கோதுமை ரவை உப்புமா

தேதி: July 3, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோதுமை ரவை - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - இரண்டு
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
உப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்


 

அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நீர் கொதிக்கும் போதே மற்ற அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து அதிலேயே கோதுமை ரவையைப் போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து உப்பு போட்டு கொதித்த நீரை ஊற்றவும்.
நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைத்து ஐந்து நிமிடம் கழித்து திறக்கவும்.
மீண்டும் அடுப்பை எரிய விட்டு தேங்காய் துருவல் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்