கிஃப்ட் பாக்ஸ் - 2

தேதி: November 22, 2011

4
Average: 3.3 (7 votes)

 

பழைய துணி அட்டை பெட்டி - ஒன்று
பட்டு / வெல்வெட் துணி / ஹேண்ட் மேட் பேப்பர்
அலுமினியம் ஃபாயில்
மணிகள்
க்ளூ
கத்திரி
பென்சில்

 

பழைய அட்டை பெட்டி மற்றும் தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.
அட்டை பெட்டியின் மேல் அட்டை அளவை வைத்து பேப்பரில் வரையவும். வரையும் போது உள் பக்கம் மடித்து விடும்படியாக அளந்து வரையவும். நான் எடுத்திருக்கும் அட்டைக்கு ஒவ்வொரு மடிப்பும் 1 1/2 இன்ச் அளவு உள்ளது. இப்போது படத்தில் மஞ்சள் நிறம் உள்ள மடிப்பை விட்டு க்ரே நிறம் உள்ள மடிப்புகளை வெட்டி எடுத்து விடவும்.
இதை படத்தில் காட்டியுள்ள படி நன்றாக பசை தடவி ஒட்டி விடவும்.
இப்போது மஞ்சள் நிறம் இட்டு காட்டிய பகுதி வெளியே நீட்டிக்கொண்டு நிற்கும்.
அந்த பகுதியை பக்கத்தில் ஒட்டிய பேப்பருக்கும், அந்த பெட்டிக்கும் நடுவே உள்ள இடைவெளியில் நுழைத்து விடவும்.
இப்போது ஒட்டிய பகுதி பிரிந்து வராமல், பிசிறில்லாமல் பார்க்க படத்தில் உள்ளது போல் இருக்கும்.
இதே போல் எல்லா பக்கமும் ஒட்டி மேல் அட்டையை தயார் செய்து முடிக்கவும்.
இப்போது அட்டை பெட்டியின் உள் அளவை எடுத்து அலுமினியம் ஃபாயிலை வெட்டி ஓரங்களை மடித்து பசை தடவி ஒட்டவும். (மேல் அட்டை, கீழ் அட்டை இரண்டிலும் ஒட்டவும்.)
இனி மேல் அட்டையில் உங்கள் விருப்பம் போல் அலங்கரிக்கலாம். நடுவே சிறிது அலுமினியம் ஃபாயில் ஒட்டி சுற்றி மணி வேலை செய்யலாம்.
ஒட்டிய ஹேண்ட் மேட் பேப்பருக்கு பொருந்தும் நிறத்தில் மணி வேலைகள் செய்திருக்கிறேன்.
இப்போது அட்டை பெட்டியின் கீழ் பகுதியில் பகுதிகளாக பிரிக்க விரும்பினால் மேலே ஒட்டிய ஹேண்ட் மேட் ஷேட் அல்லது வேறு பொருந்தும் நிற அட்டையை மடித்து ஒட்டி தேவையான அறைகளாக தடுத்து முடிக்கவும். (நட்ஸ் மற்றும் இனிப்பு வகைகள் வைக்கும் போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வகை நட்ஸ் வைத்து பேக் செய்ய இது உதவும்)
இந்த இரண்டாவது பெட்டி பழைய கிஃப்ட் பேப்பர்கள் கொண்டு செய்யப்பட்டது.
இதன் நடுவே வைக்க ஒரு துணியில் சீகுவன்ஸ் வேலைப்பாடு செய்ய வேண்டும்.
அதை அட்டையின் மேல் பகுதியில் ஒட்டி முடிக்கவும். அழகான உபயோகமான கிஃப்ட் பாக்ஸ்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அருமை, அருமை அருமை, வனிதாக்கா கலக்கிட்டீங்க. நல்ல யோசனை. தெளிவா சொல்லிருக்கீங்க. எங்க வீட்ல நிறைய அட்டைப்ப்ட்டி வேஸ்டா இருக்கு. ஊருக்கு போனப்புரம் கண்டிப்பா செஞ்சு பார்க்கணும். நல்ல தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

என் கண்ணே பட்டுடும். சாமி, எவளோ கை வண்ணம் வெச்சு இருக்கீங்க.....என்னால முடியல :-)

என்ன சொல்றது, எப்பவுமே போல தான் சூப்பர், வாவ், குட் ஐடியா, செம கிரியேடிவிட்டி, அசத்தீடீங்க, கலக்குங்க, அழகா பண்ணி இருக்கீங்க, பிரமாதம்.... ஷு ஷு வேற வார்த்தை இருந்தா அடுத்த பதிவில் சொல்றேன். எச்செலேன்ட் வனி :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அழகா இருக்குகா சூப்பர் வார்த்தையே கிடைக்கல தேடவும் டைம் இல்லை வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சூப்பரோ சூப்பர்.நல்லதொரு கைவண்ணம்.

ஹைய் வனிதா உங்களின் கிஃப்ட் பாக்ஸ் செம சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
உங்களின் குறிப்பும்.ஒன் பை ஒன்னா அழகா இருக்கு ஆனா 4 மற்றும் 5வது படம் எனக்கு புரியலப்பா மஞ்சள் நிறம் இட்டு காட்டிய பகுதி வெளியே நீட்டிக்கொண்டு நிற்கும்னு சொன்னீங்கள்ல அது எப்படினு தெரியல.அதா முன்னாடியே சொல்லிட்டேனே எனக்கு இதல்லாம் சுட்டு போட்டாலும் வராது. ந்ம்ம திறமையான தோழிகள்.செய்துட்டு சொல்லுவாங்க. பாத்தா ஈஸியாதான் இருக்கு ஆனா எனக்கு வராது மன்னிக்கனும் வனி ALL THE BEST VANI

நல்ல ஐடியா. கிஃப்ட் பாக்ஸ் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது பெட்டில ஒட்டிய இருக்குற சீகுவன்ஸ் ரெடிமேடா கிடைக்குதா வனி. இல்ல இதுவும் நீங்களே செஞ்சீ ஒட்டியிருக்கீங்களா.

ஹாய் வனிக்கா செம செம சூப்பர்கா. ஒவ்வொரு விஷயம் செய்யும் போது உங்கள் கைவண்ணம் இன்னும் மெருகேறிகிட்டே போகுது. நான் இதுவரை இது போல டப்பாவ கிச்சன்ல சாமான் அடுக்கி வைக்கவும். ஹாலில் டேபிளில் பேப்பர் ஹோல்டராகவும் தான் உபயோகப்படுத்தி இருக்கேன். நீங்க அத ரொம்ப அழகாக்கி காண்பிச்சு இருக்கீங்க. பலமான கைதட்டல் அக்கா உங்களுக்கு கேட்குதா.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

தோழிகள் அனைவருக்கும் ரொம்ப நன்றி... கை வலி அதிகமா இருப்பதால் வர முடியல. கொஞ்சம் சரி ஆனதும் வந்து விளக்கமா பதிவிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கலக்குறீங்க..எப்பவுமே துருதுருன்னு இருப்பீங்க போல

சூப்பர்ப் வனி, ரொம்ப அழகான வொர்க்

இப்படிக்கு ராணிநிக்சன்

NICE GIFT BOX

A SMILE YOU SENT, WILL ALWAYS RETURN

நசீம்... நன்றி நன்றி நன்றி. அவசியம் செய்து பார்த்து எப்படி வந்தது, பிடிச்சுதான்னு சொல்லுங்க நசீம். :)

சுகி... முடியல... எத்தனை வார்த்தை!!! இத்தனை சொல்லிட்டு இன்னும் தேடுறீங்களா??? ;) ரொம்ப ரொம்ப சந்தோஷம் சுகி.

ரேணு... மிக்க நன்றி. //வார்த்தையே கிடைக்கல தேடவும் டைம் இல்லை // - ஹஹஹா... வர வர பதிவெல்லாம் நினச்சு சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். ;)

கிஃபா... மிக்க நன்றி :)

மாயா... மிக்க நன்றி. இதில் குழப்பம் ஒன்று இல்லை... 2வது படத்தில் மஞ்சள் நிறம் இருக்கு பாருங்க... 3வது படத்தில் காட்டி இருப்பது போல் மற்ற வெள்ளை பகுதியை மடிச்சு ஒட்டினால் 4வது படத்தில் மஞ்சள் உள்ள பகுதி நீட்டிக்கொண்டு இருக்கும். (2வது படம் பாருங்க, அட்டையில் எந்த் பகுதி மஞ்சள் நிறம் என்று அதை தான் சொல்லி இருக்கேன்) செய்ய முதல்ல கஷ்டமா இருக்க மாதிரி தெரியும்... செய்ய செய்ய எல்லாமே சுலபமாயிடும். இதை செய்ய எனக்கு 1 மணி நேரம் தான் ஆனது, ஸ்டோன் ஒட்டும் வேலையும் சேர்த்து. ட்ரை பண்ணுங்க :)

வினோ... மிக்க நன்றி. ரெடி மேடாவும் கிடைக்கும், ஆனா இது நான் செய்தது... பழைய ஆடைகளில் இருந்து சேர்த்து வைத்த மணிகள் கொண்டு செய்தது. :)

யாழினி... மிக்க நன்றி. நீங்க பயன்படுத்தும் அதே கிச்சன், ஹால் வேலைக்கு இது போல் செய்து வைத்து பாருங்க, பாராட்டு கிடைக்கும் :)

தளிகா... மிக்க நன்றி. நானா துரு துருன்னு இருக்கேன்??? நான் வாழைப்பழ சோம்பேரிங்க :)

ராணி... ரொம்ப நன்றி :)

சிவா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா