இருமல்,தும்மல்,சளி

என் குழந்தை (10 மாதம்) காலையிலிருந்து 2 தடவை வாந்தி எடுத்து விட்டான் காய்சல் ஒன்றும் இல்லை இருமல்,தும்மல் உள்ளது சளி இருக்கிற் மாதிரி இருக்கு மூச்சு விடும் போது சத்தம் வருகிறது என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம்?என்ன உணவு கொடுக்கலாம்?பழங்கள் கொடுக்கலாமா

என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம்?என்ன உணவு கொடுக்கலாம்?பழங்கள் கொடுக்கலாமா

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரிஸானா,குழந்தைகளுக்கு சளி இருந்தால் வாந்தி வரும். nasoclear drops மூக்கில் விட்டால் சளி வாந்தியாக வரும். அல்லது மோஷனில் வந்து விடும்.பிறகு குழந்தை நார்மலாகும். சளி பிடித்திருக்கும் போது பழங்கள் தர வேண்டாம். குழந்தைக்கு தரும் உணவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி தரவும். விக்ஸ் தைலத்தை லேசாக சூடாக்கி குழந்தையின் மார்பு,முதுகு பகுதியில் மென்மையாக தடவி விடவும். மூக்கடைப்பு,சளியில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவான். இதே நிலை தொடர்ந்து இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

how to use progesterone tablet enaku dr koduthurukanga eppadi use pandrathunu theriyala pls solunga all sisters

நன்றி கல்பனா மருந்து எடுத்தும் இன்னும் சரியாகவில்லை ஒரு நாளைக்கு 3 4தடவை வாந்தி எடுக்கிறான் சரியான இருமல்,சளி இதற்க்கு என்ன செய்வது?dr. sterile nose drops கொடுத்தார் இந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்கலாம்?எப்படி பாதுகாப்பாக பரமரிக்க வேண்டும்?தயவு செஇது உதவுங்கள் தனிய மிகவும் கஷ்டப் படுறேன் தோழிகலே..................

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

தயவு செஇது உதவுங்கள் தனிய மிகவும் கஷ்டப் படுறேன் தோழிகலே..................

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரிஸானா, டாக்டர் தந்த டிராப்ஸை மூன்று நாட்கள் தொடர்ந்து விடுங்கள். சளிக்கும் மருந்தை டாக்டரிடம் கேட்டு வாங்கி குழந்தைக்கு ஊற்றுங்கள். குழந்தைக்கு பாலை பாட்டிலில் தருவதாக இருந்தால் கொஞ்சம் மிதமான சூட்டில் தரவும். வீட்டு வைத்தியம் செய்ய இந்த பொருட்கள் கிடைத்தால் இதையும் முயன்று பாருங்கள். வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி,தூதுவளை போன்ற இந்த இலைகளை எடுத்து லேசாக வதக்கி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும், மிகவும் சிறிய அளவில் சுக்கு,மிளகு,சீரகம் போன்றவற்றையும் லேசாக வறுத்து பொடிசெய்து அந்த சாற்றுடன் கலந்து அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி ஒரு கால் சங்கு (பாலாடை) ஆகும் அளவு எடுத்துக் கொண்டு ஊற்றவும். இப்படி செய்தால் மார்ச்சளி குணமாகும். சளி அதிகமிருந்தால் வாந்தி இருக்கும். சளி குறைந்தால் குழந்தையும் நார்மல் நிலைக்கு வருவான். பயப்படவேண்டாம் தோழியே. உங்களுக்கு இது முதல் குழந்தை என்று நினைக்கிறேன் அதனாலும்,நீங்கள் தனியாக இருப்பதாலும் மிகவும் பயந்து போயிருக்கிறீர்கள். குழந்தைகளையும்,சளி தொந்தரவையும் பிரிக்கவே முடியாது. சரியான வைத்தியம் தந்தால் சரியாகும். கவலை வேண்டாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா உங்கள் பதில் ஆருதலாக உள்ளது முதல் குழந்தை தான்............இந்த இலைகள் இங்கு கிடைக்காது வேற என்ன செஇயலாம் மூக்கு ஒலுகிறது காலையில் ஓட்ஸ் கஞ்ஜி கொடுத்தேன் இந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்கலாம்?என்ன கொடுக்க கூடாது?எப்படி பாதுகாப்பாக பரமரிக்க வேண்டும்?இந்த நேரத்தீல் a/c போடலாமா?கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க மிகவும் கஸ்டப்படுறான் பாக்கவே கவலயாயிருக்கு

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரிசானா
இன்னும் உங்கள் பையனுக்கு சரியாகலையா

இரண்டு துண்டு சிக்கனில் மிள்கு தூள், தனியா தூள் உப்பு இஞிச் பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்கு குக்கரில் வேக வைட்து, சாதம் குழைத்து அதில் சிக்கன் சூப்ப்பை தெளித்து ஊற்றி கொடுங்கள்
குழந்தைகளுக்கு சளி இருமல் வந்தால் சரியாக ஒரு வாரம் ஆகும். இனிப்பு ரொம்ப சேர்க்கதீங்க்க்
பேன் நேரா அதிக ஏசியிலும் ப்டுக்க வைக்காதீங்க

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்