சிக்கன் குப்தா

சிக்கன் குப்தா

தேதி: July 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 45 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

இஸ்லாமிய இல்லங்களில் தயாராகும் மற்றுமொரு சுவையான சிக்கன் வகை உணவு. இந்தக் கறி குழம்பு, வறுவல் இரண்டுக்கும் இடைப்பட்ட பதத்தில் இருக்கும். இஸ்லாமிய உணவு வகைகளை மிகவும் சுவையாக சமைக்கக்கூடிய செல்வி. நூர் நாச்சியார் இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். ஒருமுறை செய்து ருசித்துப் பார்த்து உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

 

சிக்கன் - அரைக் கிலோ
தக்காளி - 6
வெங்காயம் - 6
பூண்டு - ஒன்று
மிளகாய் வற்றல் - 8
கொத்தமல்லி - அரை கப்
சிக்கன் 65 பவுடர் - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
எண்ணெய் - அரை கப்
உப்பு - அரை மேசைக்கரண்டி


 

2 வெங்காயத்தை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீதி வெங்காயத்தை நீள வாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.
சிக்கன் குப்தா
மிளகாய் வற்றலை 5 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும்.
சிக்கன் குப்தா
மிக்ஸியில் மிளகாய் வற்றல், நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
சிக்கன் குப்தா
கோழியை கழுவி சுத்தம் செய்து அரை மேசைக்கரண்டி உப்பு, சீரகத் தூள், மிளகு தூள், சிக்கன் பவுடர் போட்டு பிரட்டி, ஃபிரிட்ஜில் 5 நிமிடம் வைக்கவும்.
சிக்கன் குப்தா
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சிக்கன் குப்தா
பொரித்து எடுத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெய் வடியவிட்டு தனியே வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் குப்தா
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
சிக்கன் குப்தா
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அரைத்த வைத்துள்ள வெங்காயம் பூண்டு விழுதினைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
சிக்கன் குப்தா
பச்சை வாடை குறைந்தவுடன், நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கி ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
சிக்கன் குப்தா
அதனுடன் சோயா சாஸ், அஜினோமோடோ சேர்த்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கறியை போட்டு பிரட்டவும்.
சிக்கன் குப்தா
வாணலியை மூடி வைத்து சுமார் 3 நிமிடங்கள் வேகவிடவும். தீயின் அளவு அதிகம் இல்லாமல் சீராக இருக்கவேண்டும்.
சிக்கன் குப்தா
3 நிமிடம் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கி விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
சிக்கன் குப்தா

சிக்கனுக்கு பதிலாக மீன் சேர்த்தும் செய்யலாம். மீனை பிரட்டி வைக்கும் போது மிளகு தூளுக்கு பதிலாக மிளகாய் தூள் போடவும். (மிளகாய் விழுது வேண்டாம்).


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

,,,,,,,,