தேதி: November 16, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பொட்டுகடலை - 2 கப்
வறுத்த நிலக்கடலை - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள்/பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும்.
அத்துடன் வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையில் உப்பு, மிளகாய் தூள்,வெங்காயம், இஞ்சி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை பதத்திற்கு பிசையவும்.
எண்ணெய் சூடான உடன் போட்டு எடுக்கலாம், குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஈஸி வடை
Comments
சுகி
வாழ்த்துகள் ஈஸியான சத்தனா வடையா இருக்கேன் கண்டிப்பா செஞ்சிடுறேன்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்