லேப்ராஸ்கோப்

ஹாய்,
தோழிகளே, நான் தற்போது லேப்ராஸ்கோப் செய்துள்ளேன். தையல் பிரிக்கும்போது வலி இருக்குமா? எவ்வாறு தையல் பிரிப்பார்கள்?

வலிக்காதுப்பா ஆனா நீங்க சூடானது சாப்பிடாதீங்க லேப்ரஸ்கோப் குழந்தைக்காக பண்ணீயிருந்தா கண்டிப்பா 6 மாதத்துக்கு விடாம டீரிட்மெண்ட் கண்டின்யு பண்ணுங்க இல்லன்னா திரும்ப பண்ண வேண்டியிருக்கும்.

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராணி,
உங்க ரிப்லேக்கு ரொம்ப தேங்ஸ்,நான் பேபி ட்ரீட்மெண்டுக்காகத்தான் லேப்ராஸ்கோப் பண்ணியிருக்கேன்.இதோ இப்போ கணவரோடு தையல் பிரிக்க கிளம்பிட்டே இருக்கேன்.இன்னும் எனக்கு உதவியாய் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் இருந்தால் சொல்லுங்க, ப்ளீஸ்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

அடுத்து என்ன பண்ண போராங்கன்னு கேளுங்க ஐயூஐன்னு சொன்னாங்கன்னா நீங்க ரெடியா இருங்க அது முடிஞ்ச அப்புரம் நீங்களும் சேர்ந்து இருங்க ரொம்ப உடம்பை அலட்டாதீங்க பீரியட்ஸ் ஒரு வாரத்துக்கு முன்னமே சேராம் இருங்க ரெண்டு பேரும் உடம்பை கூலா வச்சிக்கோங்க (ஐயூஐ முதல் தடவையே சிலருக்கு ஒகே ஆகும் சிலருக்கு ரெண்டு மூணு தடவை ஆகும் அடுத்த அடுத்த மாதம் தேவைபட்டாலும் சோர்வடையாம முயற்ச்சி பண்ணுங்க முதல் தடவையே ஓகே ஆக என் வாழ்த்துக்கள்)

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் பா,
ஐயுஐ , ஐவிஎஃப் அப்படினா என்ன? கொஞ்சம் விரிவா சொல்லுங்க ப்ளீஸ்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

தனா,
எனக்கு தெரிந்த்தை சொல்ரேன் தவறா இருந்தா திருத்திக்கோங்க, ஐயூஐன்னா ஸ்பெர்ம் எடுத்து யூட்ரஸ்ல இன்சக்ட் பண்ண்வாங்க (பெண்ணோட கருமுட்டை ரப்சர் ஆகும்போது) ஐவிஎஃப் பத்தி அவ்வளவு தெரியாதுப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு நீர்க்கட்டி தவிர வேறு பிரச்சினை எதுவும் இல்லை. அதுவும் இப்ப லேப்ராஸ்கோப் மூலம் சரியாயிடுச்சு. கருக்குழாய் இரண்டும் நல்லா இருக்குனு சொல்லிட்டாங்க.என்னால் இயற்கையா கன்சிவ் ஆக முடியாதா? நானும் ஐயுஐ பண்ணனுமா? தப்பா எடுத்துக்காதீங்க ராணி, தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ், குழப்பமா இருக்கு.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

தனா நீர்கட்டி குணமானாலும் திரும்ப வர சான்ஸ் இருக்கு 6மாதம் வரைக்கும் வராது அதனால இயற்கையாகவும் முயற்சி பண்ணுங்க ஐயூஐ யும் பண்ணுங்க அந்த குற்பிட்ட நாளை நீங்க மிஸ் பண்ண கூடாது இல்ல அதுக்குதான் சொல்ரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

ரொம்ப தேங்ஸ் பா,
ராணி இவ்வளவு நேரம் சீரியசாவே பேசியாச்சு, இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல்? உங்களுக்கு பாப்பா இருக்கா?

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

இன்னைக்கு மட்டன் குழம்புப்பா?, ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துட்டீங்களா? எங்க இருக்கீங்க? நானும் பாப்பா எதிர்பாத்திட்டு இருக்கேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி நான் ஹாஸ்பிடல்ல இருந்து இப்பதான் வந்தேன். டாக்டர் சொன்னாங்க சீக்ரமா நீ நார்மலாவே கன்சிவ் ஆயிடுவே எனக்கு நம்பிக்கை இருக்குனு சொல்லி டேப்லெட்ஸ் மட்டும் கொடுத்திருக்காங்க.நானும் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

மேலும் சில பதிவுகள்