பதில் தாருங்கள் தோழிகளே (குழந்தையின் நிறம்...)

வணக்கம் தோழிகளே எனக்கு கடந்த oct 16 ஆண் குழந்தை பிறந்தது.. இன்றோடு 31 நாட்கள் ஆகிறது VISHAL RITHHVIK என பெயரிட்டுள்ளோம். பிறந்த போது மிகவும் வெள்ளை நிறமாக இருந்தான் இப்பொது நிறம் குறைந்து கொண்டே வருகிறான் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை மீண்டும் அவனது பழைய நிறம் வர நான் என்ன செய்ய வேண்டும்? உதவுங்கள் தோழிகளே!

பதில் தாருங்கள் ப்ளிஸ்...

BE HAPPY MAKE OTHERS HAPPY

Bathing the baby with Egg(White alone) and Kaasthuri Manjal Regularly for 3 Months. You will find the difference.

Suja

பிறந்த குழந்தைகள், பிங்க், ரோஸ், வெள்ளை, சிவப்பு இப்படி எல்லா வண்ணமும் கலந்த ஒருவித கலவைக் கலரில் இருப்பதுதான் இயல்பானது. குழந்தையின் மேற்தோல் சரியாக வளர்ச்சியடையாமல் மெல்லியதாக இருக்கும்போது, உட்புற இரத்த ஓட்டத்தினால், தோலின் வண்ணம் ஒருவித சிவப்பாக இருக்கும். பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களில் இந்த வண்ணம் மாறத் தொடங்கி, தோலின் உண்மை நிறம் வெளிப்படும். (நான்கூட பிறக்கும்போது "நல்ல பிங்க்" கலரில் இருந்தேனாம். ஒரு வாரம் கழித்துதான் குடும்பமே ஏமாந்திருக்கின்றது. :-))

குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களில், உடலில் இருக்கும் நீர் குறையத் தொடங்கியதும் குழந்தையின் எடையும் சற்று குறையும். அப்போதும் தோலின் நிறம் சற்று மங்கும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கத் தொடங்கியதும், உடல் எடை அதிகரிக்கும்போது, மேற்தோலும் மெருகேறும். கவனிக்க: மெருகேறும் என்பதற்கு அர்த்தம் நிறம் மாறும் என்பதல்ல. ஒருவித பளபளப்புத் தன்மை உண்டாகும். மற்றபடி, உடலின் நிறம் என்பது ஜீன்களில் எழுதப்பட்ட விசயம். மாற்றியமைக்க இன்றைய அறிவியலில் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் இல்லை. நிறம் மாற மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டால்தான் உண்டு.

குழந்தையின் நிறம் எதுவாக இருந்தால் என்ன.? ஆரோக்கியமாக வளருங்கள். அதுவே போதுமானது. எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு, ஒரு மாதக் குழந்தையின் மீது, எந்தவித பரீட்சார்த்த சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கலை,உங்களுக்கு அட்மின் அண்ணாவே வந்து அழகாக விளக்கம் தந்துள்ளார். அதனால் உங்கள் குழப்பம் ஓரளவு தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். குழந்தைக்கு கலர் கூட, குழந்தையை குளிப்பாட்டும்போது கடலை மாவு தேய்த்து குளிப்பாட்டுங்கள். குளிப்பதற்கு முன்பு பாதாம் ஆயிலை உடம்பில் தேய்த்து பிறகு குளிப்பாட்டுங்கள். பச்சை பயிறு மாவு ஈரம் என்பதால் குழந்தைகளுக்கு இப்போது அதை தேய்க்க கூடாது. தேங்காய் பாலை தேய்த்து குளிப்பாட்டினாலும் நிறம் வரும் என்பார்கள். முயற்சி செய்து பாருங்கள். நான் இங்கே சொன்னவை நார்மலாக குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பொருள்கள் தான். இதில் எவ்வித சைட் எபெக்ட்சும் இல்லை. அதனால் பயமில்லாமல் பயன்படுத்தலாம்.

//நான்கூட பிறக்கும்போது "நல்ல பிங்க்" கலரில் இருந்தேனாம். ஒரு வாரம் கழித்துதான் குடும்பமே ஏமாந்திருக்கின்றது//

அண்ணா, இப்ப மட்டும் என்ன, அந்த பிங்க் கலரே கொஞ்சம் கூடினதால டார்க் ஆய்ருச்சின்னு நினைச்சுக்கோங்க ;)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

6, 7 மாதம் போன பிறகு மாவுகளை தேய்த்து குளிப்பாட்டுங்கள் இப்போதைக்கு baby oil and baby soap போதும். இது என்னுடைய கருத்து..
வாழ்த்துக்கள் தோழி

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

என்னை போல அல்லாமல்(நான் மாநிறம்) என் தங்கம் வெள்ளையாக பிறந்தான்... இப்பொது கலர் மங்க தொடங்கியதும் கொஞ்சம் கவலையாக இருக்கு.. அது தான் உங்களிடம் உதவி கேட்டேன்.பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.... (spl thanx to admin anna)

BE HAPPY MAKE OTHERS HAPPY

thank u for ur useful tips

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்