BIRTHDAY CAKE

கடைகளில் BIRTH DAY CAKE பல வடிவங்களில் எப்படி செய்கிறார்கள்?CAKE- கிற்கு தேவைபடும் CREAM,COCOA POWDER எந்த பிரிவில் கிடைக்கும்?

அன்புள்ள ரேணுகா!

கேக் செய்ய தேவையான டபிள் க்ரீம் போன்ற க்ரீம் வகைகள் Spinneys-ல் chilled corner-ல் நிறைய கிடைக்கும். Lulu center, Continent போன்ற இடங்களில் கோகோ பவுடர் போன்ற இதர பொருள்கள் brown sugar, castor sugar வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும் கேக் செய்யத் தேவையான உபகரணங்கள் பாத்திரங்கள் உள்ள பிரிவிலும் கிடைக்கும்.

பட்டர் பேப்பர் எப்படி இருக்கும்?கடைகளில் கிடைக்குமா?கேக்கின் மேல் பூப் போட அச்சுக்கள் இருக்கிறதாமே ............அது எங்கே கிடைக்கும்.என்னவென்று சொல்லி கேட்பது?துபாயில் கிடைக்குமா?ஐசிங் சுகர் என்றே வாங்க வேண்டுமா?என்ன பெயரில் கிடைக்கும்.?நான் இது போல் பெயர்களையெல்லாம் கேள்வி பட்டதே கிடையாது.மேலும் எனக்கு புதிதாக ஒன்று செய்ய வேண்டும் என்றால் ஏகபட்ட கேள்விகள் குழப்பங்கள் வரும்.இந்த முறை என்னிடம் கேக் மாட்டிக்கொன்டு பாடாய் படுகிறது.கேக் செய்முறையை யாரும் சமைக்கலாம் பகுதியில் செய்து காட்டுங்களேன்.என் சந்தேகங்களை நேரம் கிடைக்கும் போது போக்குங்கள்.ADVANCED THANKYOU

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கேக் மற்றும் பிஸ்கட் வகைகளை ஒரு சில வடிவங்களில் அமைக்க அச்சுக்கள் உள்ளதா?அவை எங்கு கிடைக்கும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

குக்கரில் கேக் செய்யலாமா?அதை எப்படி செய்வது என்று கூறுங்கள்?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நிறையக் கேள்விகள் கேட்டு இருக்கின்றீர்கள். யாரேனும், ஏதேனும் பதில் கொடுப்பார்கள் என்று நானும் காத்திருந்தேன். கடைசியில் பொறுமையிழந்து நானே பதில் அளிக்கலாம் என்று வந்துவிட்டேன். உங்களது கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடை காணலாம்.

நான் பதில் சொல்ல முடியாத கேள்வி - இவை எங்கே, எந்தப் பிரிவில் கிடைக்கும் என்ற கேள்வி. துபாயில் வசிக்கும் உங்களுக்கு, அங்குள்ள யாரேனும்தான் பதில் அளிக்க வேண்டும். உங்கள் பக்கத்தில் வசிக்கும் திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் இதற்கு ஏற்கனவே பதிலளித்துள்ளார். மேலும் கடை குறித்த விபரங்களை அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்.

சரி, Birthday cake பல வடிவங்களில் எப்படி செய்கின்றார்கள் என்பதை பார்க்கும் முன், நீங்கள் வடிவம் என்று குறிப்பிடுவது எதனை என்று ஒரு சந்தேகம் எழுகின்றது. வட்டம், சதுரம், நீள்வட்டம், செவ்வக போன்ற வடிவங்களில் கேக்குகள் உள்ளதே.. அதனைச் சொல்லுகின்றீர்களா? அல்லது வீடு, கரடி, மீன், மிக்கி மவுஸ் என்று அலங்காரம் செய்கின்றார்களே.. அதுவா..? இரண்டுக்குமே விடை சொல்லிவிடுகின்றேன்.

Base cake அல்லது basic cake என்பதை வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் செய்து கொள்வார்கள். இதுதான் உண்மையான கேக். பிறகு இதனை அலங்கரித்து, கண்ணையும் மனதையும் கவரும் வண்ணம், கிரீம் கொண்டு உருவ வடிவம் கொடுப்பார்கள். இதற்கு கொஞ்சம் அனுபவமும், கற்பனைத் திறனும், சில சாதனங்களும் வேண்டும்.

கேக் வடிவங்கள் செய்வதற்கென்று தனி அச்சுக்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பேசிக் கேக் செய்ய பாத்திரங்கள் உள்ளன. அவற்றை அச்சுக்கள் என்று சொல்வது கிடையாது. பிறகு அந்த கேக்கை விருப்பமான வடிவங்களில் கட் செய்து, கிரீம் அலங்காரம் செய்வார்கள். கட் செய்வதையும் அச்சு கொண்டு செய்வதில்லை. கத்தியால்தான் செய்வார்கள். மேலே செய்யும் கிரீம் அலங்காரங்களுக்கு நிறைய அச்சுக்கள் உள்ளன. அதற்கென நிறைய சாதனங்களும் உள்ளன. Baking தொழிலில் மிக முக்கியமான ஒரு பிரிவு இந்த கேக் அலங்காரம். நிறையப் பயிற்சி தேவை. பெரிய நகரங்களில் பயிற்சி அளிக்க நிறைய மையங்கள் உள்ளன.
<table>
<tr>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_1.jpg" alt="step 1" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_2.jpg" alt="step 2" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_3.jpg" alt="step 3" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_4.jpg" alt="step 4" /></td>
</tr>
<tr>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_5.jpg" alt="step 5" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_6.jpg" alt="step 6" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_7.jpg" alt="step 7" /></td>
<td><img align="center" src="files/pictures/birthday_cake_8.jpg" alt="step 8" /></td>
</tr>
</table>

பிஸ்கட் செய்வதற்கு அச்சுக்கள் நிறைய உள்ளன. செய்வதற்கு என்று சொல்லுவதை விட, கட் செய்வதற்கு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலான பிஸ்கட்கள், மாவைப் பரப்பி அவற்றை அச்சுக் கொண்டு கட் செய்து, தட்டுகளில் அடுக்கி, ஓவனில் வைத்து சுட்டெடுக்கப்படுகின்றன.

<table>
<tr>
<td><img align="center" src="files/pictures/biscuit_1.jpg" alt="step 1" /></td>
<td><img align="center" src="files/pictures/biscuit_2.jpg" alt="step 2" /></td>
<td><img align="center" src="files/pictures/biscuit_3.jpg" alt="step 3" /></td>
</tr>
</table>

அடுத்து ஐசிங் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஐசிங் கிரீம் அலங்காரத்திற்கு மிகவும் முக்கியம். அதனை எப்படித் தயாரிப்பது? ஐசிங் சுகர், வனஸ்பதி, பட்டர் இவை மூன்றையும் 1:1:0.2 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்க வேண்டும். அதாவது ஒரு கிலோ ஐசிங் சுகருடன், ஒரு கிலோ வனஸ்பதி, 200 கிராம் வெண்ணெய் என்று கலக்க வேண்டும். சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் டால்டா இதற்கு நன்றாக இருக்காது. மார்கரீன் (Margarine) என்று super market களில் கிடைக்கும். அதனைப் பயன்படுத்தவும். ஐசிங் சுகர் இல்லையென்றால், சாதாரண சீனியைப் நைசாகப் பொடித்தும் பயன்படுத்தலாம். பின்னர், சுவை மற்றும் மணத்திற்காக வெனிலா எசன்ஸ், கோகோ எசன்ஸ் என உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம். மில்க் மெய்டு (Milkmaid) ம் சேர்ப்பார்கள். பிடித்த வண்ணங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சேர்க்ககூடிய வண்ணப் பொடிகள் அல்லது திரவ வண்ணங்கள் கடைகளில் கிடைக்கும்.

கிரீம் தயாரித்த பின், கோன்களில் நிரப்பி, பிழிந்து, அலங்கரிக்கவேண்டும். இந்த கோன் துணி, பிளாஸ்டிக், பேப்பர் என பல மெட்டீரியலில் இருக்கும். பட்டர் பேப்பரில் கோன் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். எளிதானது, விருப்பம் போல் கையாள முடியும். கோனின் கீழ் உள்ள துவாரத்திற்கான அச்சுக்கள் பல இருக்கின்றன. பட்டர் பேப்பரை கோனாக சுற்றிக் கொண்டு, தேவையான அச்சினை உள்ளே வைத்து, நன்கு இறுகச் சுற்றிக் கொள்ளவேண்டும். பிறகு அதில் கிரீம் நிரப்பி, கேக் மீது பிழிந்து அலங்காரம் செய்யலாம். அச்சு இல்லாமல், பேப்பர் கோனின் கீழ் கூம்பினை கத்தரி கொண்டு பல வடிவங்களில் துவாரங்கள் கட் செய்து, அதன் மூலமாகவும் அலங்காரம் செய்வார்கள். கற்றுக்கொள்ள நிறைய உள்ள ஒரு விசயம் இது.

<table>
<tr>
<td><img align="center" src="files/pictures/baking_cream_1.jpg" alt="step 1" /></td>
<td><img align="center" src="files/pictures/baking_cream_2.jpg" alt="step 2" /></td>
<td><img align="center" src="files/pictures/baking_cream_3.jpg" alt="step 3" /></td>
</tr>
</table>

நீங்கள் பார்த்து இருப்பீர்கள். கேக்கின் மேல் பூக்கள் எல்லாம் வைத்திருப்பார்கள். சற்று கடினமாக, கடித்து சாப்பிட வேண்டியிருக்க வேண்டும். அது கிரீம் கிடையாது. ஐசிங் சுகர், முட்டை வெள்ளைக்கரு (egg white) சேர்ந்த கலவைக் கொண்டு தயாரிக்கப்படுவது. சுகருடன் வெள்ளைக்கருவை கலந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு தயாரித்துக் கொள்ளவேண்டும். பிறகு அதில் சிறிது எடுத்து படங்களில் காட்டியுள்ளது போல் செய்து, இம்மாதிரிப் பூக்கள் தயாரிக்கலாம். இதற்கும் தேவையான வண்ணம் சேர்த்துக் கொள்ளலாம்.

<table>
<tr>
<td><img align="center" src="files/pictures/cake_flower_1.jpg" alt="step 1" /></td>
<td><img align="center" src="files/pictures/cake_flower_2.jpg" alt="step 2" /></td>
<td><img align="center" src="files/pictures/cake_flower_3.jpg" alt="step 3" /></td>
</tr>
<tr>
<td><img align="center" src="files/pictures/cake_flower_4.jpg" alt="step 4" /></td>
<td><img align="center" src="files/pictures/cake_flower_5.jpg" alt="step 5" /></td>
<td><img align="center" src="files/pictures/cake_flower_6.jpg" alt="step 6" /></td>
</tr>
</table>

யாரும் சமைக்கலாம் பகுதியில் வீடுகளில் கேக் எப்படி தயாரிப்பது என்ற செய்முறையை விரைவில் கொடுக்கின்றேன். குக்கரில் கேக் செய்வது குறித்து பிறகு எழுதுகின்றேன். கடைகளில் கேக் செய்யும் முறைகள் படங்களுடன் பழைய அறுசுவைத் தளத்தில் உள்ளது. கீழ்கண்ட முகவரிக்கு சென்று, விளக்கப்படங்களுடன் என்று உள்ளவற்றை பார்வையிடவும்.

<a href="http://www.arusuvai.com/baking/index.html" target="_blank"> அறுசுவை பழையத்தளம் - கேக் பிரிவு </a>

அறுசுவையில் Baking section ல் நிறைய சேர்க்க வேண்டியுள்ளது. கூடிய விரைவில் அவற்றை செய்து முடிக்கின்றேன்.

Sir,

Thanks for giving illustrative answer. It is very useful for me also. Why dont you add this page in the cake section, so that it will be available ever for all the viewers. We would appreciate if you post the cake, cream preparartion and cake decoration in the "Yaarum samaikkalam" section.

அன்புள்ள அண்ணாவிற்கு மிக மிக நன்றி.
நீங்கள் தெளிவாக படங்களுடன் எனக்கு விளக்கியதற்க்கு நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பிஸ்கட்களை அவனில் வைக்க அவனில் வைக்கும் பீங்கான் தட்டுக்களில் வைத்து சுடலாமா?

கேக்கை கேக் செய்யும் பாத்திரத்தில் மட்டும் தான் ஊற்றி அவனில் வைக்க வேன்டுமா?
சமமாக உள்ள பீங்கான் பாத்திரத்தை வைக்க கூடாதா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பயன்படுத்தலாம் என்று சிலர் சொல்லுகின்றார்கள். நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமா என்பது சந்தேகம். மைக்ரோவேவ் ஓவனை விட OTG தான் bake செய்வதற்கு மிகவும் ஏற்றது என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கின்றது. OTG ல் பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்துவது இல்லை. அலுமினிய, துத்தநாக, எவர்சில்வர் உலோகங்கள் அளவிற்கு பீங்கான், கண்ணாடிப் பொருட்கள் சூடு கடத்துவது இல்லை. Baking ல் வெப்ப அளவு முக்கியமானது. அதுமட்டுமல்ல வெப்பம் சீராக எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும். பீங்கான் பாத்திரத்தில் இது சந்தேகமே.

Renuka

U have got so many questions. Thats good. If u really wish to bake then bought required untensils and ingredients like baking powder,soda,vanilla essence. If you have these kinda of things handy then u can start making it. All recipes.com and joyofbaking are good sites to start. But first buy requierd things.

Admin: I don't have any column to type in tamizh. how to don that?

மேலும் சில பதிவுகள்