பாம்-பாம் சிலந்தி

தேதி: November 8, 2011

4
Average: 3.7 (10 votes)

 

கறுப்பு பாம் - பாம்(Pom-Pom) - 1 பெரிது, 1 சிறிது
கறுப்பு பைப் க்ளீனர் - 3 சம அளவில்
க்ளூ
ப்ளாஸ்டிக் கண்கள் - 2

 

இரு கறுப்பு பாம்-பாம்களையும் சேர்த்து க்ளூவால் ஒட்டவும்.
சிறிய பாம்-பாம்(தலை) இல் இரு ப்ளாஸ்டிக் கண்களையும் ஒட்டி நன்கு காய விடவும்.
பின்னர் பைப் க்ளீனர்களை நடுவில் பிடித்து ஒன்றாக சேர்த்து முறுக்கவும்.
பாம்-பாமின் பின் பக்கத்தில் (தலை மற்றும் உடம்பு சேருமிடத்தில்) சிறிது க்ளூ பூசவும். அதேபோல் பைப் க்ளீனர் முறுக்கிய இடத்திலும் க்ளூ பூசவும்.
இரண்டையும் சேர்த்து ஒட்டி மேலேயும் சிறிது க்ளூ ஊற்றி காய விடவும்.
நன்கு காய்ந்ததும் பைப் க்ளீனர்களை கால்களைப் போல சிறிது வளைத்து விடவும். மிக இலகுவாக குழந்தைகள் செய்யக்கூடிய சிலந்தி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்யூட்டாக இருக்கிறார் சிலந்தியர். ;)

‍- இமா க்றிஸ்

பாம் பாம் சிலந்தி அழகா இருக்கு நர்மதா. கடைசி படத்துல சிலந்தி வலை வரைஞ்சு அத நிற்க வைச்சு இருக்கறது சூப்பரா இருக்கு.

சூப்பரோ சூப்பர் சிலந்தி அழகா இருக்கு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சோ கியூட்... ;) ரொம்ப அழகா செய்திருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

supre idea nila.

சூப்பர் ரொம்ப அழகா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

அன்பின் அறுசுவை டீம் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதே போல எறும்பு, கட்டபில்லர் (caterpillar), கரடிக்குட்டி, கோழிக்குஞ்சு, ஸ்னோமான்(Snowman) எல்லாம் செய்யலாம். சிலதுக்கு படம் எடுத்திருக்கேன். நேரம் கிடைக்கும்போது அறுசுவைக்கு அனுப்புகிறேன் :)
அன்புடன்,
-நர்மதா :)

ரொம்ப அழகா செய்திருக்கீங்க....வாழ்த்துக்கள் நர்மதா....