கோரல்டிராவில் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

அன்பான சாப்ட்வேர் துறை சார்ந்த தோழிகளே,எனக்கு கோரல் டிரா படிக்க உதவுங்கள்
,இந்த அறுசுவையிலையே, சாப்ட்வேர் துறையில் இருக்கிறவங்க,எனக்கு உதவுங்கள் கோரல் டிரா 12 நானாக தான் இண்டெர்நெட்டில் படிச்சிட்டு இருக்கேன்,எனக்கு Effects,Bitmaps Menusமட்டும் இண்டெர்நெட்டில் சரியாக கிடைக்கலை,பிளீஸ் நீங்க அந்த 2 இருக்கிற Materials or material Link ஏதாவது குடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.பிளீஸ் சுகந்தி உதவி பண்ணுங்க

ஹாய் சுகந்தி
சுகந்தி உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்,கொஞ்சம் உதவி பண்ணுங்க

ஹாய் மஞ்சு, நீங்க சொன்ன ரெண்டுமே இமேஜ் கு அப்ளை பண்றது சோ நீங்க ஒரு படம் எடுத்து அத இம்போர்ட் பண்ணி எஃபக்ட்ஸ், பிட்மேப்ஸ் ஒரு ஒரு ஆப்ஷனா க்ளிக் பண்ணி பிரிவியூ குடுங்க உங்களுக்கே அது எதுக்குன்னு தெரியும்... அது வந்து ஃபோட்டோ அட்ஜஸ்மென்ட் எல்லா ஆப்ஷனும்... ட்ரா வந்து கிரியேட் கு யூஸ் பண்ணுங்க போட்டோ எடிட்னா நீங்க ட்ரால பண்ணா ரிசல்ட் கரெக்ட்டா கிடைக்காது...:( சோ போட்டோ ஷாப்ல நீங்க பண்ணலாம் கலர் கரெக்ஷன்... எதா டவுட்னா கேளுங்க சாரி சுகந்தி கிட்ட கேட்டிங்க எனக்கு தெரிஞ்சத சொன்னேன்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் நல்லா இருக்கேன்.நீங்க நலமா?
//இந்த அறுசுவையிலையே, நீங்க ஒருவர்தான் சாப்ட்வேர் துறையில் இருக்கிறவங்க// - தப்பா சொல்லிட்டீங்க, நிறையா பேர் இருக்காங்க. வெளிய தெரியல.

Effects menu ---> நீங்க corel draw ல ஏதாவது draw பண்ணிய பின்பு, அதை object ன்னு சொல்லுவோம். அந்த object க்கு நாம effect apply பண்றது தான் இந்த effect மெனு வின் வேலை. நீங்க ஏதாவது draw பண்ணிட்டு, இந்த Effects மெனு கிளிக் பண்ணுன, ரைட் சைடு ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும், அதில் எபக்ட்ஸ் பத்தின details வரும். உங்களுக்கு தேவையான effect தேர்ந்தெடுக்கலாம்.

Bitmaps menu ---> நீங்க ஏதாவது ஒரு இமேஜ் corel draw ல ஓபன் பண்ணிய பின்பு, அந்த இமேஜ் க்கு சில எபக்ட்ஸ் தரலாம். அவை தான் இந்த மெனுவில் இருக்கும். நீங்க இமேஜ் செலக்ட் பண்ணிட்டு, இந்த மெனு கிளிக் பண்ணுனா, சில எபக்ட்ஸ் காட்டும். உங்களுக்கு தேவையானதை எடுத்து, preview பாக்ஸ் ல எப்படி வரும்ன்னு பாத்துக்கலாம்.

object க்கு Bitmaps effect apply ஆகாது, தர முடியாது. அதே போல், இமேஜ் க்கு effects மெனுவில் இருக்கும், எதுவும் வொர்க் ஆகாது.

எது பண்றதா இருந்தாலும், நீங்க object /image செலக்ட் பண்ணிட்டு அப்பறம் தான் மத்ததை பண்ணனும்.

இதில் ஏதாவது சந்தேகமா மஞ்சு?? புரியலைன்னா சொல்லுங்க....

***************

மீனு
நீங்க சொன்னதில் தவறேதும் இல்லை, பதில் தெருஞ்சவங்க எல்லாரும் சொல்லலாம். எனக்கு முன்னாடி வந்து சொன்னதுக்கு நன்றி :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் நிஜூ,
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,சுகந்தி மட்டும் தான்,சாப்ட்வேர் லைன்ல இருந்தாங்க,அதான் அவங்க கிட்ட கேட்டேன்,எனக்கு உதவ வந்த உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி,

நிஜூ, உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடைய மெயில் ஐடி தருகிறேன்,எனக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லிதர முடியுமா?
rarchana1983@gmail.com
இது என்னுடைய ஈமெயில் முகவரி,உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்

டியர் சுகந்தி,
நீங்க சொன்னதை நான் செய்து பார்த்துவிட்டு,சந்தேகங்களை கேட்க்கிறேன்,சுகந்தி கோரல் டிராவில் என்ன சந்தேகம் ஏற்பட்டாலும்,இந்த இழையில் வந்து கேட்கலாமா?உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி சுகந்தி

கேட்கலாம் மஞ்சு, தவறேதும் இல்லை. தலைப்பு ஒரு நபர் பெயர் மட்டும் இல்லாமல் கேட்டா, எல்லா தோழிகளும் பதில் சொல்ல வசதியா இருக்கும். அதனால் தலைப்பை மட்டும் மாத்திடுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சாரி

இப்படிக்கு ராணிநிக்சன்

இந்த Bitmaps,Effects Menus போட்டோஸ் அட்ஜஸ்மண்ட்க்கு மட்டும் தான் யூஸ் ஆகுமா?நாம் டிசைன் பண்ணும் Image க்கு யூஸ் ஆகாதா?அப்படி நிஜூ சொன்னதுபோல் picture adjustmentkkuக்கு photoshopநல்லதா இல்லை corel photopaintநல்லதா?
மேலும் smartdrawing tool வைத்து வரையும் imagesக்கு எப்படி color குடுப்பது?

டியர் ராணி,
தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி,என்னுடைய பதிவை மாற்றிவிட்டேன்

நீங்க டிசைன் பண்ணும் Image க்கு Effects Menu வில் இருக்கும் effects தரலாம்.
picture adjustment - நீங்க எதை mean பண்ணி கேக்கறீங்கன்னு தெரியல. உங்களுக்கு என்ன அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்ன்னு தெளிவா சொல்லுங்க. போட்டோ வின் bright , கலர் எல்லாம் மாத்தனும்ன்னா photoshop தான் பெஸ்ட் .

smartdrawing tool - rectangle tool லில் வரையும் போது, எப்படி கலர் தருவீங்களோ, அதே போல் தான். இதற்கும் தரனும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்