இன்சூரன்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க...

எல்லாரும் சேமிப்பு முதலீடுன்னு நிறைய இங்க பேசிருக்காங்க...

இன்சூரன்ஸ் பத்தி யாரும் பேசின மாதிரி தெரியல ...நான் எனக்கு தெரிஞ்சத உங்களோட ஷேர் பண்ணிக்குறேன்...

இங்க எந்த இன்சூரன்ஸ் யையும் வாங்குங்க...இது நல்ல இன்சூரன்ஸ் கம்பெனி..அது நல்ல இன்சூரன்ஸ் கம்பெனி அப்படினெல்லாம் நான் சொல்ல போறதுமில்ல...நான் ஒரு இன்சூரன்ஸ் agent உம் இல்ல...

என்னென்ன டைப் of இன்சூரன்ஸ் இருக்கு ...எதல்லாம் நமக்கு முக்கியம்...அத பத்தி பேசலாம்...உங்க husbands kke இத பத்தி நிறைய தெரிஞ்சுருக்கும்...எதுவுமே தெரியாதவங்களுக்கு தான் இந்த இழை...

கோமதி எனக்கு அது பத்தி ஒண்ணுமே தெரியாது சொல்லுங்க தெரிஞ்சுக்குறேன்.. எல்லாம் எங்க வீட்டுக்காரங்க தான் பார்த்துக்குறாங்க.. என்ன பே பண்றாங்க கூட புரில.. எப்டின்னு..?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இன்சூரன்ஸ் ன்னா காப்பீடு ன்னு அர்த்தம்..
எல்லாம் நல்லபடியா நடக்கணும்... நூறாயுசுக்கு வாழணும்னு-தான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனா, எல்லாருக்கும் அது கிடைக்காது. அப்படி நீங்க நூறு வருஷம் வாழலைன்னாக்கூட உங்க குடும்பம் கஷ்டப்படாமல் வாழ, உங்களால் வழிசெய்ய முடியும். அதுக்குப் பேருதான் ஆயுள் காப்பீடு!
என்னடா ஆரம்பமே அபசகுனமா இருக்கேன்னு நினகதீங்க;-)!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இன்சூரன்ஸ் ல நிறைய வகை இருக்கு.முதல்ல ஆயுள் காப்பிடு (லைப் இன்சூரன்ஸ்) ன்னா என்னன்னு தெரிஞ்சுக்குவும்.

ஒரு உதாரணத்துக்கு சௌம்யா, மாதவன் ( கற்பனை பேருதான் ப்பா..யாராச்சும் நிஜமா இருந்தா அடிக்க வராதீங்க ப்ளீஸ்) அப்படின்னு ஒரு couple . (கதை மாறி சொன்னா நல்ல புரியும்ல)

சௌம்யா வேலைக்கு போகல.மாதவன் தான் போறாங்க...ரெண்டு அழகான குழந்தைங்க...மாதவன் நல்ல சம்பதிக்கறார்.அதுனால லோன் போட்டு கார் வாங்கிட்டார்.வீடு வாங்கிட்டார்.மாச மாசம் EMI கட்டறார்.பேங்க் ல ஓரளவுக்கு சேர்த்து வச்சுருக்கார்.ஒரு பத்து லட்சம் நு வச்சுக்குவோம்.theedirunnu ஒரு accident ல madavan இல்லன்னு வச்சுகோங்க...(இப்டில்லாம் நடக்க கூடாது...அனா நம்மளே பாக்குறோம் இப்டி நடக்கறதை)...அவருக்கு இருக்குற பேங்க் பலன்சே வச்சுக்கிட்டு சௌம்யா எத்தன மாசம் குடும்பம் நடத்த முடியும்.சரி வேலைக்கு போலாம்ன மாதவன் வாங்கிட்டு இருக்குற சம்பளம் சௌம்யா வுக்கும் கிடைக்குமா? வீடு லோன் கார் லோன் எல்லாம் என்ன பண்றது...?vithallum அத வச்சு வாங்குன கடன்தான் அடைக்க முடியும்.
சொந்த காரங்க yevolo நாள் பாப்பாங்க?ரெண்டும் சின்ன குழந்தைங்க...நாளைக்கு படிக்க வைக்கணும்...கல்யாணம் பண்ணனும்...எல்லாம் சௌம்யா னால் மட்டும் முடியுமா...?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆயுள் காப்பீடுங்கறதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுக்கிறதுதான். அந்தப் பாதுகாப்பைப் போதுமான அளவுக்கு ஒருத்தர் செய்திருந்தார்னா, அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாக் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.

சுதாரிச்சுக்கறதுக்கு அவகாசம் கிடைச்சுடுச்சுன்னா, அந்தக் குடும்பம் தட்டிமுட்டி மேலேறி வந்திடும். அந்த அளவுக்காவது வழி செய்யறதுதான் இன்ஷூரன்ஸ்!

ஆனா, நம்ம நாட்டுல பல பேரு இன்ஷூரன்ஸ்ஸைப் பாதுகாப்புனு பார்க்காம முதலீடாத்தான் பார்க்கிறாங்க. இன்சூரன்ஸ் எடுத்த tax savings கிடைக்குதுன்னு இன்சூரன்ஸ் எடுக்கற jents தான் அதிகம்...

'வருமான வரி வந்துடும்.... அதனால ஒரு பாலிசி போட்டேன்...', 'இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...' -இப்படிப்பட்ட நினைப்புல பாலிசி எடுக்கறவங்கதான் நிறையப் பேர்! இருந்தாலும் இன்ஷூரன்ஸ் எடுக்கறாங்களே... அந்த வகையில சந்தோஷம்தான்!

ஆனா நம்ம குடும்பத்துக்கு நிலம் வாங்குறது, car வாங்குறது , வீடு வாங்கறது , நகை வாங்குறது இன்னும் என்னன்னவோ வாங்குறதுக்கு முன்னாடி ஒரு ஆண் மகன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஆயுள் காப்பிடு எடுக்கறது தான்.ஆண் மகன் தான் எடுக்கனுமa?
இல்ல... ஒரு பெண்ணை நம்பி வயசான அம்மா அப்பா இல்லையா?கல்யாணம் பண்ணி போனாலும் அம்மா அப்பாக்கு உதவும் பெண்கள் எத்தன பேர் இருக்காங்க...அந்த பெண்ணுக்கு எதாவது ஒன்னுன்ன்ன அவங்கள யார் பாத்துப்பா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அதுனால யார் வேண்டுமானாலும் இந்த பாலிசி எடுக்கலாம்.

ஆனா ஒரு குடும்ப தலைவர் தான் பேர்லதான் முதல்ல எடுக்கணும்.தான் பேர்ல எடுக்காம குடும்பத்துல உள்ளவங்க பேருக்கு எடுக்கறது க்கு சில இன்சூரன்ஸ் நிறுவனங்களே விடறதில்ல...

இது ஒன்னும் தப்பும் இல்ல...அவரோட வருமானத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கு...அவருக்கு எதாச்சும் ஒண்ணுன்னா மத்தவங்க கஷ்டபடாம இருகரதுக்குதான் இன்சூரன்ஸ்.

சரி எதாச்சும் அசம்பாவிதம் நடந்தாத்தான் பாலிசி யா ன்னா இல்ல...உங்க குழந்தையோட எதிர்கால படிப்புக்கு , கல்யாணத்துக்கு , இல்ல எதாச்சும் உடம்பு சரி இல்லாம போய் ஹோச்பிடல் ள்ள அட்மிட் ஆகும் பொது வர செலவுக்குன்னு நிறைய பாலிசி இருக்கு...பெண்களுக்கவே நிறைய பாலிசி இருக்கு...நம்ம இப்போ முதல்ல டெர்ம் பாலிசி ன்னா என்னன்னு பார்போம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆயுள் காபிடுல ரெண்டு வகை இருக்கு .

ஒன்னு - காப்பிடு மட்டும் (டெர்ம் இன்சூரன்ஸ்/term insurance )

ரெண்டாவது - காப்பீடும் முதலீடும் சேர்ந்த திட்டம் .இதுக்கு கீழ எண்டோவ்மென்ட் பாலிசி (endowment policy ) , money back policy ,whole life policy இதெல்லாம் வரும்.

எல்லாம் சரி ...பிரிமியம் னா என்னன்னு தெரியுமா????பாலிசி காலம் னா என்னன்னு தெரியுமா

இப்போ நம்ம ஒரு லட்சத்துக்கு ஒரு பாலிசி எடுக்கறோம்.மாதவன் இறந்துட்ட அவர் சௌம்யா வுக்கு ஒரு லட்சம் கிடக்குற மாதரி ..ஒரு பாலிசி க்கு பாலிசி காலம் ன்னு ஒன்னு இருக்கும்.அதாச்சு ஒரு 20 வருஷம் நு வச்சுக்குவோம்.இந்த 20 வருஷத்துல மாதவனுக்கு எதாச்சும் ஆச்சுன்னா சௌம்யா வுக்கு ஒரு லக்ஷம் கிடைக்கும். ஏன் இருவது வருஷம்...அதுக்கப்புறம் மாதவனுக்கு ஒன்னும் ஆகதன்ன அதுக்கு வேற பாலிசி இருக்கு (முழு ஆயுள் காப்பிடு - whole life உக்கும்.மாதவன் எழுபது வயசுல இறந்த கூட சௌம்யா பசங்க தயவுல வாழ வேண்டாம்.மதவனோட பாலிசி பணம் சௌம்யா வுக்கு கிடைக்கும்ல )சரி இப்போ உங்களுக்கு பாலிசி காலம் னா என்னன்னு புரியும் நு நினைகிறேன்.

பிரிமியம் னா இந்த ஒரு லக்ஷம் பாலிசி க்கு நம்ம இன்சூரன்ஸ் கம்பெனி க்கு வருஷ வருஷம் கட்ட வேண்டிய தொகை.இது எந்த விதமான பாலிசி எடுக்கரோமோ அதுக்கு எதாப்புல வேறு படும். ஒரு example க்கு ஒரு லக்சம் பாலிசி எடுத்தீங்கன்னா நீங்க வருஷ வருஷம் அந்த கம்பெனி க்கு ஒரு 350 Rs premium கட்டணும்.

டெர்ம் இன்சூரன்ஸ்/term இன்சூரன்ஸ்
**************************************
காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டத்துக்கு 'டேர்ம் இன்ஷூரன்ஸ்'னு பேரு. இதுல பாலிசி எடுத்தா, காப்பீடு மட்டும்தான். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா... அவர் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையைக் கொடுப்பாங்க. பாலிசி காலம் முழுசுக்கும் நல்லவிதமாக இருந்தார்னா கட்டின பிரீமியம் கிடைக்காது. அதனாலேயே பலருக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்னா பிடிக்காது...!!!!!.புரியுதா...!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அப்புறம் எதுக்கு இந்த பாலிசி...நான் தான் கல்லு மாறி நல்லா இருக்கேனே.. இன்னும் இருபது முப்பது வருஷத்துக்கு எனக்கு ஒன்னும் ஆகாது...எதுக்கு வீணா பைசா பிரயோஜனம் இல்லாம பணத்தைக் கொண்டு போய் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு கொடுக்கணு மான்னு தான கேக்குறீங்க ..

இதுல ரொம்ப முக்கியமாக் கவனிக்கவேண்டிய விஷயம், டேர்ம் இன்ஷூரன்ஸூல பிரீமியம் ரொம்பக் கம்மி. 30 வயசான ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய்க்கு இருபது வருஷத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தா... வருஷத்துக்கு பிரீமியம் சுமார் 320 ரூபாய்தான்! இதே நீங்க மத்த எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தீங்கன்ன ஒரு வருஷத்துக்கு 4500 ருபாய் premium . இப்படி குறைஞ்ச பிரீமியத்துல நிறைய பலன் கிடைக்கும்னா அதை எடுத்துக்கறது நல்லதுதானே?இப்போ மாதவன் இல்லன்ன சௌம்யா வுக்கு குடும்பம் நடத்தவவது ஒரு பத்து லக்ஷமாவது வேண்டாமா?( படிப்பு கல்யாணம் எல்லாம் விடுங்க.)..பத்து லக்ஷதுக்கு premium term இன்சூரன்ஸ் லதான் கம்மிய இருக்கும்.

என்னங்க மாதவனுக்கு ஒன்னும் ஆகலைன்னா கட்டின பணம் திரும்ப வராதுன்னு சொல்றீங்க...அப்புறம் எப்டிங்க அத எடுக்க முடியுனு உங்களுக்கு இன்னும் டவுட்!!!! எனக்கு புரியுது....:-)

எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்த premium அதிகம்.அதுனால மாதவன் என்ன பண்ணுவார்? பத்து லட்சதுகீல்லாம் பாலிசி எடுக்க மாட்டார்.என்ன ஒரு வருஷ premium மே 4600 ருபாய்.அதுனால பத்து லட்சத்துக்கு எடுப்பாரா ? மாட்டார் ? அது இருந்த அவர் home லோன் கட்டலாம்,,கார் லோன் கட்டலாம் னுதான் பாப்பார்.அதுனால ஒரு லக்ஷம் ரெண்டு லக்ஷம் எடுத்துட்டு விட்டுடுவார்.அனா நம்ம sowmikku அது பத்துமா? இதே டெர்ம் இன்சூரன்ஸ் ன்னா 360 x 30 வருஷத்துக்கு கூட 160000 ருபாய் தான். இந்த 160000 மாதவன் நஷ்டம் நு கணக்கு பார்த்தார்னா இந்த முப்பது வருஷத்துல அவர் இல்லாம போகும் போது sowmikku ரெண்டு லக்ஷம் மும் அவர் இறக்கும் வரைக்கும் மாதவன் கட்டின premiumum சேர்த்து தான் கிடக்கும்.

அனா இதையே கணக்கு பார்க்காம ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தார்ன sowmikku எவ்ளோ use ஆகும். புரியுதா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அருமை கோமதி....சூப்பரா இருக்கு உங்க இழை...தெரிஞ்ச விஷயம்தான்னாலும்(என் தம்பியே L.I.Cல டிவிஷனல் மேனேஜர்) தெரியதவங்க நல்லா புரிஞ்சுக்கற மாதிரி சொல்றீங்க....கோ அஹெட்!!

நல்லாருக்கு எல்லார்க்கும் புரியற விதத்துல இருக்கு இன்னும் சொல்லுங்க எல்லா வகைய பத்தியும் எல்லா ப்ளான்ஸ் பத்தியும் எல்லார்க்கும் உதவும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இதுல அஞ்சு வருஷத்திலேர்ந்து முப்பது வருஷம் வரைக்கும் பாலிசிக் காலத்தை நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கிடலாம்.

அனா வயசு கம்மியா இருக்கும் போதே (பாலிசி ஆரம்பிக்கும் போது மாதவன் ஓட வயசு) பாலிசி எடுதொம்னா premium குறைவா இருக்கும்.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கலாம்ங்கறது பாலிசிதாரரோட வருமானத்தைப் பொறுத்தது. பொதுவா, ஒருத்தர் தன்னோட வருஷ வருமானத்தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்துக்கலாம்.அதுக்குள்ள அந்த குடும்பம் கொஞ்சமாவது தாக்கு புடிச்சு மீண்டு வந்துடும்.அதாவது ஒருத்தர் 5 இலக்ஷ ருபாய் வருட வருமானம் இருந்த 5 x 10 ௦= 50 laksha ரூபாய்க்காவது டெர்ம் பாலிசி எடுக்கணும் அவ்வ்ளோவெல்லாம் எடுக்க முடியாதுன்ன அவங்க அவங்க வசதிக்கேற்ப எடுக்கலாம். ஆனா இப்போ இருக்குற வில வாசில ஒரு இருபது லக்ஷமாவது எடுக்கனும்ங்க்றது என்னோட தனிப்பட்ட கருத்து.

அதெல்லாம் முடியாதுங்க...இந்த பாலிசி la கட்டுன பணம் திரும்ப வராதுன்னு சொல்றீங்களே...ஒரு ரூபா ன்னாலும் கஷ்டப்பட்டு சம்பதிச்சதுன்னு சொல்றீங்களா...இப்போ இந்தே டெர்ம் பாலிசி ல ஒரு சின்ன மாற்றம் பண்ணி கொண்டு வந்துருக்காங்க...இதுல நீங்க கட்டுன பணம்(premium ) உங்களுக்கு திரும்ப கிடக்கும்.ஆனா இதுக்கு premium கொஞ்சம் அதிகம்தான் இருக்கும்.சில கம்பெனி full premium மும் கொடுக்க மாட்டாங்க...25 % கொடுப்போம் ன்னு இருக்கும்.அத நம்ம தான் பார்த்து வாங்கணும்.அனா basic டெர்ம் பாலிசி தான் மெயின் ஆ இருக்கு...

ஆனா இந்த பாலிசி பத்தி எல்லோரும் தெரிஞ்சுக்கணும். agents பொதுவா இந்த பாலிசி ய உங்களுக்கு சொல்ல மாட்டாங்க...என்ன அதுல இவங்களுக்கு கிடைக்குற கமிஷன் ரெம்ப குறைவு.உங்க வீட்டுலயும் செக் பண்ணி பாருங்க...டெர்ம் பாலிசி எடுதுருக்காங்கலன்னு ? பொதுவா எண்டோவ்மென்ட் பாலிசி தா எடுதுருப்பங்க...இல்லன்ன சீக்கிரம் எடுக்க சொல்லுங்க....:-)))

இன்னொன்னும் தெரிஞ்சுகோங்க...எந்த பாலிசி யுமே சின்ன வயசுல எடுத்தாத்தான் premium குறைவு.

அதே போல பாலிசி ல nominee ன்னு ஒரு விஷயம் இருக்கும். அதாவது மாதவன் இல்லன்ன அந்த பணம் யாருக்கு போகணும்னு...பொதுவா சில ஆண்கள் பண்ற தவறு...அம்மாதான் எனக்கு எல்லாம்...அம்மா பேர தான் nominee யா போடணும் நு நினப்பங்க...அது தப்பு...உங்க அம்மாவுக்கும் பாதுகாப்பு இருக்கனும்ன தனி பாலிசி எடுத்து கொங்க...என்னa மாதவன் இல்லன்னாலும் அவரோட அண்ணன் இல்ல தம்பி அவர் அம்மா வ பார்த்துப்பாங்க...அனா சௌம்யா வ????

இல்ல ..நான் ஒரே பிள்ளன்னாலும், அம்மாவை தனியா போட்டு ஒரு பாலிசி...wife க்கு ஒன்னு ன்னு கண்டிப்பா எடுக்கணும்.அனா அம்மாக்கு அப்பாவுக்கு வயசான காலத்துல மருத்துவ செலவு தவிர வேற இருக்காது... அனா sowmyavukku குழந்தைங்கள படிக்க வைக்குற பொறுப்பு உம இருக்கு...உங்களுக்கே தெரியும் ...ஒரு பொண்ணு தனியா குழந்தைங்கள வளர்க்கணும்ன ஆகுற செலவு....? பார்த்து போட்டு செயுங்க:-)

டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி உங்களுக்கு நல்லா புரிஞ்சுருக்கும் நு நினக்குறேன்...basics தெரிஞ்சா நம்ம நெட் ல கூட சர்ச் பண்ணி எந்த கம்பெனி ல எடுக்கலாம்னு தெரிஞ்சுக்கலாம்...இல்ல உங்க agent கிட்டே கூட சொல்லி எடுத்துக்கலாம்...

நாளைக்கு வேற பாலிசி பத்தி தெரிஞ்சுக்குவோம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்