மீன் தொக்கு

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.
நன்றாக மீன் வெந்து, நல்லா மசாலா கெட்டி ஆனதும் இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன ஆச்சு??? ஒரே நாளில் குறிப்புகள் புயல் மழை போல் கொட்டி குவிச்சுட்டீங்க!!! ;) எதாவது விஷேஷமா சுகி??? கலக்குங்க. நல்ல நல்ல குறிப்புகளா கொடுக்கறீங்க... சீக்கிரமே சிகரத்தை பிடிக்க வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////எதாவது விஷேஷமா சுகி???//// உங்க கிட்ட சொல்லாமலா!!!

இது எப்பவோ டைப் பண்ணி வைத்தது, நான் வாழைப்பழ சோம்பேறி :-(
நேத்து முழு மூச்சா எல்லாத்தையும் போட்டுட்டேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சொல்லும் போதே நாவூறுது

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா