ஜவ்வரிசி அல்வா

தேதி: November 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (16 votes)

 

ஜவ்வரிசி - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பிஸ்தா - தேவைக்கு
நெய் - ஒரு தேக்கரண்டி
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை


 

ஜவ்வரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து பின் கொதிக்கும் நீரில் போட்டு பாதி வேக விட்டு வடிகட்டி வைக்கவும்.
இப்போது 2 கப் நீரில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் ஃபுட் கலர் சேர்த்து பாதி வெந்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும். அடிக்கடி பாத்திரத்தில் ஒட்டி விடாமல் கிளறி விடவும்.
ஜவ்வரிசி முழுவதும் வெந்து கண்ணாடி போல் ஆனதும் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய பிஸ்தா தூவி ஆற விடவும்.
ஆறியதும் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகளாக்கவும். விரும்பினால் செய்யும் போதே கொஞ்சம் நட்ஸ் வகை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நாளைக்கு பின்னாடி வந்தேன், முகப்புல பாத்து அசந்துட்டேன்.
நம்பவே முடியல, ஜவ்வரிசி ல அல்வா ஹா? "வித்தியாச வனிதா" இப்படி தான் இனி கூப்பிடுவேன், ரொம்ப பிரமாதம். வாழ்த்துக்கள், ரொம்ப சிம்பிள் ஸ்வீட், சோ ஸ்வீட். :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அல்வா சூப்பர். வாழ்த்துக்கள் ஜவ்வரிசி அல்வா இப்பதான் கேள்விப்படுறேன். எல்லா பொருட்களும் வீட்டில் இருக்கு செஞ்சு பார்த்துடுறேன். ஒரு டவுட் பாதி வெந்த ஜவ்வரிசியை சீனி பாகுல சேர்த்தா முழுவதும் வெந்துடுமா? படத்துல பார்க்கும்போது அழகா வந்து இருக்கு.

வனி முடில பா கலக்குங்க கலக்குங்க கலக்கீட்டே இருங்க சூப்பரா இருக்கு பா உங்களை மிஞ்ச ஆளே இல்லை சூப்பரா இருக்கு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எதுலலாம் ஹல்வா செய்யலாம்னு தூங்காம யோசிக்கிரிங்களா!. இதெல்லாம் நீங்களா ட்ரை பன்னுரிங்களா இல்ல யார் மூலமாவது கத்துகிட்டிங்களா?
எது எப்படியோ ஹல்வா அருமை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. விரைவில் செய்து பார்க்கிறேன் by Elaya.G

vanitha madam neenga picture la potta maadir alva alaga varuma maximum try panra recipys colr change aaguthu so keten

வனிதா அல்வா சூப்பர்ர்ர்.நான் உங்கள வேற இடத்துல தேடிட்டு இருந்தேன் நீங்க அல்வா ரெடி பன்னுனிங்கலா.சரி அல்வா ரொம்பவே அலகா இருக்குங்க பார்ர்க்கும் போதே எடுத்து வாயில போடனும்னு தோனுதுங்க.parsal thanga pa. ammavin payasam ?

வாவ் ஹல்வா கலர்புல்லா சாப்பிடனும் போல இருக்கு வனி.நெய் கூட கம்மியா தான் யூஸ் பண்ணியிருகிங்க.சாப்பிட மிருதுவான அல்வாவா இருக்குமா?விருப்பபட்டியலில் சேர்த்திருக்கேன்பா.கட்டாயம் செய்துபார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ரொம்ப அழகான அல்வா :-)

KEEP SMILING ALWAYS :-)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

தோழிகளே... நான் பயன்படுத்தியது ரொம்ப சின்ன ஜவ்வரிசி, சீக்கிரம் வேகும், நீங்க பயன்படுத்தும் ஜவ்வரிசிக்கு ஏற்ற மாதிரி முழுசா வேக வைத்தோ, 3/4 பதம் வேக வைத்தோ கூட சேர்க்கலாம்.

சுகி... வராத விருந்தினரெல்லாம் வந்திருக்கீங்க... அதான் ஸ்பெஷலா ஸ்வீட் ;) மிக்க நன்றி.

வினோ... மிக்க நன்றி. சீனி பாகில் சேர்த்தா வேகாது, அதனால் தான் கரைத்ததுமே சேர்த்திருக்கேன். பாகு பதம் வரும் முன் வெந்துடனும். இல்லன்னா பெட்டர் முழுசா வேக வைத்து சேருங்க. ஒன்னும் சுவை மாறாது. நான் வைத்திருக்கும் ரொம்ப சின்ன ஜவ்வரிசி வேக நேரம் எடுப்பதில்லை, அதனால் இப்படி செய்தேன். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

ரேணு... மிக்க நன்றி. நீங்க சொன்னா சரி தான் ;)

இளையா... மிக்க நன்றி. //நீங்களா ட்ரை பன்னுரிங்களா இல்ல யார் மூலமாவது கத்துகிட்டிங்களா?// - கண்டிப்பா நிறைய கத்துகிட்டது தான்... பல ஊர் மக்களை வெளி நாட்டில் பார்க்கும்போது அவங்க அறிமுகப்படுத்தும் புது புது சமையல் கத்துக்க வேண்டியது தான். ;)

தேவா கௌதம்... மிக்க நன்றி. நீங்க சொல்றது எனக்கு புரியல... என்னுடைய குறிப்புகள் ட்ரை பண்ணி வரலன்னு சொல்றீங்களா, இல்லை பொதுவா குறிப்புகள் ட்ரை பண்ணி வரலன்னு சொல்றீங்களா? சுவையும் வரலயா இல்லை கலர் தான் பிரெச்சனையா? கலர் மட்டும் தான்னா அது நீங்க பயன்படுத்தும் கலர் மற்றும் அளவை பொருத்தது. சுவை வரலன்னா அளவுகளை கவனிங்க. இதே போல் செய்தால், இதே போல் தான் வரும்... செய்யும்போதே தானே படம் எடுத்து அனுப்பறோம்... அதனால நம்பி செய்யுங்க. :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி.

மாயா... நீங்க தேடிய இடத்திலும் பதிவிட்டேன். பாயாசம் வந்து ரொம்ப நாள் ஆச்சு... உங்களை தான் அந்த பக்கம் காணோம் ;) பார்சல் அவசியம் அனுப்பிடலாம். மிக்க நன்றி.

சுந்தரி... ஜவ்வரிசிக்கும் கெட்டி ஆகும் தன்மை இல்லையே... லேசா ஜவ்வு போல தான் இருக்கும்... கெட்டியா இருக்காது சாஃப்ட்டா தான் இருக்கும். அவசியம் ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி. :)

நாகா... ரொம்ப நன்றிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரே வா. இப்படி ஒரு கலர்ல சுண்டி இழுக்கற மாதிரி ஒரு ஸ்வீட் வனிக்கா. ரொம்ப ரொம்ப ஈஸியா சூப்பரா செய்துருக்கீங்க. நிச்சயம் செய்து பார்ப்பேன். விருப்பப்பட்டியல்ல சேர்த்து வச்சுட்டேன்.

gr8 dish. kandipa senju papen. epa dan cook panna kathukitu eruken. just ethavathu kathukalamnu ovoru site poi thedikitu erunthen. chancea ela gr8 job madam. keep rocking. ena mathri erukiravangaluku elam ennum neraya solli kudunga pls.

yaravathu enaku epdi tamil la message type panrathunu help pannunga plssssssss

யாழினி... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நான் ஆரம்பத்தில் சொல்லி இருக்க மாதிரி முழுசா வேகவைத்து சேருங்க. மிக்க நன்றி. :)

பப்புலக்‌ஷ்மி... அன்பு தோழி அறுசுவையில் இப்போ தான் மெம்பர் ஆயிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... உங்க முதல் பதிவை படிக்கவே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. அறுசுவையில் வந்துட்டீங்க... இனி குறிப்பு தேடி வேறு தளம் பக்கம் போகவே மாட்டீங்க... எல்லாம் இங்கையே இருக்கே :) தமிழில் பதிவிட கீழே ”அறுசுவை” என்ற தலைப்பின் கீழ் “தமிழ் எழுத்துதவி” என்றிருக்கும்... அதை க்லிக் செய்து பாருங்க, புரியும். :) சுலபம் தான். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்க பதிலை பார்த்த பிறகு தான் பாயாசத்தை தேடி கண்டேன் அங்க பதில் போட்டா பாப்பிங்களோ இல்லையோனிதான் இங்க பதில் போடுரேன். நாளைக்கு எங்க வீட்ல பாயாசம். வனி உன்மைய சொல்லபோனா எனக்கு சமையல் தெரியாது அறுசுவைக்கு வந்த பிறகு தான் நிறைய தொழிகளும் நிறைய குரிப்புகளும் எனக்கு கிடச்சிருக்குங்க. வனி நீங்க எங்க வீட்டு பக்கம்னா நான் செய்ற பாயாசத்தை ருசிக்க சொல்லி தருவேன் நன்றி அன்பு வனி

கலக்கலோ கலக்கல். எனக்கு ஜவ்வரிசி ரொம்ப பிடிக்கும், உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சி. எப்போ பார்த்தாலும் ஜவ்வரிசி பாயசம் செய்து போரடித்து இருந்தது. இந்த வாரம் உடனே செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

இதுவும் கடந்து போகும் !

ஆஹா... வனி, உங்க ஜவ்வரிசி அல்வா சூப்பரா இருக்கு! (பனீரை முடிச்சிட்டு ஜவ்வரிசி பக்கம் வந்திருக்கிங்கப்போல?!! :) ம்ம்ம். நடக்கட்டும், நடக்கட்டும்!) அந்த கடைசிப்படம் அத்தனை அழகா இருக்கு! அப்படியே கலர் சுண்டி இழுக்குது! :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் வனி!!

செய்முறையும் ரொம்ப சுலபமா, நெய்கூட அளவு ரொம்ப கம்மியா இருக்கு! :) பிறகென்ன, உடனே செய்திடறேன்! ஒரு சின்ன சந்தேகம் வனி. ஊறிய ஜவ்வரிசியை குக்கரில் போட்டும் வேகவைக்கலாம்தானே?! இல்லை, ரொம்ப குழைந்துவிடும் என்று, தனியாக வேக வைத்தீர்களா?!

அன்புடன்
சுஸ்ரீ

கலக்கல்ஸ்... இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... Vani rocks as usual ...

99% Complete is 100% Incomplete.

வனிதா,
ஜவ்வரிசியில் அல்வா புதுமை.பிஸ்தாவுடன் ரொம்ப அழகா இருக்கு.செய்து பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் முதலில் உங்க பாம்பே அல்வா இருக்கு.விரைவில் செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.

கலர் கண்ணை பறிக்குது.கடையில் விற்பது போலவே பதம் தெரியுது ;)
நாக்குல எச்சை வர வெச்சிட்டிங்க வனி. ரொம்ப சிம்பிளா எல்லாரும் பாராட்டக் கூடிய ஸ்வீட்.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ் சூப்பர் பார்க்கவே அழகா இருக்கு ... நானும் ட்ரை பண்றன். விருப்ப பட்டியலில் சேர்த்தாயிற்று ....

வனி எளிமையான சூப்பரான அல்வா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்க சூப்பர் , நல்ல கலரா இருக்கு ?

சூப்பர் அல்வா..... பார்க்கும் போதே சாப்பிட்டு காலி செய்யனும் போல
இருக்கு.... இதோட கலர் என்னை ரொம்ப ஈர்குது.... ப்ளீஸ் எனக்கு அப்படியே பார்சல் செய்துவிடுங்கள்.....

மாயா... செய்தீங்களா பாயாசமின்று? மற்ற கவலை எல்லாம் ஓரம் வெச்சுட்டு இப்படியே சிரிச்சுகிட்டு நல்லா பாயாசம் சாப்பிட்டு மகிழ்ச்சியா இருக்கனும்... சரியா? :) அறுசுவைக்கு வந்துட்டீங்க... இனி குறிப்புகள், தோழிகள் மட்டுமில்லை... எல்லாமே கிடைக்கும். உங்க வீட்டுலயே தான் இருக்கேன்னு நினைச்சுக்கங்க... ;) நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.

மகி... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு எப்படி வந்ததுன்னும் சொல்லுங்க :)

சுஸ்ரீ... மிக்க நன்றி. பாயசத்துக்கும் சரி, இதுக்கும் சரி குக்கரில் போட்டு தான் வெச்சேன். பாயாசம் செய்தப்போ 1 விசில் 5 நிமிஷம் சிம்மில் வெச்சேன், இதுக்கு 1 விசில் மட்டுமே வெச்சு எடுத்துட்டேன். குழையாது. திறந்து பார்த்து வேகாம இருக்க மாதிரி இருந்தா கூட ஒரு 5 நிமிஷம் சிம்மில் வெச்சு எடுத்துக்கங்க. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

கலா தேவி... ரொம்ப சந்தோஷமா இருக்கு :) மிக்க நன்றி.

ஹர்ஷா... கண்டிப்பா செய்து பாருங்க. கடைகளில் கிடைப்பது தான்... வேறு எதாவது பெயர் வெச்சிருப்பாங்க அவங்க, நான் வாயில் நுழையிற மாதிரி வெச்சுட்டேன்னு நினைக்கிறேன் ;) மிக்க நன்றி.

ரம்யா... ரொம்ப நன்றிங்க... சிம்பிளான சமையல் தானே நமக்கு செய்ய நேரம் இருக்கு ;) அதான் முடிஞ்சதை செய்து அனுப்பறேன். நானும் பீட்ஸா ட்ரை பண்ணனும்னு தான் பார்க்கிறேன்... ஊருக்கு போய் தான் செய்யனும்.

ஜனனி... மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க. :)

சுவர்ணா... ரொம்ப நன்றி சுவர்ணா. :)

வர்தினி... மிக்க நன்றி. கலர் கொஞ்சம் கூடி போச்சு ;) [ரகசியம் யாரிடமும் சொல்லாதீங்க. ஹிஹிஹி]

தீபா... நான் சாப்பிட்டு தீத்துட்டனே ;( உங்களுக்காக செய்து பார்சல் அனுப்பிடறேன்.. தீபாக்கு இல்லாததா?? ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா இப்படி கலக்கல குறிப்பு கொடுத்து அசத்துறீங்களே. ஈத் லீவெல்லாம் முடிஞ்சி அருசுவைக்குள்ள வந்தா எல்லாம் அசத்துறீங்க. அல்வா சூப்பரா இருக்குகா. என்கிட்ட சின்ன ஜவ்வரிசி தான் இருக்கு. அத வச்சி செய்யலாமா? அத எத்தனை மணி நேரம் ஊற வைக்கனும். ப்ளீஸ் சொன்னீங்கன்னா வர வீக் என்ட்ல செய்வேன்கா.

நானும் சின்ன ஜவ்வரிசி தான் பயபடுத்தி இருக்கேன். எதை பயன்படுத்தினாலும் நல்லா இருக்கும், வேகும் நேரம் தான் பார்க்கனும். முழுசா வேக வைத்து சேர்ப்பதுன்னா எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 1 மணி நேரம் ஊறினாலும் போதும், குக்கரில் வைத்து எடுங்க 1 விசில். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமா செய்து அசத்துவதுதான் வனிதாவுக்கு கைவந்த கலையாச்சே!இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை!யம்மி அல்வா.

Eat healthy

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா நான் செஞ்சி பார்த்துட்டேன். என்ன இனிப்பு கொஞ்சம் தூக்கல். அவ்ளோதான். ஆனா சூப்பரா இருந்துச்சுனு சொன்னாங்க என் ஹஸ். ரொம்ப தாங்க்ஸ்கா. அருசுவை புண்ணியத்துல நானும் சமையல் எல்லாம் செய்ய கத்துட்டேன். தாங்க்ஸ்கா. ப்ரண்ட்ஸ் எல்லாரும் வித்தியாசமா இருக்குனு சொன்னாங்க. அவங்க பாராட்டு உங்களுக்கே சமர்ப்பணம். தாங்க் யூ சோ மச்.

செய்துட்டீங்களா??? ரொம்ப சந்தோஷங்க. :) சர்க்கரை அளவை உங்க டேஸ்ட்டுக்கு மாற்றிக்கங்க இனி செய்யும்போது ;) ரொம்ப ரொம்ப நன்றி நசீம். மறக்காம பின்னூட்டம் கொடுத்து சந்தோஷப்படுத்திட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
எப்படி இருக்கிங்க?! ஒவ்வொரு நாளும் வந்து பதிவு போடனும்னு நினைச்சிட்டே இருந்தேன்... இதோ இதோன்னு, இத்தனை நாளாகிடிச்சி... :)
உங்க குறிப்பு வெளிவந்து நான் பதிவு போட்ட அன்று, ஈவினிங்கே ஜவ்வரிசி அல்வா செய்து சாப்பிட்டும் பார்த்திட்டேன்! அல்வா, புது விதமா, எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது!! :) நன்றி வனி!

அன்புடன்
சுஸ்ரீ

நாங்க நலம்.... நீங்க எப்படி இருக்கீங்க? மிக்க நன்றி. எத்தனை நாள் ஆனாலும் மறக்காம வந்து பின்னூட்டம் கொடுத்ததே பெரும் மகிழ்ச்சி :) ரொம்ப சந்தோஷம் சுஸ்ரீ. மீண்டும் என் நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நான் இன்று உங்க ஜவ்வரிசி அல்வா செய்தேன் ,உங்க கடைசி படத்துல இருக்குற மாதிரி கட் பண்ற மாதிரி என்னக்கு வரலக்கா,என்ன தப்பு பண்ணேன்னு தெரியல,அத இன்னும் கொஞ்சம் அடுப்புல வைச்சு கிண்டலாம,உங்க ரெசீபிஸ் எல்லாம் ரொம்ப சூப்பர இருக்குக்கா

அடடா... கட் பண்ண முடியலயா... :( ஆமாம் இன்னும் கொஞ்சம் அடுப்பில் இருந்திருக்கனும்... பாகு பதம் வந்து நெய் திரண்டு வெளிய வரும், அல்வா திரண்டு வரும். அப்போ எடுத்து செட் பண்ணா கட் பண்ணலாம். இனி திரும்ப அடுப்பில் வைக்க வேண்டாம்... தூக்கி செட் பண்ணி ஃப்ரிட்ஜில் (ஃப்ரீஜர்ல இல்லை) போடுங்க. செட் ஆயிடும். அப்பரம் கட் பண்ணுங்க. செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி பசரியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா