தேங்காய்பால் குழம்பு

தேதி: November 13, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

தேங்காய் -1
பச்சைமிளகாய் -4
கடலைபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
அரிசி -1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி -1 துண்டு
எலுமிச்சைபழம் -1 பெரியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு

தாளிக்க:
````````
கடுகு -1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் -4
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது


 

(1)தேங்காயைதுருவி மிக்ஸியில் அரைத்து பால்எடுக்கவும்,பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
(2)வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைபருப்பு,அரிசி,பச்சைமிளகாய்,இஞ்சி என்று வரிசையில் வறுத்து அரைக்கவும்.
(3)தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தேங்காய்பாலில் சேர்க்கவும்.
(4)மஞ்சள்தூள்,உப்பையும் சேர்க்கவும்.
(5)அரைத்த விழுதையும் சேர்த்துகலக்கவும்.
(6)இதை அடுப்பில், சிறியதீயில் லேசாக நுரைத்துவரும்வரை வைத்து இறக்கவும்.
(குழம்பு கொதிக்ககூடாது)
(7)எலுமிச்சைசாறு சேர்த்துகலக்கவும்.
(8)கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்