பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புத் தோழிகளே....பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது...அனைத்து தோழிகளும் வந்து அவரவர் எண்ணங்களை, கருத்துக்களை எடுத்துக் கூறி பட்டி மன்றத்தை சிரிப்பு மன்றமாக்குங்கள்!!

அன்பு நடுவருக்கு வணக்கம்.... அருமையான தலைப்போடு பட்டியை நேரத்தோடு துவங்கியமைக்கு மிக்க நன்றி. முதன் முதலாக பட்டிமன்ற நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் அழகு, ஒவ்வொருவரும் அழகு... இயற்கையும் அழகு, இயற்கையாகவே எல்லாம் அழகு... என் சொல்லி “இயற்கை அழகே போதுமானது” (ஆடை ஒப்பனையில் சேராதில்லையா? ;) மேக்கப் மட்டும் தானே??) என்ற அணிக்கே என் வாதம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவர் ராதாம்மாவுக்கு, என் முதற்கண் வணக்கங்களோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடுவராக முதலில் தலைமையேற்கும் பட்டியின் தலைப்பே அழகு தான். நான் ஒப்பனை அவசியம் என்று வாதிட விரும்புகிறேன். பட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கண்டிப்பாக ஒப்பனை அவசியம் இக்காலத்தில்....முகத்தில் புருவம் சிலருக்கு இயற்கயாக அழகாக இருக்கும்,ஆனால் அது சரி இல்லாமல் இருந்தால் முகத்தின் அழகே பாதிக்கப்பட்டது போல தெரியும்...இதுபோல் ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களை சரி செய்துக்கொண்டால் மிக அழகாக காட்சியளிப்பர்..சிலர் ஓவராக மாற்றிக் கொண்டு விகாரமாக காட்சியளிப்பர் அது தவறு...தனக்கென்று வறையரை வைத்துக் கொன்டு அழகாக காட்சியளிப்பது
எதிரில் ஒருவர் கோபமாக வந்தால் கூட ,ப்ரெஷாக அழகான தோற்றத்தை பார்த்தவுடன் கொன்சம் நிதானமாகி விடுவார்கள்...நமது சூழ்நிலைக்கு ஏற்ப அழகாக்கி கொள்ள வேணும்
கணவன் முன்னால் நல்ல ஸ்டைலாக் இருக்கலாம்..வெளியில் தனியாக போகும் நிலையில் சுமாராக,திருமணத்த்ற்கு,விருந்திற்கு நல்ல தோற்றதிலும்...இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை அழகுப்படுத்திக் கொண்டால் எல்லோர் மனதிலும் அழகாக தெர்வோம்
இவ்வாறு மாறிக் கொண்டால், ஆபத்திலும், சங்கடத்திலும் தப்பித்துக் கொள்ளலாம்

நடுவரே, என் வாதத்தை முதலில் வீட்டிலிருந்தே துவக்குகிறேன்.

வீட்டுத் தலைவன் அலுத்து களைத்து, சுடுமூஞ்சி ஜிஎம்மிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வேலை முடித்து வீடு திரும்புவார். அப்போது அவருடைய மனைவி எண்ணெய் ஜிகிடு வாடை வரும் புடவையோடும்,வியர்வை வழியும் முகத்தோடும் இருந்தால் எப்படி இருக்கும். அந்தம்மாவை பார்த்ததும் அவரின், வெறுப்பும்,களைப்பும்,எரிச்சலும் பன்மடங்கு அதிகமாகும். அந்த சமயத்தில் அந்தம்மா இயற்கையான முக அழகோடு தான் இருக்கிறார். இருந்தும், அந்த இயற்கை அழகு ஏன் அவரின் களைப்பு,வெறுப்பை போக்கவில்லை. அந்தம்மா, அவருக்கு ஏழு தெரு மணக்கும் கும்பகோணம் டிகிரி காபியும்,நெய் சொட்டும் அல்வாவும், தூள் பக்கோடாவும் தந்தாலும் சரிகட்ட முடியாது. அந்த இடத்தில் அதே பெண் முகத்தை கழுவி வேறு புடவை உடுத்தி லேசாக பவுடர் பூச்சோடு,குங்கும பொட்டோடும், தலையில் ஒரு சரம் முல்லை பூவோடும் அவரை வரவேற்கட்டும். அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவுடனே அவரின் மனநிலையே மாறிவிடும். அதுவரை அவரிடம் இருந்த வெறுப்பு,கோபம்,எரிச்சல் எல்லாம் போன இடமே தெரியாது. இப்போது சொல்லுங்கள் நடுவரே ஒப்பனை தேவையா?இல்லையா என்று?

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வந்து விடுகிறார். அவர் இதற்கு முன்பு வராதவர். அன்றுதான் முதன்முதலாக வருகிறார். அப்போது நான் மேலே சொன்னது போல குடும்ப பெண் இருந்தால், அவரென்ன நினைப்பார். அவர் அன்பாக வரவேற்று உபசரித்தாலும், எண்ணெய் வழிந்த முகம் அவரின் வரவேற்புக்கு பொலிவை சேர்க்காது. வந்த விருந்தாளி, அவருடைய வீட்டம்மாவிடம் இப்படி விமர்சிப்பார்.”நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தேன். கல்யாணத்துல பார்த்தேன். ஓஹோ..ஆஹான்னு இருந்தாங்க. வீட்ல பார்த்தா அழுக்கு மூட்டை மாதிரி எண்ணெய் வழிஞ்சுட்டு, ஒரு சுத்தமே இல்ல..” இதுக்கு மாறாக நான் மேலே ஒப்பனையோடு சொன்னது போல இருந்தால் என்ன சொல்வார். அந்தம்மாவுக்கு நல்ல சிரிச்ச முகம்..லஷ்மிகரமான முகம். நல்லா பேசினாங்க..நல்லா உபசரிச்சாங்கன்னு. மேக்கப் என்னென்ன வேலை பண்ணுது பாருங்க..

அடுத்தபடியா பள்ளியோடத்துக்கு போவோம் வாங்க நடுவரே !

இங்கே படிக்கிற பசங்க இயற்கை அழகோட காலைல தூங்கி எந்திரிச்சு, ஊத்த பல்லை விலக்காம,கொட்டாவி ஜொள் வழிஞ்ச முகத்தை கழுவாம,ஒரு பக்கம் ரிப்பனோட,மறுபக்கம் ஜடை அவிழ்த்து விட்டுட்டு பேகை மாட்டிட்டு போனா எப்படி இருக்கும்? அட, அதை விடுங்க நடுவர் அவர்களே.. அங்கே படிப்பு சொல்லி தரும் வாத்தியாருங்க இதே கோலத்துல வந்தா எப்படி இருக்கும்? இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியல. இதுல எப்படிங்க நடுவரே உங்களுக்கு ஒப்பனைக்கு மாற்றாக இயற்கை அழகை கொண்டு வர முடிஞ்சது? ;(

முக்கியமான விஷயத்துக்கு வர்றேன் நடுவர் அவர்களே.. இப்ப கல்யாண வீட்டுக்கு போகலாம் வாங்க...
அதோ ரிசப்ஷன்ல நிக்குற கருப்பு பொண்ணுக்கு எவ்ளோ மேக்கப் பண்ணாலும் கலர் வெளுக்குதான்னு பாருங்க.. இதுல வியர்வைல குளிச்சு, நீலசாயம் வெளுத்து போச்சு..டும்டும்.கதைதான்..இருந்தாலும் முயற்சியில் தளராத விக்ரமாதித்தன் போல அது எவ்ளோ நம்பிக்கையா 2000 ரூபாய் தண்டம் அழுது மேக்கப் போட்டிருக்கு பாருங்க. அதுக்கு கொண்டாட்டம்..பார்க்குற நமக்கு திண்டாட்டம் :( இந்த பொண்ணை மேக்கப் போட்டே கண் கொண்டு பார்க்க முடியல. மேக்கப் இல்லாம இயற்கை அழகோட இதை கற்பனை பண்ணி பாருங்க. எந்த தைரியத்துல இயற்கை அழகே போதும்னு எதிரணி சொல்ல வரப்போறாங்கன்னு தெரியல. இவங்களை எல்லாம் ஒருநாள் நடிகைங்க மேக்கப் இல்லாம இருக்கும்போது கூட்டிட்டு போய் காட்டனும். அப்ப புரியும். அந்த நடிகைகளுக்கு மேக்கப் போடும் மேக்கப்மேன்கள் வாழ்க்கையே சூன்யமா இருக்கும் நடுவரே. மேக்கப்மேன்கள் மட்டும் இல்லைனா நம்ம கதி என்னவாகியிருக்கும்.என்னவாகும். எண்ணிப்பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஹா....பட்டியை வெகு வேகமாக தொடங்கி வைத்த தோழிகளுக்கு நன்றி....ஏனெனில் இது அழகு பற்றிய விவாதமாச்சே...அழகை ஆராதிக்காத மானிடரும் உண்டோ இந்தப் புவியில்?

வனிதா...முதல் பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி...இயற்கை அழகே போதும் என்ற அணிக்கு பேச வந்துள்ளீர்கள்...இதில் நிச்சயமாக ஆடைக்கு இடமில்லை...ஆடைகளைப் பற்றித்தான் சென்ற பட்டியில் பேசி விட்டோமே...இது முழுக்க, முழுக்க மேக்கப் சமாசாரம்தானுங்கோ அம்மணி...வந்து வெளுத்துக் கட்டுங்கோ...

ஒப்பனை அவசியம் என்ற வாதத்துக்கு பேச களம் இறங்கியிருக்கும் தோழி கல்பனா....வாழ்த்துக்கு நன்றி...
அப்பப்பா...ஆரம்பமே ஜோர்தான்...அலுத்து களைத்து வரும் கணவருக்கு மட்டுமல்ல....ஆசையோடு வரும் கணவனுக்கும் இந்த வரவேற்பு தேவைதானே?..

"அந்தம்மாவுக்கு நல்ல சிரிச்ச முகம்..லஷ்மிகரமான முகம். நல்லா பேசினாங்க..நல்லா உபசரிச்சாங்கன்னு. மேக்கப் என்னென்ன வேலை பண்ணுது பாருங்க"...
அப்பட்டமான உண்மைதானுங்களே? மறுக்க முடியுமா?பள்ளிக்கூடம், ரிசப்ஷன்னு அசத்தலா சொல்லிருக்கீங்க...எதிரணி என்ன சொல்லப்போறாங்கனு பார்ப்போம்..

ரியாஸா...அழகைப் பற்றி ரொம்ப அழகா, அமைதியா சொல்லியிருக்கீங்க...சூப்பர்...

இயற்கை அழகுக்கு கொடி பிடிக்கும் எதிரணியினரே...வாங்க...வாங்க...ஒப்பனை அணியில ரெண்டு பேரும் அனாயாசமா பேசிருக்காங்க....வந்து எதிரணிக்காரங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்க...

அப்படியே தூங்கி வழிஞ்சு எழுந்து போற மாதிரி இல்லாமல் லைட்டா தெரியாத மாதிரி போட்டுக்கலாம் தப்பில்லை அப்படியே அப்படிக்கொண்டு திருவிழாவுக்கு விட்ட யானை போல போடுவார்கள் சிலர் கருமமாக இருக்கும் பார்க்க..அதுல வேற ரொம்ப அழகா இருக்காங்கன்னு தாமே நெனச்சுகிட்டு ஒரு ஸ்பெஷல் பாவனையோட வேற நடப்பாங்க அதை விட கொடுமை.
அப்படியே உதடு தெரிச்சு விழுற மாதிரி லிப்ஸ்டிக்கும் கண்ணம் ரெண்டும் தனியா தெரியுற மாதிரி ரோஸும் கண்ணு புருவம் ரெண்டும் வடிச்சு முகமே வீங்கிப் போய் எப்படியெல்லாம் முகத்தை நாசமாக்க முடியுமோ அப்படியெல்லாம் செஞ்சுகிட்டு சீக்கு கோழி மாதிரி இருப்பாங்க யாருக்காக என்ன சந்தோஷம் இதுல கெடைக்கப் போகுதுன்னு புரியவே புரியாது.
ஒரு சினிமா நடிகை சந்தியா என்ற பொண்ணு அழகா இருந்தது கியூட்டா அதுக்கு என்ன லூசு புடிச்சதோ மூக்கை சீவி விட்டு இப்ப மைக்கேள் ஜாக்சன் போல ஆகிடுச்சு:-(
நாலு பேர் திரும்பி பாக்கனுமே என்கிற அளவுக்கு மேக் அப் போடுவது ரொம்ப தப்புன்னு கூட சொல்லலாம்

சிறப்பான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கு முதலில் என் வணக்கங்கலூம் வாழ்த்துக்களும்;-)

பட்டியில் வாதடாடுவதற்கு முன் பட்டியின் தலைப்பு பற்றிய தங்களது விளக்கத்தில் சின்ன சந்தேகம்....

ஹி ஹி ஹி எப்பவுமே உனக்கு சந்தேகம்தானான்னு எல்லாரும் என்னைப்பாத்து கேக்கறீங்க புரியுது ஹி ஹி என்ன பண்றது ஜெய் வந்தாலே சந்தேகமும் வந்துருது.......

நடுவரே

அன்னைத்தெரசாக்கு அடையாளம் வெள்ளை அங்கி அது புடவைன்னு ஏத்துக்க முடியாது போப் ஆண்டவர் மாதிரியே ஒரு நீளமான வெள்ளைத்துணியை உடலில் சுத்தியிருப்பாங்க சின்ன ப்ளு கலர் பார்டரும் இருக்கும்...

கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டிருப்பாரு.....

ஜெயாம்மாவும் (நான் இல்லைங்க நடுவரே) ஒரு ப்ளைன் புடவை மட்டுமே கட்டியிருப்பாங்க.....

வைரமுத்து ஜேசுதாஸ் வெள்ளை ஜிப்பா....

இதெல்லாமே ஒப்பனைலதான் வருதுங்க்றது என் அபிப்பிராயம் ஏன்னா இந்த உடையில் இருந்து கொஞ்சம் சேஞ்ச் பண்ணினாலே நமக்கு அவங்களை பாக்க ஒருமாதிரியா இருக்கும் அவங்களுக்கும் கம்ஃபர்ட் இருக்காதுன்னு நினைக்கிறேன்...அதாவது வீட்டில எப்படிவேணாலும் இருககலாம் ஆனால் வெளியே மூன்றாவது நபர் முன் இருக்கும்போது அணியும் உடை கூட ஒப்பனையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து ........

ரொம்ப சங்கடத்தை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்;( கொஞ்சம் டவுட் க்ளியர் பண்ணுங்க மேற்கொண்டு வாதம் செய்ய உதவியா இருக்கும்;-)

Don't Worry Be Happy.

வணக்கம் நடுவர் அவர்களே நல்ல தலைப்பு தேர்ந்தெடுத்துக்கு முதலாவது நன்றி,
இயற்கை அழகுன்னா முகம் கழுவாம தலை சீவாமா இருக்கரது இல்லங்க இதெல்லாம் அடிப்படையானது, இதெல்லாம் எல்லாரும் செய்துதான் ஆகனும்,
நாங்க சொல்லவர்ரது இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்தான் என்னங்க அது கண்ணுக்கு மேல வண்ணம் தீட்டி, கண்ணத்துல வண்ணம் தீட்டி சிலர் பாம்பு மாதிரி நீல கலர் வண்ணம் பூசிகிட்டு எதுக்கு இந்த கொடுமையெல்லாம்?
இன்னும் இந்த தலைல பூசர கலர் இருக்கே நினச்சாலே பயமாயிருக்கும், தலை எரியிர கலர்ல இருக்கும்.

இப்படிக்கு ராணிநிக்சன்

அன்பு ஜெயலட்சுமி....தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

வந்துட்டாங்கம்மா....வந்துட்டாங்க! உங்க சந்தேகத்தை தீர்த்து வெக்க வேண்டியது சந்தேகமில்லாம என்னோட கடமைங்கம்மா....

ஒப்பனையில் ஆடைக்கு இடமேயில்லை....ஏனெனில் ஒப்பனை என்றாலே மேக்கப் என்பதுதான் பொருள்...மேக்கப்பை நாம் முகத்துக்குதான் போடுவோம்....

ஒப்பனையில் மூன்று விதங்கள் உண்டாம்....நாடகம்,சினிமா போன்று மேடைகளுக்கு போடும் ஒப்பனை, திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்கு எடுக்கப்படும் புகைப்படத்திற்காக செய்து கொள்ளும் ஒப்பனை, கடைசியாக நாம் வெளியில் செல்லும்போது செய்து கொள்ளும் ஒப்பனை......இது நான் சொல்லவில்லை....ஒரு புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர் சொன்னது.

இதில் உடைகளுக்கு சம்பந்தமே இல்லை....மேலும் அழகு என்கிறபோதே நம் நினைவுக்கு வருவது முகம்தானே? அதற்கு அழகு செய்து சற்று மேருகேற்றுவதுதான் ஒப்பனை.

ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி உடை அணிவதை அவர்களின் தனிப்பட்ட ஸ்டெயில் என்று சொல்லலாம்.உங்கள் ஸ்டெயில் புடவைத் தலைப்பை பின் செய்வதாய் இருக்கலாம்....என்னுடைய ஸ்டெயில் தலைப்பை ஒற்றையாய் தொங்கவிடுவதாய் இருக்கலாம்...அது போலதான் அன்னை தெரஸா, முதல்வர் ஜெயலலிதா ஸ்டெயில்களெல்லாம்.....
.
என்ன ஜெயாம்மா....விளக்கம் போதுமாம்மா?

மேலும் சில பதிவுகள்