பிள்ளைகளின் அறைக்கான சுவரோவியம்

தேதி: November 29, 2011

5
Average: 4.6 (9 votes)

 

போம் ஷீட் (Foam sheet)- விரும்பிய நிறங்கள் (நீலம், சிவப்பு, கரும்பச்சை, மெல்லியபச்சை, டார்க்ப்ரவுன், மெல்லியப்ரவுன், ஆரஞ்சு, பிங்க், பர்பிள்)
சிறிய பூக்கள், தேனீ, லேடி பக் ஸ்டிக்கர்ஸ்
டபிள் ஸ்டிக்கி டேப் (Double sided sticky tape)
கத்தரிக்கோல்

 

விரும்பிய நிற போம் ஷீட்டில் (இங்கு நீலம் பாவித்துள்ளேன்)பேர்ட் ஹவுஸ் போன்று வெட்டி சிவப்பில் கூரைப் போல் வெட்டவும்.
மெல்லிய பச்சைநிற போம் ஷீட்டில் கொடிகள் போலவும், சிறிய இலைகள் போலவும் வெட்டவும்.
பின்னர் சுவரில் பேர்ட் ஹவுஸை ஒட்டி அதன் கீழே சிறிய ப்ரவுன் போம் ஷீட்டில் தட்டு போல வெட்டி ஒட்டி பச்சை கொடிகளையும், இலைகளையும் விரும்பியவாறு ஒட்டி அலங்கரிக்கவும். ஒட்டுவதற்கு டபிள் ஸ்டிக்கி டேப்பை பாவிக்கவும். பின்னர் இதனை அகற்ற வேண்டி வந்தால் சுவரில் இருந்து பிரித்தெடுப்பது சுலபம். சுவர் பெயிண்ட்டும் உரியாது.
மெல்லிய ப்ரவுன் நிறத்தில் நீண்ட துண்டுகள் வெட்டி பேர்ட் ஹவுஸின் அடியில் ஸ்டாண்ட் போல ஒட்டி அதனை சுற்றி படர்ந்திருப்பது போல பச்சை கொடிகளையும், இலைகளையும் ஒட்டவும்.
டார்க் ப்ரவுன் ஷீட்டில் நீண்ட துண்டுகள் வெட்டி ஒரு முனையை கூராக வெட்டவும் - வேலி (பிக்கட் பென்ஸ்-Picket Fence). மெல்லிய பச்சை ஷீட்டில் நீளமாக புற் தரை போலவும் வெட்டவும்.
பின்னர் தரையும் சுவரும் சேருமிடத்தில் சுவரில் இந்த ப்ரவுன் துண்டுகளை வேலியை போல ஒட்டவும். அதனடியில் புற் தரை போல வெட்டிய ஷீட்டை ஒட்டவும்.
டார்க் பச்சை நிறத்தில் தண்டு போலவும், பெரிய இலைகளை போலவும் வெட்டவும்.
பிடித்த நிறத்தில் பெரிய பூக்கள் போல வெட்டவும்.
பின்னர் வேலியின் இடையில் தண்டுகளையும், இலைகளையும் வைத்து சிறிய பூச்செடி போல ஒட்டி பூக்களையும் ஒட்டவும்.
புற் தரையின் மேல் சிறிய பூக்கள் ஸ்டிக்கர்களையும், வேலியின் மேல் லேடி பக்கையும் ஒட்டவும்.
தேனீக்கள் ஸ்டிக்கரை பூவின் மேல் அல்லது பூவின் நடுவில் ஒட்டவும்.
இலகுவாக செய்யக்கூடிய சுவரோவியம் தயார். விரும்பினால் ஓவியத்தின் மேல் சூரியன் போல் கிடைக்கும் மின் விளக்கு பொருத்தி விடலாம். அழகாக இருக்கும். குழந்தைகளின் அறைக்கு அவர்களை கொண்டே செய்யக்கூடிய சுவர் சித்திரம் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்குங்க :) ரூமை விட்டு வெளியே வர மனசு வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப கியூட்டா இருக்கு.

very nice,i like it very much.

ரொம்ப அழகா இருக்கு கோடி சுத்தினாபுல இருக்கது ரொம்ப அருமை by Elaya.G

அழகா இருக்கு குழந்தைகளுக்கானதா செஞ்சி காட்டறது சூப்பரா இருக்கு வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

க்ரேட் நர்மதா.

‍- இமா க்றிஸ்

என் மகளின் அறையை இப்பொழுது தான் செட் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். உங்களின் இந்த கிராப்ட் எனக்கு நல்ல ஒரு ஐடியாவை கொடுத்துள்ளது. அருமை. பாராட்டுக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நர்மதா,

ரியலி க்ரேட்! ரொம்ப அழகா இருக்கு!! பாராட்டுக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பின் அருசுவை டீம் மற்றும் பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இங்கு ஸ்டிக்கி டேப் போடாமலேயே பெரிய போம் ஷீட் சுவரில் ஒட்டிக்கும் - static electricity:)

போன வருஷம் கார்டூன் கரக்டர்ஸ் போட்டிருந்தேன். இம்முறை இப்படி மாற்றியாயிற்று. இதனுடன் சேர்த்து கார்டூன் கரக்டர்ஸ்கூட ஒட்டலாம். ஆண்குழந்தைகளாயின் கார் தீம், ரோபோட் தீம் இப்பிடி அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைக்கலாம்.
அன்புடன்
-நர்மதா :)

ipadi room decorate panna pillaigaluku romba pidikum

its nice one

romba alga panni irukenga..

நர்மதா அழகோ அழகு கொள்ளை அழகு.கண்டிப்பா செய்திடுவேன்