குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

சகோதரிகளே,
11 மாதமாகவுள்ள என்னுடைய மகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு வருகிறது. மருந்து கொடுக்கும்போது நிற்கிறது, ஆனால் மறுபடியும் வருகிறது. வயிற்றுப்போக்கு தொடங்கிய நாளிலிருந்து சிறுநீர் செல்வதும் குறைந்துவிட்டது. ஒரு நாளுக்கு ஒன்று தொடக்கம் மூன்று தடவைகள் மட்டுமே இப்போது சிறுநீர் போகிறது. முன்னர் 10-12 தடவை போகும். மருந்து பல தடவைகள் எடுத்துவிட்டோம். ஆனால் இன்று சுகமாக இருந்தால், நாளை மறுபடியும் வந்துவிடுகிறது.. இதற்கு என்ன தீர்வு? குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்கலாம்? தெரிந்தவர்கள் கருத்துக்கள் தந்து உதவுங்களேன்!

முதல்ல குழந்தைக்கு லிவர் டெஸ்ட் பண்ணுங்க. LFT னு சொல்வாங்க... ரத்த பரிசோதனை தான். அதை பண்ணா குழந்தைக்கு ஜீரணத்தில் வேறு ஏதும் பிரெச்சனை இருக்கா என்று தெரியும். தாமதிக்காம உங்க மருத்துவரிடம் பேசி இதை செய்யுங்க. ஏன்னா பொதுவா மருத்துவர்கள் வயிற்றுப்போக்குன்னா வைரல் இன்ஃபெக்‌ஷன்னு சொல்லி ஆண்டிபயாடிக்ஸ் கொடுப்பாங்க... இதை யாரும் செக் பண்ண மாட்டாங்க. நீங்க கேட்டு பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா, இன்று டாக்டர் கிட்ட போகிறேன். குழந்தை நல்ல active ஆக இருக்கிறா... ஆன படியா டாக்டர் இதை சீரியசா எடுக்கிறார் இல்லன்னு தோணுது.. இன்று என்ன சொல்றார்னு பார்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்