ப்ரொக்கோலியை எப்படி, எதில் சேர்த்து சமைப்பது?

அறுசுவை தோழிகளே!! ப்ரொக்கோலியை எப்படி, எதில் சேர்த்து சமைப்பது? அது சாப்பிட காளிஃப்ளவர் போல் இருக்குமா? அதில் இருக்கும் சத்துக்கள் என்ன?

பொரியல், சூப், ரைஸ், க்ரேவி, சாலட் எல்லாமே செய்யலாம் விட்டமின் B1, B2, B3, B5, B6, B9, C, A, E, K கால்சியம், அயன், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சிங்க், ப்ரோட்டீன்

KEEP SMILING ALWAYS :-)

புரொக்கொலியில் கடாயில் சிரிது எண்ணெய் உற்றி இஞ்சி புண்டு பொடியாக நறுக்கியது உப்பு பொட்டு சிரிது தண்ணி உற்றி சிம்மில் வைக்கவும்

சாலட் செய்யலாம் நல்லா கொதிக்கிற தண்ணில உப்பு போட்டு ப்ரோக்கோலியை போட்டு உடனே எடுத்து அய்ஸ் தண்ணில பொட்டு பிறகு எடுத்து சாப்பிடலாம் கடையில இருப்பது போல ஃபிரஸ்ஸா க்ரீனா இருக்கும் இதோட சத்தும் அப்படியே கிடைக்கும்

ப்ரொக்கோலியில் வைட்டமின் சி, கே மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது. அதில் உள்ள தாதுப்பொருள் கான்சருக்கு எதராக செல்பட கூடிய தன்மையுள்ளது. ஆனால் அதை அதிகமாக வேகவைத்துவிட்டால் அதன் சத்து அழிந்துவிடும். அதிகபட்சமாக நான்கு நிமிடம் தான் அதனை ஸ்டீம் செய்ய வேண்டும்.

அறுசுவையில் நிறைய குறிப்புகள் இருக்கிறது. நீங்கள் மற்ற காய்கறிகளை செய்வது போலவே இதையும் சமைக்கலாம். இது இந்த காய் மாதிரி அந்த காய் மாதிரி என்று சொல்ல தெரியவில்லை ஏனென்றால் இதற்கென்று ஒரு தனி சுவை உண்டு. இதை ஸ்டீம் செய்து உப்பு மிளகு தூள் தூவி அப்படியே சாப்பிடலாம். நன்கு கழுவி பச்சையாகவும் சாப்பிடலாம். சூப், சாலட் போன்றவற்றிலும் சேர்க்கலாம். இல்லையா நம்ம ஸ்டைலில் பொரியல், சாம்பார், வறுவல் செய்தும் சாப்பிடலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்