தேதி: November 26, 2011
அட்டை குழாய்கள் (கிச்சன் டவல் குழாய்கள் அல்லது பாத் டிஸ்யூ குழாய்கள்
தடித்த அட்டை (சீரியல் பெட்டி அல்லது விளையாட்டு பொருட்கள் வைத்து வரும் பெட்டி மட்டைகள்)
கன்ஸ்ட்ரக்ஷன் கடதாசிகள் மற்றும் டிசைனர் கடதாசிகள்
சாதாரண கத்தரிக்கோல் மற்றும் டிசைனர் கத்தரிக்கோல்கள்
க்ளூ
ஸ்டிக்கர்கள்
மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

தடித்த அட்டையில் வட்டங்கள் வரைந்து கத்தரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

குழாய்களை தேவையான அளவுகளில் வெட்டி அதன் ஒரு பக்கத்தில் 3/4 - 1 அங்குல அளவில் கத்தரிக்கோலால் கீலங்களாக/துண்டுகளாக வெட்டி மடிக்கவும்.

இத்துண்டுகளில் க்ளூ தடவி வட்டமாக வெட்டிய அட்டையில் வைத்து ஒட்டவும்.

கன்ஸ்ட்ரக்ஷன் கடதாசி அல்லது டிசைனர் கடதாசியில் வட்டமாக வெட்டிய அட்டையின் அளவு வட்டத்தைவிட சிறிது பெரிதாக வட்டங்கள் வெட்டி நடுவில் குழாயின் அளவில் சிறிய வட்டத்தையும் வரைந்து வெட்டவும். அத்தோடு குழாயின் உயரத்தை விட உயரமாகவும் குழாயை சுற்றக்கூடியதுமாக நீண்ட துண்டுகளும் வெட்டவும்.

வட்டமாக வெட்டிய கடதாசியை குழாயின் மேற்பக்கத்தின் வழியாக அடிவரை நுழைத்து கீழ் பக்கமாக திருப்பி படத்தில் காட்டியது போல வெட்டவும். (அகலமாக வெட்டாது சிறிய துண்டுகளாக வெட்டினால் மடித்ததும் நீட்டாகவும், அழகாகவும் இருக்கும்)

பின்னர் வெட்டிய துண்டுகளை க்ளூ தடவி மடித்து ஒட்டவும்.

நீளமாக வெட்டிய துண்டின் இரு ஓரங்களிலும் க்ளு தடவி குழாயை சுற்றி ஒட்டி நீண்டிருக்கும் பகுதியை சிறு துண்டுகளாக வெட்டவும். பின்னர் இதனை க்ளூ தடவி உள்ளே மடித்து ஒட்டவும்.

பின்னர் விரும்பியவாறு அலங்காரம் செய்யவும். வர்ண கடதாசிகளில் ஷேப்ஸ் வெட்டி ஒட்டலாம். அல்லது டிசைனர் கடதாசி என்றால் அப்படியே வைக்கலாம். பிள்ளைகளால் இலகுவாக மீள்சுழற்சி பொருட்களில் செய்யக் கூடிய 'மல்டி பர்பஸ் ஹோல்டர்' தயார். அன்றாடம் பாவிக்கும் பென்சில், பென், சிறிய கத்தரிக்கோல் போன்றவைகளை இதனுள் வைக்கலாம்.

இதுப்போல் சிறிதாக செய்து பின்கள் (Pins), மணிகள், பட்டன்கள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். அல்லது பிள்ளைகளின் பெயிண்டிங் பிரஷ்களை வைக்கலாம்.

செயற்கை பூக்களை அலங்காரமாக அடுக்கி வைக்கலாம். அல்லது உள்ளே மெல்லிய நீண்ட பாட்டிலில் (சிறிய பவுடர் டப்பா அல்லது க்ரீம் டப்பா போன்றவை) தண்ணீர் ஊற்றி வைத்து அதனுள்ளே இயற்கைப் பூக்களை சொருகி வைக்கலாம்.

இதே போல சிறிதாக செய்து குழாய் பகுதியை கீழேயும் வட்டமான அடிப்பகுதியை மேலேயுமாக வைத்தால் பொம்மைகள் வைத்து பிள்ளைகள் விளையாடக் கூடிய சிறிய விளையாட்டு மேசை தயார். தீப்பெட்டி கதிரைகள் அல்லது சிறிய ப்ளாஸ்டிக் கதிரைகளை சுற்றிவர வைத்து விளையாடலாம் :)

Comments
ஹோல்டர்
மிகவும் உபயோகமான, சுலபமாக செய்யக் கூடிய ஹோல்டர் :) கடைசி படம் மிக அருமை
KEEP SMILING ALWAYS :-)
மல்டிபர்பஸ் ஹோல்டர்
ஹோல்டர் அழகா இருக்கு. செய்முறை விளக்கமும் ரொம்பவே தெளிவா எளிதாக புரிஞ்சுக்கிறது போல இருக்கு நர்மதா, வாழ்த்துக்கள். நிச்சயம் செய்து பார்க்கனும்.
நர்மதா
உங்க ஹோல்டர் செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கு. கடைசிப்படம் சூப்பர்.
நர்மதா
அழகான ஈஸியான ஹோல்டர் வாழ்த்துகள் கடைசிபடம் பொம்மைகள் அழகா இருக்கு பூந்தொட்டியாய் இருப்பதும் அழகே
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
நல்லதொரு கைவினை பொருள்...
நல்லதொரு கைவினை பொருள்... குழந்தைகளுக்கு சொல்லி தர மிகவும் எளிமையாக உள்ளது... வேஸ்ட் பொருள் கொண்டே செய்து உள்ளது அருமை... வாழ்த்துக்கள்....
நன்றி
அன்பின் அருசுவை டீம் மற்றும் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
-நர்மதா :)
சுபர்ப் நர்மதா
வீட்டில் குட்டீஸை வைத்திருக்கும் ஆட்களுக்கு நல்லநல்ல ஐடியாஸ் எல்லாம் கொடுக்கிறீங்க.
- இமா க்றிஸ்