மனப்பக்குவம் எனக்கு ஏற்பட உங்கள் ஆலோசனை தேவை

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு ஆறு மாத குழந்தை உள்ளாள், என் பிரச்சனை இது தான்:-

1. குழந்தை பிறந்த தால் வேலை விட்டுவிட்டேன். நான் விரும்பியே எடுத்த முடிவு. இருந்தாலும் என்னவோ மனதுக்கு கஷ்டமாக
உள்ளது.
2. என் அம்மாவுக்கும் மாமியாருக்கும் ஒத்து வராது. அதனால் அவர்கள் என்னுடன் வந்து எனக்கு உதவியாக இருக்க முடியாது.
3. என் மாமியாரும் அடிகடி சண்டை வருது. இதானால் என் கணவர் என்னிடம் அன்பாக இல்லை.

இதை போன்ற பிரச்சனை உங்கள் பலருக்கு இருக்கும். இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்.
நானும் என் குழந்தை , பாட்டு கேட்பது, தொலைக்காட்சி பார்பது என்ரு செய்து பார்க்கிறேன். உண்மையில் என்னால் இந்த மனக் குழப்பதில் இருந்து
மீள முடியவில்லை.

என்னை போல் குழந்தை பிறந்த தால் வேலை விட்டு , வீடிலும் மாமியார் பிரச்சனை இருந்தாலும் அதை எதிர் கொண்டு சிரப்பாக இருப்பவர்கள்
இங்கு இருப்பீற்கள். அந்த பக்குவம் எனக்கு ஏற்பட உங்கள் ஆலோசனை தேவை. தருவீற்களா?

enna ezhil nalla irukkeengala,muthalla manakulappathai vidunga,iruthi varai ethirparthu ethirparthe nam valgai mudinthu vidum,nanum appadithan neengalum appadithan,ulagamae appadithan,ana sila paeru aduthavangalai kayapaduthi athil tharkalika santhosam kanparkal,avunga kitta nama konjam sakirathayathan irukanum,neenga kavalai paduvathu,ulagathil ulla pathi penkalin kavaliai,ithai konjam samarthiyamaga than kaiyala ventum,neenga unga mamiyaridam konjam karisanamaga paesi parunkal,avarkal tituvathai kathil pottu kollatherkal,mamiyaridam nalla paesina hus idam avarkal nammai patri pottu kodukka mattanga,ungalukku kustama irunthalum avanga ungalai titinalum kongam poruthukollungal,avungalukku enna ventum entru sirichu paesi parunga,pothuva intha santai yae nama kalyanam panni pona udanae nammalai avarkal ethiriyaka parpathal than,nam oru frienda treat panninal avarkal thiruntha vaipundu,en karuthukal unkaluku pidika villai entra i really sorry,apuram mamiyaritam konjam nalla (namakkaka)palakiita hus thana namkitta thana nalla paesuvar,enna mamiyar thunti vidama irukkumla,ellamae namma samarthiyathil than irukku ezhil ,dont worry take care!enjoy with your baby,(viravil unga hus sandai podaml paesuvar, 3perum enjoy pannunga)ALL THE BEST

ஹேமமாலினி ...கொஞ்சம் தமிழ் ல type பண்ணினா எல்லோருக்கும் படிக்க வசதியா இருக்கும்...எழுது உதவி use பண்ணுங்க...இல்லன்னா http://www.google.com/transliterate/Tamil இதயாவது use பண்ணுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாலோ தோழி,
உங்களுக்கு மணமாகி எவ்வளவு வருடம் ஆகுதுனு தெரியல,(this problem is common for newly married).
1.First thing, u should need more paient. It gives permanent solutions.
2.சரியோ,தப்பே மாமியார் எது சொன்னாலும் முதலில் தலையாட்டி விடுங்கள்.It reduce her ego(or) she also think about you afterr sometime.
3.சில சிறிய விஷயங்களில் அவருக்கு பிடித்ததை(Ex.சமையல்) செய்யவும்.
முதலில் இதை செய்யவும்.கண்டிப்பாக problems குறையும்.
If mother happy then son will happy automatically.so don't worry.
again i am saying you should be paient.
(iam also daugther-in-law not a mother -in-law. )
ALL THE BEST.

இது எல்லாருக்கும் உள்ள ப்ராபளம் தான் நீங்க முதலில் கவலைபட வேண்டாம் , உங்க கணவர் இடம் மனம் விட்டு பேசுங்க , அடுத்து உங்க அத்தைக்கு உங்களிடம் என்ன கோவம் என்று கேட்டு , அதை எப்படி சரி செய்வது என்று பாருங்கள் , அடுத்து உங்க அம்மாக்கும், அத்தைக்கும் ,என்ன மன வருத்தம், என்று கேட்டு அதை பற்றி பேசுங்க, ஆனால் எந்த பெரிய ப்ராப்ளம் இருந்தாலும் நீங்க,உங்க கணவர், உங்க மாமியார் , நீங்க மட்டும் பேசி ப்ராபளம் முடிங்க , உங்க அத்தைக்கு என்ன புடிக்கும் அது மாறி இருங்க, கொஞ்ச நாள் உங்க அம்மாவை அமைதியா இருக்க சொலுங்க ,

நிறைய பெண்களுக்கு வர ப்ராப்ளம் தான் இது. ஏன் எல்லா பெண்களுக்கும்னு சொல்லலை?
1. எப்பேற்பட்ட செல்ல பெண்ணா இருந்தாலும் கல்யாணம் பண்ணி கொடுத்த்வுடன், புகுந்த வீட்டுக்காரங்க பேச்சை கேளுன்னு அம்மா சொல்லிக்கொடுத்தாங்கன்னா ----- அந்த பொண்ணு தப்பிச்சா--- இல்லன்னா இந்த மாடர்ன் யுகத்திலையும், இதே புருஷன் பெண்டாட்டி தகராறு தான்.1. உங்க அம்மாவை அடக்கி வாசிக்க சொல்லுங்க, அவங்க அடிக்கிற லூஸ் கமெண்ட்ஸ்னால உங்களுக்கும் உங்க ஹஸ்பெண்ட்க்கும் இடையில கேப் விழும்--- இது உங்க நீண்ட கால தாம்பத்யத்துக்கு நல்லது இல்ல.
2. என் ஹஸ்பெண்ட் தான் மோசம், மத்தவங்க எல்லாம் மனைவி பேச்சை கேக்குறாங்க, அப்படிங்கற எண்ணத்தை தூக்கி எறிங்க.உண்மையா ஆராய்ஞீங்கன்னா, அவங்களும் நிறைய விட்டு கொடுத்து போயிறுப்பாங்க
it is too late today, will continue tomorrow. dont worry u can solve ur problem if u do things in right and dedicated way
good night

அழகான பெயர்....குழந்தை பிறந்து ஆறு மாதம் தானே ஆகிறது? பொதுவாகவே பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் உடம்பில் பல மாற்றங்கள் ஏற்ப்படும். அதுவும் இந்த ஹார்மோன் கன்னப்பின்னவென சுரப்பதால் சிலருக்கு டிப்ரெஷன் கூட வரலாம். சில பெண்களால் தங்களின் உடலில் உள்ள மாறுதல்களை கூட பொறுத்துக் கொள்ள முடியாது. சிலரால் தன்னால் தனியாக செயல்படமுடியவில்லை ஆண்கள் மட்டும் எப்பொழுதும் போலவே இருக்கிறார்கள், அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை என்று கோவம் கூட வரலாம். அதுவும் இல்லாமல் நீங்கள் வேலைக்கு போய்விட்டு இப்பொழுது வீட்டில் இருப்பதால் தான் உங்களுக்கு இந்த மனக்குழப்பம்.

ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். நீங்களாகவே விரும்பி தான் வேலையை விட்டீர்கள். அதனால் அதை பற்றி பேசவே கூடாது. நீங்கள் வீட்டில் இருக்கீங்க அதுவும் இல்லாமல் மாமியாரும் உங்களுடன் தான் இருக்கார் (இல்லையா?).....அம்மா எதற்க்காக வந்து உங்களுடன் தங்க வேண்டும்? உங்களின் குழந்தையை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு நம் தோழிகள் பலர் யாரும் துணைக்கு இல்லாமல் வெளிநாட்டில் தனியாகவே குழந்தை பெற்று அழகாக பார்த்தும் கொள்கிறார்கள். அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை வந்து விடும். குழந்தை சிறிது வளர்ந்த பிறகு நீங்கள் வேலைக்கு செல்லலாம். குழந்தையை முதல் இரண்டு வருடங்களை எந்த ஒரு காரணதிற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அதனால் சந்தோஷமாக அவர்களின் குழந்தை பருவத்தை அனுபவியுங்கள். அவர்கள் தவழ்வதை, எடுக்கும் முதல் அடி, பேசும் முதல் வார்த்தை இப்படி எதையும் விடாமல் படம் எடுங்கள். உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். நேரம் போவதே தெரியாது. பிறகு கவலை படவே நேரமிருக்காது.

உங்களின் மாமியாருக்கும் உங்களுக்கும் எதற்க்காக சண்டை வருகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். உங்களால் என்றால் அதை நிறுத்த பாருங்கள். இல்லை அவர்களால் தான் வருகிறதென்றாலும் நீங்கள் அமைதியாகவே இருங்கள். நீங்கள் அமைதியாக இருப்பதால் நீங்கள் பலவீனமானவர்கள் அல்லது பயந்தவர்கள் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. இதனால் தானே உங்கள் கணவர் உங்களிடம் அன்பாக இல்லை. நமக்கு வாழ்வில் எது முக்கியம். உங்கள் கணவருடன் அன்பாக இருப்பதா இல்லை சண்டை போட்டு யார் பெரியவர்கள் என்ற முடிவா என்பதை நீங்கள் யோசனை செய்து பாருங்கள். பெண்களுக்கு எப்படி பிறந்த வீட்டை பற்றி தவறாக பேசினால் கோவம் வருமோ ஏதோ போல் ஆண்களுக்கும் அதே மாதிரி தான். அவர்கள் வெளி காட்டும் விதம் வேண்டுமானாலும் வேறாக இருக்கலாம். மனோஹரி அவர்கள் இங்கே ஒரு இழையில் சொல்லியிருந்ததை உங்களுக்காக திரும்பவும் சொல்கிறேன் " எப்பொழுதுமே கணவர்கள் மனைவி தங்களின் குழந்தை மீதும் தன் குடும்பத்தார் மீதும் காட்டும் அன்பும் பரிவும் தான் அவர்களை அன்புடன் இருக்க செய்யுமாம்". இதை மட்டும் நீங்கள் புரிந்துக் கொண்டால் உங்களுக்கு தானாகவே பக்குவம் வந்து விடும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எழில்மதி ...அழகான பெயர் உங்களுக்கு...உங்கள் தலைப்பை பார்த்துதான் இந்த பக்கம் வந்தேன்.எல்லோரும் மாமியாருடம் சண்டை,மனஸ்தாபம் ,கணவர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லுவார்கள்.எல்லோர் veetelum இருக்கும் பிரச்னை தான்... அனால் நீங்கள் வித்தியாசமாக இதை புரிந்து கொள்ளும் மனபக்குவம் வேண்டும் என்று நினைகீரீர்கள் அல்லவா... அந்த குணமே ஒருநாள் உங்கள் veetel உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.

என் மாமியார் என்னோடு இல்லை... நாங்கள் தனியாக தான் இருக்கிறோம்...அதனால் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கவில்லை...ஒருவேளை சேர்ந்து இருந்தால் பிரச்சனைகள் வரலாம்...அதனால சும்மா அட்வைஸ் தான...அள்ளி விடலாம் அப்படின்னு உங்களுக்கு சொல்ல வரலை...சின்ன சின்ன விஷயங்கள் ல மாற்றி/மாறி பார்ப்போமே....அன்பை கொடுத்துதான் அன்பை வாங்க வேண்டும்... அவங்களும் ஒரு அம்மாதானே ...

எனக்கு தோன்ற சின்ன சின்ன ஐடியா சொல்றேன்...பிடிச்சத எடுத்துக்கோங்க...மாமியாரையும் கணவரையும் பாராட்டுங்க ... : எத பண்ணினாலும் பாராட்டணும்னு இல்ல...இந்த உலகத்துல யாரும் 100 % perfect இல்லங்க...சில விஷயங்கள் அவங்களும் நல்லா பண்ணுவாங்க...சமயல் உங்க அத்தை பண்ணிருந்தன்கன்னா கொஞ்சம் பாராட்டி தான் வையுங்க....குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகம் வரும்...அதுக்கு பதிலை இன்டர்நெட் ல தேடாம (தேடினாலும் ) உங்க அத்தை கிட்டயும் கேளுங்க.."உங்களுக்கு தெரியதாதா அத்தை... உங்களுக்குத்தான் அனுபவ அறிவு அதிகம்" அப்படின்னு சொல்லி பாருங்க......(சொல்றத செயுரோமோ இல்லையோ!!!!) ...பாராட்டுக்கு மயங்காத ஆள்கள் ரெம்ப கம்மி...உங்க மாமியாரோடு உங்களுக்கு நல்ல relation வந்துச்சுன்னா அவங்க உங்கள பத்தி உங்க husband கிட்ட சொல்றதும் korayum ... உங்க relationship பும் develop ஆகும்...

மாமியார் மருமக பிரச்சன ஆரம்பிக்கற முக்கிய இடம் ...இவ நம்ம மகன நம்மகிட்ட இருந்து பிரிசுடுவாளோ ங்கற எண்ணம்...அந்த மாதிரி ல்லாம் இல்லைங்கற நம்பிக்கை அவங்களுக்கு வந்துடுச்சுன்னா ...அவங்களே கொஞ்சம் ஈசி ஆகிடுவாங்கன்னு நினைக்குறேன் ...நீங்க டிவி பாக்ற timela கொஞ்ச டைம் அ அவங்களோட spend பண்ணி பாருங்க... அன்னன்னிக்கு நடக்குற நியூஸ் ...இல்லன்ன அவங்களுக்கு பிடிச்ச விஷயமா எதாச்சும் பேசி பாருங்க...சேர்ந்து கோவிலுக்கு போங்க...சில சமயம் நம்மளே கூட தப்பு பண்ணுவோம்...அத சொன்னா நம்ம ஈகோ அத எத்துகாது ...அப்படி நினக்கமா தப்பு உங்க perllanna sorry சொல்லலாம் ..தப்பே இல்ல... அப்போ அப்ப எதாச்சும் gift கொடுத்து பாருங்க... அவங்க பிறந்த நாளை அவங்களுக்கு பிடிச்சவங்கள வர சொல்லி கேக் கட் பண்ணி கொண்டாடலாம்...ஆனா சில பேருக்கு இது பிடிக்காது...அந்த மாறி இருந்தா இந்த ஐடியா வ தவிர்த்துடுங்க...பொதுவா gift பிடிக்காதவங்க இருக்க மாட்டாங்க ங்கறது என் கருத்து......

அத மாறி உங்க husband கிட்டயும் உங்க மாமியார் பத்தி குறை சொல்லாதீங்க...உங்க வீட்டுக்குள்ள நடக்குற பிரச்சனைய அம்மாகிட்ட சொல்லாதீங்க...நீங்க இங்க சந்தோசமா இல்லைங்கற து அம்மாக்கு தெரியும் போது தான் உங்க மாமியார் மேல அம்மாக்கு கோபம் வரும்...நீங்க நல்ல relationship ல இருக்கீங்கன்னு உங்க அம்மாக்கு தெரிஞ்சாலே உங்க அம்மாக்கும் மாமியாருக்கும் இருக்குற திரை விலகிடும்....

அப்புறம் வேலைக்கு போறது பற்றி solleruntheenga ... இப்போதைக்கு paapavukaga நீங்க தான வேலை ய veeteenga ...பாப்பா கொஞ்சம் பெருசாகிட்ட திருப்பியும் வேலைக்கு போலாமே...அதுனால இந்த கேப் உங்க மாமியாரோடவும் husband கொடவும் உங்க relationship ப improve பண்ண கிடச்ச ஒரு நல்ல சான்ஸ் நு நினச்சுகொங்க...

இதுக்கெல்லாம் மேலயும் சரி பண்ண முடியாத கேஸ் கள் உண்டு....ஆனா இத ஞாபகம் வச்சுகோங்க...அனுராதா ரமணன் சொன்னது - "மாமியார்கள் சிங்கம் புலி இல்லை."

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அதிகமா படிக்கவோ எழுதவோ நேரம் பத்தலை ஆனால் ஒன்னு சொல்றேன் பெரும்பாலும் வீட்டில் நடப்பது தான் நீங்கள் தனி ஆள் இல்லை..வேறோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுகிறார்கள் அங்கு வேர் பிடிக்க சில வருஷம் ஆகும்..நீங்கள் பக்குவப்படனும் அவங்களும் புது ஆளை ஏத்துக்கணும்..எல்லாத்துக்கும் பொறுமையா இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்..இனியொரு 2 வருஷம் கழிச்சு நினைத்தால் நீங்களே சிரிப்பீங்க ஆனால் அதுக்கு முன் நீங்களா முடிவு பண்ணனும் எது எனக்கு முக்கியம் என்று..என்ன தான் அப்பா அம்மா என்றாலும் செய்யும் கடமையை அவர்களுக்கு செய்துட்டு போயிட்டே இருக்க வேண்டும் அவங்க பிள்ளை கஷ்டப்படுவது அவங்களுக்கு தாங்காது அதனால் மண்டைகாய்ச்சலால் எதாவது சொல்லுவாங்க தலையாட்டிட்டு அடுத்த காதுல விட்டுடுங்க..ஆனால் எப்பவும் நம்ப குழந்தையும் கணவரும் தான் நமக்கு முக்கியம்னு மட்டும் நினைச்சுக்குங்க...உங்க பக்கம் தப்பே இல்லன்னா கூட வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் பாக்காமல் மாமியார் கோபித்தால் மெல்ல போய் நான் செய்தது பிடிக்கைல்லையென்றால் உங்க மனசு கஷ்டப்பட்டிருந்தால் மண்ணிச்சுடுங்கன்னு சொல்லிடுங்க..உங்களுக்கு போனா ஒரு வார்த்தை தான் ஆனால் அவங்க மனசு குளிர்ந்தால் அதனால் பெரிய மாற்றம் வரும்..உங்க அம்மாவிடம் புகுந்த வீட்டில் நடக்கும் நல்லதுகளையும் நீங்க சந்தோஷமா இருப்பதாகவும் மட்டும் சொல்லுங்க கவலையை கொட்டிடாதீங்க.துக்கமான முகத்தோடு இருக்காதீங்க.எல்லாம் சரியாகும்
அடுத்தவரின் உதவி எனக்கு கஷ்டம் அப்படிங்கறதை மனசிலிருந்து விட்டுடுங்க.தோளுக்கு கீழ் உடம்பே செயலிழந்தும் ஆங்கராக வேலை பார்த்த பெண்ணை பார்த்து வியந்து விட்டேன்.."உங்களுக்கு குளிக்க 15 நிமிஷம் போதும் எனக்கு 1 மணிநேரத்துக்கு மேல் வேண்டும் இருவர் என்னை பாத்ரூமுக்கு சுமந்து செல்ல வேண்டும் "என்றார்...என்னை ரொம்ப யோசிக்க வைத்தது.சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிறைய வேலை இருக்கும் சரி தான் .சரியாக நேரம் ஒதுக்கி முடிந்த வேலை செய்யுங்க யார் உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.

தோழிகளின் ஆலோசனையை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்...என் கருத்து என்னவென்றால் மாமியாரின் கோபமான வார்தைகளுக்கு பதில் குடுக்காதீர்கள் அவர்கள் என்னதான் அவமானப்படுத்தினாலும் பொறுமையாய் இருங்களேன்
ஒரு வாரம் இருந்து பாருங்கள் இவளிடம் பேசுவது கல்லிடம் பேசுவது போல் இருக்குதேனு வழிக்கு வ்ந்திடுவார்கள்...இன்னும் சில விடயங்கள் நல்லவிதமாய் கேட்டால் நீங்களும் நல்ல படியாக பதில் கூரிவிட்டு அமைதியாகி விடுங்கள்
சிலர் வீட்டில் குழந்தை பிற்ந்தவுடன் தன் மகன் தன்னை விட்டு விலகி விடுவானோ என்று இவ்வாறாக சில பிரச்சனை ஏற்பட்டு பார்திருக்கேன்...வாழ்வில் இதெல்லாம் சகஜம்,,உங்கல் அம்மாவை மாமியாரையும் அதிகம் சந்திக்க வாய்ப்பு தர வெ/னாம்
நீங்களும் எதயும் கூற் வேணாம்...குழந்தயை கொஞ்சும் போது யாராவது கேட்டால் அவ பாட்டிம்மா,ட்ட் இருக்கா,,,பாட்டிம்மா கொஞ்சிட்டு இருக்காங்க இவ்வாறாக பதில் அள்யுங்கள்...நிச்சயம் நல்ல பலனை சீக்கிரம் சொல்வீர்கள்

இன்னொன்று முக்கியமானதை நினைவில் வைய்யுங்கள்,,,என்னதான் மாமியாரின் மீதே தவறு இருன்ந்தாலும் நீங்கள் சண்டைய்டுவதை பார்த்தால் கண்வர் உங்கள் மீதுதான் கோபப்படுவார்கள்
தன் அம்மா இத்தனை காலம் நம்மை நன்றாக பார்துக்கொண்டவர் இவள் நேற்ரு வந்தவள் இவ்வளவ்வு உரிமை கொண்டாடுக்றாளே என்று மனது நினைக்கத்தான் செய்யும்..இன்னும் உன்கள் மீது அதிக உரிமை இருப்பதால் உங்கள் மீதுதான் கோபப்படுவார்கள்
பெண்கள் காலம் முழுதும் இனி கண்வரோடுதான் வாழ வேண்டும் எனத் தெரிந்து விட்டால் அவ்வீட்டாரோடு முழுமையாக ஒன்ரி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்..யாரிடமுன் பகைமயை உருவாக்கி விட கூடாது...நாமும் அதிக உரிமயாய் எல்லா விடயங்களயும் யாரிடமும் பேச கூடாது...

மேலும் சில பதிவுகள்