தேதி: December 3, 2011
கருப்பு மற்றும் சிவப்புநிற மெகந்தி கோன்
உள்ளங்கைக்கு கீழ் கருப்பு கோனில் ஒரு மாங்காயும், அதன் கீழ் ஒரு பூவும் வரையவும். பூவிலிருந்து ஒரு சுழி வரையவும்.

வரைந்த சுழி முகப்பிலும், மாங்காய் முகப்பிலும் ஒவ்வொரு பூ வரையவும். சுழி ஓரத்தில் பூ இதழ்களை இடைவெளிவிட்டு வரையவும்.

சிவப்புநிற கோனை கொண்டு பூ இதழ்களை ஷேட் செய்யவும். மாங்காயின் உள்ளே விரும்பிய டிசைனை வரைந்து நிரப்பவும்.

மீண்டும் கருப்பு கோனில் இதய வடிவை வரையவும். மாங்காயும், அதன் மீது ஒரு பூவும் வரையவும்.

மீண்டும் சிகப்பு கோனில் பூ இதழ்களை ஷேட் செய்து, மாங்காயில் விரும்பிய டிசைன் மூலம் நிரப்பவும்.

முன்பு போலவே பூ, மாங்காய் வரைந்து, சுழி மற்றும் புள்ளிகள் வைக்கவும்.

சிகப்பு கோனில் மாங்காயின் ஓரங்களில் ஷேட் செய்து நடுவில் புள்ளிகள் வைக்கவும்.

விரலின் நுனியில் பூ வரைந்து சுழி, புள்ளிகள் வரையவும்.

வெறும் பூ, மாங்காய் கொண்டு கை முழுவதும் போட கூடிய அழகான டிசைன். வேறு வேறு விதமாகவும் பூ வரையலாம் அல்லது ஒரே பூவும் வரையலாம். கொஞ்சம் பெரிய பூ, மாங்காய் வரைந்தால் ஷேட் செய்ய எளிதாக இருக்கும்.

Comments
ப்ரியா
ப்ரியா சூப்பர் டிசைன். பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள். தெளிவா போட்ருக்கீங்க/. படங்களும் அருமை.
ப்ரியா, அழகா இருக்கு.பல தடவை
ப்ரியா,
அழகா இருக்கு.பல தடவை நான் முயற்சி செய்திருக்கேன், ஆனா சரியா வரல. இப்போ உங்க குறிப்ப try பண்றேன், வருதா பாக்கலாம்
ப்ரியா
ரொம்ப அழகா இருக்கு பிரியா. வாழ்த்துகள்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ப்ரியா
ரொம்ப அழகா தெளிவா இருக்கு ப்ரியா வாழ்த்துக்கள்
KEEP SMILING ALWAYS :-)
ப்ரியா
ப்ரியா உங்க மெகந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள். இன்னும் இதுப்போல மெகந்தி டிசைன், க்ராஃப்ட் எல்லாம் சொல்லிக் கொடுங்க.
priya
அழகா இருக்கு சூப்பரா இருக்கு வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
பிரியா
ரொம்ப அழகான டிசைன்... ரொம்ப சூப்பரா போட்டும் காட்டி இருக்கீங்க. கலக்கலா இருக்குங்க. வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thank u thank u
குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி...
Meganidi Desing
it is very super and simple . i like it very much . great priya jayaram
dont angry
priya jayaram
அழகா இருக்கு....வாழ்த்துக்கள்..இன்னும் அனுப்புங்க!!!
"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
அன்புடன்,
மலர்.
மிக அழகான டிசைன். ஆனால் நான்
மிக அழகான டிசைன். ஆனால் நான் எப்படி போட்டாலும் அவ்வளவு அழகாக இல்லை.
மெஹெந்தி
டிசைன் அழகாக இருக்கிறது. விரலில் போட்டு இருக்கும் விதம் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
வாழ்த்துக்கள் ப்ரியா!!
கருப்பும் சிகப்பும் சேர்ந்து கலக்கலா இருக்கு!!!!
Eat healthy