ஓட்ஸ் சிக்கன்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/2 கிலோ
ஓட்ஸ் - 100 கிராம்
மிளகுதூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய்


 

கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், போதுமான உப்புசேர்க்கவும்.

தக்காளி வெந்ததும், சிக்கனைச் சேர்க்கவும்.

சிக்கன் வேகுமளவு சிறிதளவு நீர் விடவும். ஓட்சை லேசாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சிக்கன் வெந்ததும் சேர்க்கவும்.

மசாலாவுடன் சிக்கனும் ஓட்சும் வெந்ததும் சிறிது கிரேவியாக இருக்கும் பொழுது சிக்கனை இறக்கி வைத்து கொத்தமல்லி இலை தூவி சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்