குழந்தை கை சப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

குழந்தை கை சப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?
என் மகனுக்கு 3 1/2 வாயதாகிறது. பள்ளிக்கு அனுப்பவில்லை. எதற்க்கெடுத்தாலும் அழுது அடம் பிடிக்கறான்.என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. pls help me.

அடம் பிடிப்பது அழுவதெல்லாம் பள்ளிக்கு அனுப்பினாலே குறைந்துவிடும். அதனால் முதல்ல பள்ளியில் விடுங்க. கை சப்புவது அதிகமா இருந்தா வேப்ப எண்ணெய் விரலில் தடவி விடுங்க. இல்லைன்னா கைய வைக்கும்போது எடுத்து எடுத்து விடுங்க, அதுவே போதும். கொஞ்ச நாளில் விட்டுடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா. வேப்பஎண்ணை ட்ரிட்மெண்ட்+கைய வைக்கும்போது எடுத்து விடுவது இரண்டும் பண்ணியாச்சு.no use. what i ll do.

ஹா ஹா உங்க பையன் பயங்கர சுட்டிதான் போங்க;) வேப்பெண்ணையும் சாப்பிட ஆரம்பிச்சிட்டாரா;-))

பல்லு முன்னாடி தள்ளின பயங்கரமான போட்டோக்கள் நிறய சேகரிச்சு அவன்கிட்ட காட்டுங்க...இதெல்லாம் கைசூப்புனதுனாலதான் இவங்களுக்கு இப்படி ஆச்சுன்னு கொஞ்சம் கதையும் சேர்த்து சொல்லுங்க..உனக்கும் இப்படிதான் ஆகும்னு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எடுத்து வுடுங்க;)) ...ஸ்லோ ட்ரீட்மெண்ட்டுதான்....மூன்றரை வயசுக் குழந்தைங்கிறதுனாலதான் இதைச் சொல்றேன்... கதை சொல்லிப் புரியாத சின்னக்குழந்தைக்கு எல்லாம் வேப்பெண்ணை ட்ரீட்மெண்ட்டுதான்...சிலக் குழந்தைகள் சாம்பார் வச்சாக் கூட சூப்பரது இல்லை;)

கைசூப்பினாலும் பரவாயில்லை ஸ்கூலுக்கு அனுப்புங்க டீச்சர் எப்படியும் (நல்)வழிக்கு கொண்டு வந்துடுவார்;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்