சோலா பூரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சோலா பூரி எப்படி செய்வது?. யாரவது வீட்டில் செய்து இருக்கிங்களா? எப்படி செய்யனும்?

ena pa enaku answer pana yarume ilaya? vanitha aka, nenga kuda ilaya

எனக்கு சோலா பூரி சாப்பிட மட்டும் தான் தெரியும். சூப்பெரா இருக்கும். இப்பொ நான் பூரிக்கு யெங்கெ போவேன்?

லதா இந்த லிங்க்ல சோலா பூரி குறிப்பு இருக்கு செய்து பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/13107. இன்னொரு முறை கோதுமை மாவு, மைதா, ரவா மூன்றையும் ஒரே அளவாக எடுத்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கொஞ்சம் பெரிய சப்பாத்தியாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ரொம்ப ஈஸி லதா...கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைச்சுக்குங்க....மறுநாள் அதை குக்கர்ல 6 சத்தம் விட்டு வேகவைங்க....1 கப் கொண்டைக்கடலைக்கு, 2 தக்காளி, 2 பெரிய வெங்காயம், 5 பூண்டுப்பல், ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், 2 கிராம்பு, 2ஏலக்காய், ஒரு சின்ன துண்டு பட்டை சேர்த்து மிக்ஸியில நைஸா அரைங்க....6 ஸ்பூன் எண்ணையில அரைச்ச கலவையை நல்லா எண்ணை பிரிய வதக்கணும்...அதில் மஞ்சள் பொடி, 1 ஸ்பூன் காரப்பொடி, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி, வெந்த கடலையை கையால கொஞ்சம் மசித்து சேர்த்து, தேவையான உப்பு போடுங்க. கொண்டக்கடலை வேக வெச்ச தண்ணியை வீணாக்காம அதில் சேருங்க.நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி தழையைக் கிள்ளிப் போடுங்க....பூரியை செய்து அதோட சோலேயை சுட, சுட பரிமாறுங்க....செய்து பார்த்து சொல்லுங்க லதா...

ரொம்ப நன்றி பா. நேற்று செய்துப்பார்த்தேன் பா.நல்ல இருந்தது. கல்யாண பாயசம் எப்படி செய்வது. google try panen ketaikala

மேலும் சில பதிவுகள்