தேதி: November 16, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பரோட்டா - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
முட்டை - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - தேவையான அளவு
மஞ்சள் பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி- 1/2 ஸ்பூன்
சீரகப் பொடி- 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு, பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை சேர்க்கவும்
அதனுடன் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும். இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
பின்னர் அதனுள் பொடித்து வைத்துள்ள பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
அதன் மேல் முட்டையை ஊற்றி மேலும் கிளறவும்.
சுவையான கொத்து பரோட்டா தயார்