நான் இப்போது 6 மாத கர்ப்பம். Twin Pregnancy. இது என் முதல் பிரசவம். என் கணவருடன் நான் அபு தபியில் வசிக்கிறேன். அபு தபி NMC hospital -இல் தான் காட்டி வருகிறேன். இப்போது அவர்கள் என்னை Government Hospital- இல் file open செய்ய சொல்கிறாகள். நான் இரண்டு இடத்திலும் check up செய்ய வேண்டுமாம். குழந்தைகள் நன்றாக இருந்தால் மட்டுமே NMC Hospital - இல் என்னை டெலிவரி-கு அனுமதிபார்காலம் இல்லையென்றால் நான் government hospital தான் செல்ல வேண்டுமாம். இது NMC Hospital - இல் மட்டும் தான் இந்த rules-சா? பிற private hospital மற்றும் doctors பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ். Government hospital- இல் Arabic doctors தானே இருப்பார்கள்? யாரேனும் UAE Government hospital - இல் டெலிவரி பார்த்த அனுபவம் உண்டா? என் அம்மா என்னுடன்தான் இருக்கிறார். நான் மிகுந்த மன குழப்பத்தில் உளேன். தோழிகளே எனக்கு உதவுங்கள்
corniche hospital
கார்னிஷ் ஹாஸ்பிடலில் பாருங்க..என் முதல் குழந்தைக்கு அங்கு தான் பார்த்தேன் மற்ற பல ஹாஸ்பிடலிலிருந்தும் இவர்கள் தான் பிரசவம் சம்மந்தமாக முன்னால் இருக்கிறார்கள் நார்மல் டெலிவெரி தான் பெரும்பாலும் நடக்கும்..
இதுக்கெல்லாம் இப்படி குழம்பாதீங்க .டாக்டர்கள் மாறி மாறி இருப்பார்கள் ஒவ்வொரு முறையும் பல நாட்டவர்களும் இருப்பாங்க ஆனால் நீங்கள் வாயே திறக்க தேவையில்லை எல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க எதாவது சின்ன சந்தேகம் ப்ரச்சனை என்றாலும் அங்கே ஸ்பெஷலிஸ்டும் உண்டு அவங்களே அப்பாயின்ட்மென்டும் தந்து அனுப்புவார்கள்..நீங்க நினைத்ததை விட ஈசியாக இருக்கும் கவலை படாதீங்க
ஏன் சொல்றாங்கன்னா கார்னிஷ் ஹாஸ்பிடலில் எந்த ஒரு ப்ரச்சனையும் கைய்யாளும் படி மருத்துவம் பிரசவம் குழந்தைகள் சம்மந்தமான உபகரனங்கள் அனைத்துமே இருக்கும்..குறை பிரசவ குழந்தைகள் முதல் பல பல ப்ரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு வரை சிகிச்சை தாமதிக்காமல் கொடுப்பார்கள்..இங்கு பல ஹாஸ்பிடலிலும் கொஞ்சம் காம்ப்லிகேடெட் கேஸ் என்றால் கார்னிஷுக்கு தான் கடைசியில் கூட அனுப்புவார்கள்..நீங்கள் ஃபைல் ஓபென் பண்ணி வச்சுட்டா நல்லது தான்..ஃபோன் போட்டு என்ன டாக்யுமென்ட்ஸ் கொண்டு வரனும் என்று கேட்டுட்டு போங்க ஒன்னும் டென்ஷனாகாதீங்க
Mafraq hospital இலும் நல்ல பார்ப்பதாக சொல்கிறார்கள்
nithya avargaluku ,en
nithya avargaluku ,en uravinar dubai government hopitalilthaan pillai petraarkal,nanraaga paarpaargal endru solli irukiraargal.
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
ரொம்ப தேங்க்ஸ் thalika நான்
ரொம்ப தேங்க்ஸ் thalika நான் ரொம்பவே குழம்பி போய்டேன். கிட்ட தட்ட 1 1/௨ வருஷம் கழிச்சு கர்ப்பம் ஆயிருக்கேன் ஆதுவும் twins வேற. சந்தோசத்தை முழுசா அனுபவிக்க முடியல. உங்க பதில் ரொம்ப ஆருதல இருக்கு.
கார்னிஷ் hospital ல உங்களுக்கு எத்தனை செலவு ஆனது? என்னோட இன்சூரன்ஸ் கார்டு Government hospital ல accept பண்ணுவங்காள நு தெரியல.
வாழ்க வளமுடன்
அப்படியா. எந்த ஹோச்பிடல்னு
அப்படியா. எந்த ஹோச்பிடல்னு தேரியுமா? Fathima
வாழ்க வளமுடன்
corniche
நான் பார்த்தது ஆறு வருஷம் முன்பு இப்போது நார்மலுக்கு சுமார் 6000 ஆவதாகவும் சிசேரியனுக்கு 10 - 12000 திர்ஹம்ஸ் வரை ஆகிறது என்றும் யார் யாரோ சொல்லி கேட்டேன் சரியாக தெரியவில்லை.உங்களுடையது தமான் என்றால் அக்செப்ட் பண்ணுவார்கள் மற்ற இன்ஷூரன்ஸும் ஆகலாம் எனக்கு சரியாக தெரியவில்லை அல்லது நீங்க ரீஇம்பர்ஸ் பண்ணிட்டு காசை அடைச்சுட்டு கம்பெனியில் கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்கிறேன்.ஒன்னும் கவலை படாதீங்க இந்த அனுபவம் பிறகு கிடைக்காஅது எல்லாருக்கும் உள்ள டென்ஷன் தான் ஆனால் வெறும் வேஸ்ட் நடப்பது தான் நடக்கும் நம்ப டென்ஷனுக்கு ப்ரியோஜனமே இல்லை..ஆனால் நார்மலாக ஒரு குழந்தை எந்த ப்ரச்சனையும் இல்லையென்றால் மற்ற ஹாஸ்பிடல் சொல்லியிருப்பேன் இரட்டை குழந்தைகள் என்பதால் சொல்கிறேன் கண்ணை மூடிட்டு கார்னிஷுக்கு போங்க ..அவங்க பிரசவமானதும் கூட யாரையும் தங்க அனுமதிப்பதில்லை அதனால் அந்த மாதிரி விஷயங்களை தெரிஞ்சு வச்சுட்டு இப்பவே தயார்படுத்திக்கலாம்..மத்தபடி அது ஒரு பெரிய விஷயமே இல்ல எல்லாம் ஈசியா இருக்கும்
appoitment
http://www.cornichehospital.ae/FindACHDoctor.aspx
இதில் தமிழ் மொழி தெரிந்த கார்னிஷ் டாக்டர்கள் இருக்காங்க பாருங்க..அவங்க வலைதளத்தில் அப்பாயின்ட்மென்ட் எடுக்கும் வசதியும் உண்டு பாருங்க இதில் எதாவதொரு டாக்டருக்கு கேட்டுட்டு போங்க
அல்லது அங்கும் போய் அப்பாயின்ட்மென்ட் எடுக்கும்போதே தமிழ் மொழி தெரிந்த டாக்டர்கள் அல்லது மலையாளம் தெரிந்தவர்களை கேளுங்க நம்ப நாட்டவராக இருப்பாங்க
ரொம்ப நன்றிங்க தளிகா. என்னோட
ரொம்ப நன்றிங்க தளிகா. என்னோட கணவர் ஒரு மீட்டிங்காக கத்தார் போய் இருக்கார். அவர் வந்ததும் முதல் வேலை கார்னிஷ் ஹோச்பிடல் போகவேண்டியது தான். உங்க பதில் ரொம்பவே தைரியத்தை தருது.
வாழ்க வளமுடன்