ஒரு பெரிய கிடையான ஓவல் உடம்பாகவும் சிறிய நீளமான ஓவல் வடிவம் தலையாகவும் வரைந்து கால்களையும் வரையவும்)
பின்னர் கால்களை ஒட்டவும். உடம்பு பகுதிக்கு க்ளூ தடவி பஞ்சை ஒட்டவும்.
இவ்வாறு இரு ஆடுகளுக்கும் ஒட்டவும்.
பின்னர் தலைக்கு வெட்டிய ஓவல் வடிவங்களை தலை பகுதியில் ஒட்டி அதன் மேல் ப்ளாஸ்டிக் கண்களை ஒட்டவும். மார்க்கரால் வாய் வடிவில் வரையவும். தலையின் மேல் பகுதியில் சிறிது பஞ்சை ஒட்டவும்.
கறுப்பு தாளின் அடிப்பகுதியில் புற்களையும், மீதி பூக்களையும் ஒட்டி அழகுப்படுத்தவும்.
குழந்தைகள் செய்யக்கூடிய அழகிய ஒட்டு சித்திரம் தயார். நர்மதாவின் 3 வயது மகள் செய்து பெயரிட்ட 'பா பா ஒயிட் ஷீப்'......இது)

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் !!! ரொம்ப அழகா செஞ்சிருக்காங்க .. இது மாறி நிறைய செய்யணும் நிலா குட்டி ...

சூப்பரா அழகா இருக்கு வாழ்த்துகள் குட்டிமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அச்சோ இவ்ளோ அழகா செய்திருக்கீங்க... சுத்தி போடுங்க நர்மதாவின் மகளுக்கும் பா பா ஒயிட் ஷீப்புக்கும் :-)

KEEP SMILING ALWAYS :-)

இவ்வளவு அழகா செய்து காட்டிய உங்க குட்டி பொண்ணுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். அம்மாவ போல பொண்ணும் க்ராஃப்ட்ல அசத்துறாங்க.

உங்க பாப்பா ரொம்ப கியூட்டா செய்திருக்காங்க... கலக்கல். இன்னும் நிறைய கற்றுக்கொடுங்க. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) சீனரி வடிவா இருக்கு நர்மதா. (செம்மறியைப் பார்க்க சின்னன்ல முயல் செய்த நினைவு வருது எனக்கு.) சின்னப் பொம்பிளைக்கு என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

குட்டி பாப்பா மாதிரியே அவ்வளோ அழகு..இதை பார்த்து நானும் என் குழந்தைக்கு செய்ய சொல்ல போரேன்... இன்னும் நிறைய செய்து அனுப்புங்க...all the best...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

குட்டி ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சின்ன பிள்ளைங்களுக்கு சொல்லி குடுக்க சூப்பரா இருக்கும் ரொம்ப அழகா இருக்கு....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அன்பின் அறுசுவை டீம் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நேரம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்கு :)

இது இலகுவாக குழந்தைகள் செய்யக்கூடியது. ஆனால் அவர்களை செய்ய சொல்லிவிட்டு படமெடுப்பதுதான் 'மிகவும்' சிரமம் ;). 'hoppity hoppity bunny, 'Meow Meow Pussycat', கோழிக்குஞ்சு எல்லாம் பண்ணி இருக்கோம். ஆனால் படமெடுக்க ஓரளவு ஒத்துழைத்தது இதற்குத்தான்:)
அன்புடன்,
-நர்மதா :)

குட்டி ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க...வாழ்த்துக்கள்....

idhu romba superb va irukku. Naanum idha try panniten, face dhan konjam nalla varla.but its so nice.thk u.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)