சிடி வால்ஹேங்கிங் - 3

தேதி: November 19, 2011

4
Average: 3.9 (20 votes)

 

உபயோகமற்ற சிடி - ஒன்று
கடவுள் உருவம் உள்ள ப்ளாஸ்டிக் சிலைகள் - ஒன்று
க்ளாஸ் கலர்ஸ்
பெவிக்கால்
டூத்பிக்
கிலிட்டர்ஸ் நிறங்கள் - கோல்டு & க்ரீன்
தெர்மாக்கோல் பால்ஸ்

 

கொடுத்துள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
16 டூத்பிக் குச்சியின் கூர்ய முனையில் தெர்மாக்கோல் பால்ஸை சொருகி வைக்கவும்.
சிடியின் முன்பக்கத்தில் இந்த தெர்மாக்கோல் சொருகிய டூத்பிக்கை இடைவெளிவிட்டு சுற்றிலும் ஒட்டவும்.
சாமி சிலையில் க்ளூ தடவி சிடியின் வழவழப்பான பக்கத்தின் நடுவில் ஒட்டவும். இந்த சாமி சிலையை சுற்றி க்ளாஸ் அவுட்லைனர் அல்லது கோல்டுநிற கிலிட்டர்ஸ் கொண்டு விரும்பிய டிசைனை வரையவும்.
இதுப்போல் கிலிட்டர்ஸால் இரண்டு வளைவுகள் சிடியை சுற்றிலும் வரைந்து முடிக்கும்.
வரைந்திருக்கும் வளைவின் இடையில் இழை போன்று க்ரீன்நிற கிலிட்டர்ஸால் வரைந்து, உள்ளே க்ரீன்நிற க்ளாஸ் கலரை கொண்டு நிரப்பவும்.
சிறிய வளைவில் மஞ்சள்நிற க்ளாஸ் கலரும், பெரியவளைவில் சிவப்புநிற க்ளாஸ் கலரும் கொடுக்கவும்.
நன்கு காய்ந்ததும் பின்பக்கத்தில் போம் டேப்பை ஒட்டி வைக்கவும்.
மிக சுலபமாக, விரைவாக செய்யக்கூடிய சிடி வால்ஹேங்கிங் ரெடி. அவரவருக்கு விரும்பிய சிலைகள், பொம்மைகள் அல்லது படங்களை தேவையான அளவு வட்டமாக நறுக்கி சிடியில் ஒட்டியும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூப்பர்!!! நல்ல க்ரியேட்டிவிட்டி. அதுவும் டூத்பிக் ஐடியா சூப்பரோ சூப்பர். :) கூடவே ஒரு சந்தேகம்... யாருடைய கைகள் அது? பார்க்கவே அழகா... மருதாணி போட என்கிட்ட கிடைக்காதான்னு இருக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்கு.... நான் இதே மாதிரி CD வெச்சு செய்வேன்.......... சிலைக்கு பதிலா கல்யாண பத்திரிக்கைல இருந்து கட் செஞ்சு ஒட்டினேன்..... ஆனா டூத் பிக் வெச்சு செய்யரது புது ஐடியா...... தாங்க்ஸ்.......

hai madam,
enaku craft work la konjam interest irukku. Naan indha website parthu aasapattu kathukiten, niraya try pannirukuren, idhu konjam innovative ah irukku, kandipa idhai try pannuven. Thk u for giving such a wonderful craft item, innum idhu madhiri niraya sollikudunga, enna madhiri interest irukuravangalukku idhu boost-up pandra madhiri irukum.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

naakuda entha website paathu clay works n icestick works lam kuda panni iruken...clay basket etc..ethu konjam diff naa cd vechi clay work pannen ethayum try pannaren congrats to arusuvai team......

ரொம்ப ரொம்ப ரொம்.......ப அழகா இருக்கு;-)

Don't Worry Be Happy.

அழகாக இருக்கு. நல்ல கற்பனை திறன். நேர்த்தியாக செய்து காட்டியிருக்கீங்க.

வனி, கை அழகா இருந்தா மட்டும் தான் மருதாணி போடுவீங்களா :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சிம்பிளா அழகா இருக்கு டீம், பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள்...!!! ரொம்ப அழகா இருக்குது...நானும் செய்து பார்க்கிறேன்...)

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு டீம் நானும் இது மாதிரி செஞ்சி வெச்சிருக்கேன் அதை விட இது அழகா இருக்கு ரொம்பவும் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பார்கவே ரொம்ப அழகா இருக்கு. நானும் இதை செய்து பார்கிறேன் டீம்.மத்தவங்கலுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

it is very super. very nice wall hanging. vettulla ellam things irrukum athanala eppo evanalum seithu pakalam

dont angry

I have given this demo steps to my daughter and she had done one similar to this one. She is in her UKG. Nice handcraft worth gifting to friends & families....
Thanks for sharing...

Natpudan,
Karpakam Senthil Kumar,
Bangalore