ஆவக்காய் ஊறுகாய்

ஆவக்காய் ஊறுகாய்

தேதி: July 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

ஆந்திர உணவு என்றாலே மற்ற மாநிலத்தவருக்கு நினைவுக்கு வருவது அந்த சுவையான ஆவக்காய் ஊறுகாய்தான். அது போன்ற ஊறுகாய் அனைத்து மாநிலங்களிலும் தயார் செய்யப்பட்டாலும், ஆந்திர ஆவக்காய் ஊறுகாய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த ஊறுகாய் செய்வதற்கு பொருத்தமான மாங்காய் ஆந்திராவில்தான் அதிகம் கிடைக்கின்றது.

பலரும் நினைப்பதுபோல் ஆவக்காய் என்பது மாங்காயில் ஒரு வகை கிடையாது. ஆவலு என்றால் தெலுங்கில் கடுகு என்று பெயர். கடுகுப் பொடி சேர்த்து செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் என்பதால் இதற்கு ஆவக்காய் ஊறுகாய் என்ற பெயர் வந்துவிட்டது. ஆவக்காய் என்ற மாங்காய் தேடி அலைய வேண்டாம். நீல வகை மாங்காயில் உள்பக்க ஓடு சற்று அழுத்தமாக உள்ள மாங்காய்களைக் கொண்டு இதனைத் தயாரிக்கலாம்.

கீழே படத்தில் உள்ளது மிகவும் பொருத்தமான மாங்காய் அல்ல. அதற்கு மிகவும் பொருத்தமான மாங்காய் கிடைக்காத காரணத்தால், ஓரளவிற்கு ஒத்துவரக்கூடிய மாங்காய் கொண்டு தயாரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்முறைதான் முக்கியம்.

 

மாங்காய் துண்டுகள் - 6
கடுகுத் தூள் - 5 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 5 தேக்கரண்டி
பூண்டு - 14 பல்
உப்பு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்


 

உள்பக்க ஓடு அழுத்தமாக உள்ள மாங்காய்களாக பார்த்து தேர்வு செய்து கொள்ளவும். ஒரு மாங்காயை சுமார் 10 துண்டுகள் வருமாறு நறுக்கிக் கொள்ளவும். ஆந்திராவில் இதை நறுக்கிக் கொடுப்பதற்கென்றே தனியாக கடைகள் எல்லாம் உள்ளன. நறுக்குவதெற்கென்றே பாக்கு வெட்டிப் போன்ற ஒரு கருவியும் வைத்திருப்பர்.
தேவையானப் பொருட்கள்
ஒரு பாத்திரத்தில் நறுக்கின மாங்காய்த் துண்டுகளை போட்டு தோலுரித்த பூண்டு, உப்பு சேர்க்கவும்.
மாங்காய் துண்டங்கள்
பிறகு அதில் கடுகுத் தூள் சேர்க்கவும். கடுகுத் தூள் கடைகளில் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் கடுகை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மாங்காய் பொடி
பின்னர் அதில் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
மாங்காய் பொடி
இறுதியில் அதனுடன் எண்ணெய் சேர்த்து எல்லாத் துண்டுகளிலும் எண்ணெய் சாறும்படி கை படாமல் கரண்டியால் கலக்கவும்.
ஆவக்காய் ஊறுகாய்
பிறகு ஒரு பாட்டிலில் வைத்து தண்ணீர் படாமல் 15 நாட்கள் ஊற வைக்கவும். பிறகு எடுத்து உபயோகிக்கவும்.
ஆவக்காய் ஊறுகாய்
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வித்யா அவர்கள் இந்த ஊறுகாய் செய்முறையை படங்களுடன் விளக்கியுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், விதவிதமாய் புதுவித உணவுகளைச் சமைப்பதில் வல்லவர். தமிழகச் சமையல் மட்டுமல்லாது ஆந்திர, வட இந்திய சமையல் முறைகளும் இவருக்கு அத்துப்படி.
 திருமதி. வித்யா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆவக்காய் ஊருகாய்க்கு கடுகு வறுத்து அரைத்து சேர்க்க வேண்டுமா?

Vadu mangai urugai eppadi than seiyanuma

leemacyril

leemacyril

Vadu mangai urugai eppadi than seiyanuma

leemacyril

leemacyril